Tagged: daily verse

இந்நாளின் ஆசீர்வாதம்

இந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை கடவுள் உங்களுக்கு தர ஆவலோடு இதோ உங்கள் அருகில்,உங்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் – மத்தேயு 11:28. இதோ என்னையே உங்களுக்காக கொடுத்தேனே. நீங்கள் விரும்பி கேட்கும் ஆசீர்வாதத்தை தரமாட்டேனா என்னை நோக்கி கூப்பிடும் யாவரையும் நான் ஆற்றி தேற்றுவேன். “நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்” – யோவான் 14 :14. ஜெபம். ————- அன்பே உருவான இயேசப்பா, உம்மிடத்தில் வருகிரயாவரையும் அணைத்து காத்து நடத்தும் தகப்பனே உமக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னை நோக்கி கூப்பிடு,அப்பொழுது நான் உனக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் என்று வாக்கு கொடுத்த இறைவா, உம்மையே நம்பி கூப்பிடுகிறேன். என்னுடைய எல்லா கஷ்டத்தையும் நீக்கி கரம் பிடித்து வழி நடத்தி காத்துக்கொள்ளும். எல்லா துதி,கணம்,மகிமை,உமக்கே  உண்டாகட்டும். கிறிஸ்துவுக்கே புகழ்!  கிறிஸ்துவுக்கு நன்றி ! ஆமென்.

James 5:20

let him know that he who turns a sinner from the error of his way will save a soul from death and will cover a multitude of sins. ~James 5:20

யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 5:20

தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ~யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 5:20

Romans 8:39

nor height, nor depth, nor any other created thing, will be able to separate us from God’s love, which is in Christ Jesus our Lord. ~Romans 8:39

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:39

உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை. ~ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:39