Tagged: Daily message in tamil

ஆண்டவர் நம் பாதைகளை செம்மையாக்குவார். நீதிமொழிகள் 3:6

அன்பும்,பாசமும் நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் அநேக விருப்பங்களும் ஆசைகளும், தேவைகளும் உண்டு. இவைகள் ஒவ்வொன்றும் நமக்கு தேவையானது என்று நம்மை உருவாக்கிய ஆண்டவர் அறிந்து வைத்துள்ளார். ஏனெனில் நாம் அவருடைய உரிமைச் சொத்தும், அவருடைய மந்தையின் ஆடுகளாய் இருக்கிறோம். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் தான் மேய்ப்பான். அவனுக்கு தமது ஆட்டின் பசியை எவ்வாறு போக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவனாயும் இருப்பான். ஒரு மனிதனே இவ்வாறு தமது ஆடுகளை மேய்க்கும் பொழுது நம் ஆண்டவர் நமது ஒவ்வொரு தேவைகளையும் காண்பவர். அதை நமக்கு தருபவர் என்பதில் என்ன சந்தேகம்? நிச்சயம் தருவார். நமக்காக தமது உயிரையே கொடுத்தவர் மீதியானவற்றையும் தர காத்திருக்கிறார். நாம் இருளில் குடியிருந்தாலும் நமக்கு ஒளியை தருபவர் அவரே. நாம் அவருக்கு எதிராக பாவம் செய்யும்பொழுது நம் பாவத்தின் நிமித்தம் நம்மேல் கோபம் கொண்டாலும்,அவருடைய அன்பின் நிமித்தம் தமது கோபத்தை நம்மேல் இருந்து நீக்கி நம்மை மன்னித்து அவருடைய நீதியாலும்,நியாத்தினாலும்,கிருபையாலும்...

ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்

கடவுளின் பேரில் நம்பிக்கை கொண்டு அவரையே தெய்வமாக ஏற்றுக்கொண்டு, கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை பெற்று வாழும் எனக்கு அன்பானவர்களே! உங்கள் ஒவ்வொருவரையும் நானும் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய பெயரால் வாழ்த்துகிறேன். யோவான் 1:12. பிரியமானவர்களே! உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் எதை மற்றவர்களுக்கு செய்ய நினைக்கிறோமோ, அதுவே நமக்கும் கிடைக்கும். நீங்கள் உங்கள் அடுத்திருப்போரை வாழ்த்துவீர்களானால் நீங்கள் கடவுளால் வாழ்த்தப்படுவீர்கள். அதனால்தான் ஆண்டவர் பகைவரிடமும், அன்பு கூருங்கள். உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இதைச் செய்தால் நாம் விண்ணகத்தந்தையின் மக்கள் ஆவோம். மத்தேயு 5:44-45.   உங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் மட்டும் அன்பு செலுத்தினால் அதினால் கைம்மாறு என்ன கிடைக்கும்? இதை உலக மக்கள் யாவரும் செய்கிறார்கள்.நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது? உங்கள் சகோதர,சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வீர்களா னால் நீங்கள் விசேஷித்து செய்த காரியம் ஒன்றுமில்லையே? மத்தேயு 5 – 47. பவுல் எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் கடைசியாக வாழ்த்து கூறி எழுதியிருக்கிறதை காணலாம். விவிலியம்...