Tagged: Daily manna

கடவுள் விரும்பும் திறந்த உள்ளம்

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு...

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக? அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது. இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை...

இறைவனின் உடனிருப்பு

செப்பனியா 3: 14 – 17 இன்றைய முதல் வாசகம், இறைவனின் மீட்புச்செய்தியை அறிவிப்பதாக அமைந்திருக்கிறது. ”மகளே சீயோனே! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி! இஸ்ரயேலே! ஆரவாரம் செய்!” என்கிற வார்த்தைகள், இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அழைப்புவிடுக்கிறது. எதற்காக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? எதற்காக புகழ்ந்து ஆர்ப்பரிக்க வேண்டும்? ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கான தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டு விட்டார். அவர்களுடைய பகைவர்களை அப்புறப்படுத்தினார். அது மட்டுமல்ல. இதுவரை, கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்று சந்தேகம் கொண்டிருந்தவர்களுக்கு, இப்போது கடவுள் அவர்களுடன் தான் இருக்கிறார் என்பதை, உணர்த்திவிட்டார். இறைவன் அவர்களோடு இருந்த நாள் வரை, அவர்கள் எந்தவிதமான பயமும் கொண்டிருக்கவில்லை. எதிரிநாடுகளைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருந்ததே இல்லை. எப்படிப்பட்ட படைபலம் பொருந்திய நாடாக இருந்தாலும், ஆண்டவர் அவர்களோடு இருந்ததால், அவர்கள் எப்போதும் துணிவோடு இருந்தார்கள். யாருக்கும் பயப்படாமல் இருந்தார்கள். ஆனால், இறைவன் அவர்களை விட்டுச் சென்ற நாள் முதல், அவர்களை பயம்...

சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!

மத்தேயு 17:9, 10-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும். 1. கற்பதில் சீர்திருத்தம் நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து...

ஞானம் மெய்யானது !

தன் காலத்து மக்களை இயேசு நன்றாக அறிந்து வைத்திருந்தார். அவர்களிடமிருந்த குறை காணும் மனநிலையையும், எதிர்மறையான பார்வையையும் அவர் தெரிந்திருந்தார். அவற்றைச் சுட்டிக்காட்டி, நேர்மறையாகச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக ;அழைப்பு விடுக்கிறார். இயேசு காலத்தைய யூதர்கள் இயேசுவிடமும் குறை கண்டனர். அவரது முன்னோடியான திருமுழுக்கு யோவானிடமும் குறை கண்டனர். இருவரும் எதிரெதிரான செயல்பாடுகளைக் கொண்டிருந்தனர். ஆனால், இருவரையும் ஒரே விதமாகப் புறக்கணித்தனர். இது அவர்களின் உள்மனக் குறைபாட்டையே எடுத்துக்காட்டுகிறது. ஒருசிலர் மட்டும் திருமுழுக்கு யோவானையும் ஏற்றுக்கொண்டனர். அவர் சுட்டிக்காட்டிய இறைவனின் செம்மறியாம் இயேசுவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் திறந்த மனம் என்னும் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தனர். இவர்களின் செயல்பாடுகள் சான்று பகர்வனவாக இருந்தன. எனவே, இயேசு கூறுகிறார்: ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று. இயேசுவையும், அவரது போதனையையும் ஏற்றுக்கொள்ளும் நாம் நமது சான்று பகரும் செயல்களால் நாம் ஞானம் மிக்கவர்கள் என்பதை எண்பிப்போமாக! மன்றாடுவோம்: ஞானத்தின்...