Tagged: Daily manna

கொடுப்பவர்களாக வாழ்வோம்

தவக்காலம் என்பது நம்மைப் பண்படுத்துகின்ற காலம். நம்மைப் பக்குவப்படுத்துகின்ற காலம். நமது வாழ்வை செதுக்குகின்ற காலம். தவக்காலம் நமக்குக் கற்றுத்தரும் ஒரு முக்கியமான பாடம் ”கொடுத்தல்”. கொடுத்தல் நமது வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டும். கொடுத்தல் இயல்பானதாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்ப்பதாக இருக்கக்கூடாது. நாம் கொடுக்கிறபோது, அது நமக்குள்ளாக வலியை ஏற்படுத்த வேண்டும். வலியோடு கொடுப்பதுதான் உண்மையான கொடுத்தல். இன்றைய நற்செய்தியில் கொடுப்பவர்களுக்கு கடவுள் எப்படி கொடுக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகச்சொல்லப்படுகிறது. மற்றவர்களுக்கு கொடுத்தவர்கள், தாங்கள் கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தோடு கொடுக்கவில்லை. தாங்கள் கொடுத்தால் தங்களுக்கு பிரதிபலன் கிடைக்கும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. கொடுத்தல் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. ஆனால், இடதுபுறம் உள்ளவர்கள் ஏதாவது கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், கொடுத்திருப்போம் என்று சொன்னவர்கள். அது உண்மையான கொடுத்தல் அல்ல. அவர்களுக்குரிய கைம்மாறை அவர்கள் நிச்சயமாகப் பெற்றுக்கொண்டார்கள். கடவுள் கொடுத்த இந்த வாழ்வில் மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே, வாழ்விற்கு நாம்...

சோதனைகள் வெல்வோம் சாதனைகள் படைப்போம்

மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுகிறார். யூதர்களுக்கு மோசே மிகப்பெரிய இறைவாக்கினர். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை ‘புதிய மோசேயாக’ அறிமுகப்படுத்துகிறார். அதாவது திருச்சட்டத்தை நிறைவுசெய்ய வந்த புதிய மோசே தான் இயேசுகிறிஸ்து என்கிற கருத்தியலுக்கு மத்தேயு முக்கியத்துவம் தருகிறார். எனவே தான் மோசேயின் வாழ்வோடு நடந்த நிகழ்வுகளை இயேசுவோடு ஒப்பீடு செய்கிறார். மோசே பிறந்தபொழுது குழந்தையைக்கொல்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டது போல, இயேசுவின் பிறப்பின்போது நடந்த நிகழ்ச்சிகளையும் சூழ்ச்சிகளையும் விவரிக்கிறார். மோசே இஸ்ரயேல் மக்களை பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு வழிநடத்தியதுபோல, புதிய மோசே இயேசுகிறிஸ்துவும் பாவ இருளில் இருக்கிற மக்களை, ஒளிவாழ்வுக்கு அழைத்துச்செல்வதை படிப்படியாக விவரிக்கிறார். அதனுடைய முக்கியமான பகுதிதான் இயேசு அலகையினால் சோதிக்கப்படுகிற நிகழ்ச்சி. சோதனை என்பது எல்லோருடைய வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. அதிலும் குறிப்பாக, நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, கடவுளின் இறையாட்சி இந்த மண்ணில் வர உழைக்கிற ஒவ்வொவருடைய வாழ்விலும் சோதனைகள்...

ஆண்டவரே! உமது வழியை எனக்குக் கற்பியும்

திருப்பாடல் 86: 1 – 2, 3 – 4, 5 – 6, 11a இந்த திருப்பாடல் “தாவீதீன் செபம்” என்று சொல்லப்படுகிறது. இது ஏதோ குறிப்பிட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட திருப்பாடல் அல்ல. மாறாக, அன்றாட வாழ்க்கையில் தாவீது கடவுளோடு பேசக்கூடிய வார்த்தையாக இது நம்பப்படுகிறது. கடவுளின் தயவு, வழிகாட்டுதல், செய்யக்கூடிய எல்லாக்காரியங்களிலும் கிடைக்க வேண்டி பாடப்பட்ட, விண்ணப்பப்பாடல் தான், இந்த திருப்பாடல். இந்த திருப்பாடலை நாம் தியானிக்கிறபோது, வெறும் உதடுகளால் மட்டும் வார்த்தைகளைச் சொல்லாமல், உள்ளத்தோடு இணைந்து, கடவுளிடத்தில் வேண்டுதலை எழுப்ப வேண்டும். ஒவ்வொருநாளும் நமது வாழ்க்கையில் புதிய நாளைத் தொடங்குகிறபோது, கடவுளிடம் இந்த திருப்பாடலைச் செபித்து, அவருடைய வழிநடத்துதலைக் கேட்கலாம். ஒவ்வொருநாளும் பல முடிவுகளை நமது வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். படிக்கிற மாணவர்கள் முதல் வீட்டில் இருக்கிற பெரியவர்கள் வரை, ஒவ்வொருவரும் முடிவு எடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார். அந்த முடிவுகளை...

நோன்புடன் காத்திருப்போம்

மத்தேயு – 9 : 14-15 இத்தவக்காலம் நமக்குத் தரப்பட்டதன் நோக்கமே நாம் நம் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே. இயேசுவின் பாடுகளையும் அவரது இறப்பையும் நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டிய காலம். அவரின் பாடுகளோடு நம்மை ஐக்கியப்படுத்துகின்ற காலம். அவரோடு ஐக்கியமாக இன்னும் கூடுதல் ஆற்றல் தேவைப்படுகின்றது. இவ்வாற்றல் நோன்பிருத்தலில் கிடைக்கிறது. ஒருசந்தியும், நோன்பும் சமயச்சடங்குகளின் ஓர் அங்கமாகவே யூதர்களிடம் இருந்தது. அவர்களின் நோன்புகள் வெறும் வெளிச்சடங்குகளாயின. சிலர் பிறரிடம் புகழையும் பெயரையும் பெற வேண்டும் என்பதற்காகவே நோன்பிருந்தனர். இதனைச் சாடும் விதமாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றது. நோன்பிருக்க அடிப்படையில் ஒரு காரணமும், ஒரு காலமும் தேவைப்படுகிறது. இதனை இன்றைய வாசகத்தில் இயேசு இன்னும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இன்றைய நற்செய்தியில் அவர் இவ்வாறு கூறுவதன் மூலம் அவர் பழைய உடன்படிக்கைக்கு எதிராகச் செல்லவில்லை. மாறாக அதனை இன்னும் அர்த்தமுள்ளதாக்கி நிறைவு செய்கிறார். அவரே புதிய ஏற்பாடாகவும், புதிய...

இழப்பதில் பெறுகிறோம்

லூக்கா 9:22-25 நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வு, நம்மை நாமே பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காக அல்ல. பிறருக்கும் கடவுளுக்கும் ஈந்தளிப்பதற்காகவே என்ற சிந்தனைக்காக இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. பிறருக்காக வாழ்தல் மனித இனத்திற்கு மட்டுமே சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் பிறருக்காகவே பிறக்கின்றன அல்லது தோன்றுகின்றன எனலாம். பிறர்க்காகப் பிறந்த நாம் மட்டுமே, அனைத்தையும் நமக்காக சேர்த்து வைக்கின்றோம் என்ற எண்ணத்தில் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு மாறாக ஒரு நபர் தன் உயிரையும் உடமையையும் பொருட்படுத்தாமல் எதையும் சேகரிக்காமல் பிறர்க்காகவும், இந்த குமூகத்திற்காகவும் உழைத்தார் என்றால், அவர் உடல் காலமாகினாலும் அவரது உயிர் காலாவதியாகாமல்; மக்கள் மனதில் நின்று என்றும் வாழ்வார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் இழப்பதை வேறு வாழ்வில் பெற்றுக் கொள்கிறார் எனலாம். இவ்வாறு பிறர் நலத்திற்காக நாம் உழைக்க முன்வரும் பொழுது நமது சுயபற்று ஐம்புலன்களின்...