Tagged: Daily manna

ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது

திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 (21a) நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது அதிகாரத்தில், தந்தையின் ஆசீர்...

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று

திருப்பாடல் 118: 1 – 2, 4, 22 – 24, 25 – 27a, (22) ஒரு கட்டிடத்தை ஒன்றிணைக்கக்கூடியதாக இருப்பது மூலைக்கல். அந்த கட்டிடத்திற்கு அடித்தளமாக இருப்பது இந்த மூலைக்கல் தான். எசாயா 28: 16 சொல்கிறது: ”சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன். அது பரிசோதிக்கப்பட்ட கல். விலையுயர்ந்த மூலைக்கல். உறுதியான அடித்தளமாய் அமையும் கல்”. இங்கே ”மூலைக்கல்” என்கிற வார்த்தை நமக்கு தரக்கூடிய பொருள், இது ஒரு கட்டிடத்தின் முக்கியமான கல் என்பதாகும். இஸ்ரயேல் மக்கள் தான், இந்த உலகத்தின் மூலைக்கல் என்று கடவுள் சொல்கிறார். ஏனென்றால், வலிமை வாய்ந்த அரசுகள் இருந்த காலக்கட்டத்தில், இஸ்ரயேல் மக்கள் சாதாரணமானவர்களாக இருந்தனர். இந்த உலகத்தின் பார்வையில் சாதாரண கல்லாகக் கிடந்தனர். ஆனால், கடவுள் அவர்களை அடிப்படையாக வைத்துதான், மீட்பின் திட்டத்தை தயாரிக்கிறார். அவர்கள் வழியாகத்தான் மீட்பைக் கொண்டு வர முடிவு செய்கிறார். இந்த திருப்பாடல் ஓர் உருவகமாக...

கலக்கத்தைக் கலகலப்பாக்க!

(லூக்கா 24 : 35-48) அகக்கண்கள் திறந்திருந்தாலும் அவர்களின் மனக்கண்கள் மூடியே இருந்தன. இதுவரை ஒருவருக்கும் இருவருக்குமாய் தோன்றி தன்னை வெளிப்படுத்திய ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அனைவரும் குழுமியிருக்க அங்கே தன் உயிர்ப்பின் மாட்சியை வெளிப்படுத்துகிறார். அவர் இறப்பினைப் பற்றி முன்னறிவிக்கும் போது புரியாதவை இப்பொழுது மட்டும் என்ன புரியவா போகின்றது? இது இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இயேசு உயிர்ப்பினைப் பற்றி அவர்கள் உணர கடும் பாடுபடுகிறார். இந்த சிரமத்தை அவர் இறப்பதற்கு முன்பாக எடுக்கவில்லையே! காரணம், இயேசு இறந்துவிட்டதால் சீடர்கள் அனைவரும் கலக்கமும், பீதியும் அடைந்திருந்தார்கள். வாழ வேண்டுமா அல்லது யூதாசினைப் போன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா அல்லது பேதுருவைப் போல அதிகார வர்க்கத்தினருக்குப் பயந்து இயேசுவை மறுதலிக்க வேண்டுமா என்றெண்ணி கூனிக்குருகி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார் என ஆங்காங்கே கேள்விப்படுவதைக் கேட்டு இவர்களின் கலக்கம் குழப்பமாக மாறியது. இது இவர்களுக்கு இன்னும்...

இருளினை அவரின் அருளால் …

(யோவான் 20 : 11-18) கிறித்தவர்களின் உண்மையான முகத்தைப் பார்க்கும் போது இயேசு கிறித்து உயிருடன் எழுந்தார் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறாhர் – கடவுள் மறுப்பாளர் பிரடெரிக் நீட்சே. இயேசுவை அதிகமாக அன்பு செய்தவர்களில் மகதலென் மரியாவுக்கு சிறப்பான இடம் உண்டு. அப்படிப்பட்டவர்க்கு எப்படி இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை? தோட்டக்காரர் என்று எப்படிக் கூறுகின்றார்? இந்தக் கேள்விகளுக்கு இருபதாம் பிரிவின் முதல் இறைவார்த்தைப் பதிலாக அமைகின்றது. “இருள் விலகும் முன்பே”. இங்கே “இருள்” என்ற ஒற்றைப் பதத்தை நேரடியான மற்றப் பொருள் பொதிந்த பதமாகவே நான் பார்க்கிறேன். யோவான் நற்செய்தியாளரது, வார்த்தைகளின் ஆழம் அளப்பரியது என்பதை நாம் அறிவோம். இந்த “இருள்” தன் அன்பரை இழந்துவிட்டேன் என்ற கவலையினாலும் கண்ணீராலும் வந்த இருள். ஆண்டவர் இயேசு இறந்து விட்டார் என்ற அறியாமையினால் வந்த இருள். மூன்றாம் நாள் அவரின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாமல் அவரின் சடலத்தை...

தேடலின் விடை

மத்தேயு 28: 6-15 திகிலுற்றுக் கிடந்த அனைவருக்கும் இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. முடங்கிக் கிடந்தவர்கள் அனைவரும் முடுக்கி விடப்பட்டனர். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியைப் பரப்ப ஒருபுறம் சமுதாயத்தால் மதிக்கப்படாத பெண்கள் ஓடுகின்றனர். மறுபுறம் அவர் உயிர்ப்பின் செய்தியை சோற்றுக்குள் மறைக்கப்பட்ட பூசணிக்காயைப் போன்று மறைத்துவிட அதிகார வர்க்கத்தினர் ஆட்களை அனுப்புகின்றார்கள். பலவீனமான பெண்கள் ஒருபுறம், படைக்கவசங்களுடன் பலம் வாய்ந்த படைவீரர்கள் மறுபுறம். உண்மையைக் கையில் எடுத்துக் கொண்டு அன்பினால் இயக்கப்படும் பெண்கள் ஒருபுறம். கையூட்டுக் காசினைப் பெற்றுக் கொண்டு உண்மையினை மூடி மறைக்க எண்ணும் கூட்டம் மறுபுறம். அவர்களுக்குத் தெரியவில்லை இருளை விரட்டியடிக்க சிறு தீக்குச்சியே போதுமென்று. உண்மை மலையின் மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கினைப் போன்றது. விளக்கினைத் தேடும் விண்மினிப் பூச்சிகள் ஒவ்வொன்றும் ஒளியினால் ஈர்க்கப்படும். தேடலின் விடை ஒளியில் மட்டுமே கிடைக்கும். உலகின் ஒளியை நாமும் வேட்கையோடு தேடினால் ஒளியை அடைந்து விடுவோம். திருத்தொண்டர்...