Tagged: Daily manna

நம் உடன்பிறந்தார் தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னிப்போம். மத்தேயு 18:35

அன்பும், பாசமும் நிறைந்த என் உடன் பிறவா சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் நமக்கு அவரின் அன்பின் மேன்மையை உணர்த்தி நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு சொல்லி வைத்திருக்கிறார். நாமும் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடப்போமானால் நிச்சயம் இந்த உலகில் ஒரு வெற்றி உள்ள வாழ்வை வாழ்ந்து அவர் மகத்துவத்தை நாமும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தவக்காலத்திலும் நாம் தினந்தோறும் ஆலயம் செல்லலாம், திருப்பலியில் பங்கு பெறலாம். நம்முடைய மனசாட்சியை சோதித்து பார்ப்போம். அவற்றை ஒழுங்காக கடைப்பிடிக்கும் நாம் நம் சகோதர, சகோதரிகளிடம், நம் பெற்றோர்களிடம், நம் பிள்ளைகளிடம், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், நம் நண்பர்களிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? கடவுளின் விருப்பப்படி செயல்படுகிறோமோ? அல்லது வெளியில் அவர்களோடு பேசி நம் உள்ளத்தில் அவர்களை வெறுக்கிறோமா? என்று நம்மை நாம் ஆராய்ந்துப் பார்ப்போம். நம் மனசாட்சி நாம் செய்யும் காரியத்தை குற்றம் உண்டு, குற்றம் இல்லை என்று நமக்கு தீர்ப்பு வழங்கும்....

ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள். ஏசாயா 34:16.

பிரியமான சகோதர,சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும் அது வேதத்துக்கு அடுத்ததாகத்தான் இருக்கும். ஏனெனில் வேதப்புத்தகம் பல்வேறு காலக்கட்டத்தில் கடவுளின் தூண்டுதலால் தூய ஆவியால் நிறைந்து நமக்கு எழுதி தரப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் மூலம் கடவுள் நம்மோடு பேசுவார். கடவுள் நம்மோடு பேச வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தினமும் மறைநூலை ஆய்ந்து படிக்கவேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு.இது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல. 2 பேதுரு 1:21. ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்: எதுவுமே தனித்து விடப்படுவதில்லை. துணையின்றி எதுவும் இருப்பதில்லை. ஏனெனில்,ஆண்டவரின் வாய்மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது. எசாயா 34:16. இது ஓர் அறிவுக் களஞ்சியமாகும். தினம், தினம் படிக்க படிக்க புதிதாய் நம்வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும்.உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லும் அளவுக்கு நீங்கள் அறிவிலும், ஞானத்திலும்,சிறந்து விளங்க செய்யும். மனிதனால்...

உங்கள் கண்ணீரை கண்டேன்

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் தூயவரும், நம் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: பயனுள்ளவற்றை நமக்கு கற்பித்து நாம் செல்லவேண்டிய வழியில் நம்மை நடத்தும் கடவுள் நம் கண்ணீரை ஆற்றி, நம் நிறைவாழ்வை ஆற்றைப்போலும், நமது வெற்றியை கடலலைபோலும் பாய்ந்து வரும்படி செய்து நம் வழிமரபினர் மணல் அளவாயும், நமது வழித்தோன்றல் கதிர்மணிகள் போலவும் நிறைந்திருக்க செய்து அவர் திருமுன் நம்மை வைத்து பாதுகாப்பதாக சொல்கிறார். வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார் எசாயா 49:13. அரியணையில் வீற்றிருக்கும் நமது ஆண்டவர் நம்மை பாதுகாத்து பசியோ, தாகமோ நம்மை தாக்காமல் அவரே நம்மை மேய்த்து வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்தி சென்று நம் கண்ணீர் யாவையும் துடைப்பேன் என்கிறார். திருவெளிப்பாடு 7:15,17. இரவும், பகலும் நமக்காக அவரின் தந்தையிடம் ஜெபித்து நமது விருப்பங்களை நினைத்து நம் கண்ணீரை...

நம்மை வழிநடத்திச் செல்பவர் நம் கடவுளாகிய ஆண்டவரே! இ.ச 9:3.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் நம்மை ஒவ்வொருநாளும் ஆசீர்வதித்து கரம் பிடித்து வழிநடத்தி செல்லவேண்டுமானால் நாம் அவரை அதிகாலையில் தேடவேண்டும். எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன். என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள் என்று நீதிமொழிகள் 8:17 ல் வாசிக்கிறோம். ஒரு நண்பரையோ, அல்லது உறவினர்களையோ நமக்கு பிடித்த நபர்களை காணவேண்டுமானால் நாம் எவ்வளவோ நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கிறோம். ஆனால் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய கடவுளுக்கு நாம் எவ்வளவு நேரத்தையும், பணத்தையும் கொடுக்கிறோம் என்று யோசித்துப்பாருங்கள். ஏனெனில் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் கடவுளின் கையில் உள்ளது. அவரே நம்முடைய எதிரிகளின் கையினின்றும் நம்மை துன்புறுத்துவோரின் கையினின்றும் விடுவிக்கிறார். திருப்பாடல்கள் 31:15. கடவுளிடம் அடைக்கலம் புகுந்துள்ளோர் ஒருபோதும் வெட்கமடைய விடமாட்டார்.நம் துன்பத்தை பார்த்து இருக்கிறார்.நமது இக்கட்டுகளை அறிந்திருக்கிறார்.என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது. ஆம்,என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது. துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது: என் எலும்புகள் தளர்ந்து போகின்றது திருப்பாடல்கள் 31:10ல் வாசிப்பது...

பயப்படாதே,[அஞ்சாதே]நான் உங்களுடன் இருக்கிறேன்.எசாயா 43:5.

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். வேதத்தில் 365 நாட்களுக்கும் 365 பயப்படாதே என்ற வார்த்தை இருக்கிறது. இது எதை குறிக்கிறது என்றால் நாம் ஒவ்வொருநாளும் பயப்படாமல் இருக்கும்படி நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நாமும் இந்த வார்த்தையை பயன்படுத்தி ஜெபம் செய்து தைரியம் உள்ளவர்களாக மாறுவோம் நானும் எதற்க்கெடுத்தாலும் பயந்த சுபாவத்துடன் இருந்தேன். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை தினமும் வாசித்து தியானிக்கும் பொழுது என் பயம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன், கலங்காதே, நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன். என் நீதியின் வலது கரத்தால் உன்னை தாங்குவேன். எசாயா 41:10 ல் வாசிக்கலாம். நம்மை உண்டாக்கியவரும், நம் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கியவரும் நமக்கு உதவி செய்பவரும் அவரே. நான் தேர்ந்துக்கொண்ட எசுரூன் பயப்படாதே நீ அவமானதுக்குள்ளாக மாட்டாய்: வெட்கி நாணாதே. இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய் உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன்...