Tagged: Daily manna

கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்மை மீட்பார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு மார்ச் மாதம் முழுதும் நம்மோடு கூடவே இருந்த நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்து ஒரு சேதமும் நம்மை தாக்காதபடிக்கு காத்து வந்திருக்கிறார். அவருக்கு நமது நன்றியை நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தெரிவித்து,அவர் பாதம் பணிவோம். இதுபோல் வருகிற ஏப்ரலிலும் நம்மை காத்து வழிநடத்த வேண்டுமாய் அவரிடத்தில் கெஞ்சி மன்றாடுவோம்.ஏனெனில் நாம் ஒவ்வொரு நாளும் இந்த உலகில் வாழ்வது ஆண்டவரின் கிருபையே.நாம் செய்தி தாளில் வாசித்து பார்ப்போமானால் ஒருநாளில் எவ்வளவு விபத்து நடக்கிறது என்று நாம் யாவரும் அறிந்த ஓன்று. ஆனாலும் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாதபடிக்கு காத்து வந்த தேவனை மனதார ஸ்தோத்தரித்து நன்றிபலி ஏறெடுப்போம். நான் இன்று உயிரோடு இருப்பது ஆண்டவரின் மேலான கிருபையே. கடந்த மார்ச் 18ம் தேதி நான் என் கணவருடன் பைக்கில் சென்று கொன்று இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவு ஒரு பெரிய விபத்து நேரிட இருந்தது....

கடவுளின் ஆட்சியையும்,அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவோம். மத்தேயு 6:33.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நமது கடவுளின் ஆட்சியை தேடுவோமானால் அவரும் நம்முடைய சுகவாழ்வுக்கு கட்டளையிடுவார். ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து முதலாவது அவரை தேடி நம் தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை நாம் நடக்க வேண்டிய வழியில் வழிநடத்துவார். நம்முடைய தேவைகள் யாவையும் சந்திப்பார்.இப்படிச் செய்வதால் நாமும் விண்ணகத் தந்தையின் மக்களாக ஆவோம். நாம் வேண்டுவது யாவையும் நமக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். நமக்குள்ளதை பிறர்க்கு பகிர்ந்து கொடுப்போம்.நம்மால் ஆனா உதவிகளை பிறர்க்கு செய்வோம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று அன்பு செய்து உதவிகளையும் செய்தார். நாமும்  அவ்வாறு நடப்போம். நாம் உயிர் வாழ எதை உண்பது எதை குடிப்பது? என்று கவலைப்படத்தேவையில்லை. உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தது அல்லவா? வானத்து பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.நமது தந்தை அவற்றுக்கு உணவு அளிக்கிறார். அவற்றைவிட நாம் மேலானவர்கள் அல்லவா!நமது...

நம்முடைய தேவைகளை அறிந்து வைத்திருக்கிறார்

அன்பார்ந்த சகோதரர்,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான காரியங்கள் தேவைப்படுகிறது. பணத்தேவை, பொருளாதரத்தேவை, வீடு தேவை, நம்மை நேசிக்கும் அன்புள்ளங்கள் தேவை, நம் கவலைகளை பகிர்ந்துக்கொள்ள நல்ல நண்பர்கள் தேவை, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். சில வீடுகளில் பணம், பொருளாதாரம இருக்கும்.ஆனால் அதை அனுபவிக்க அவர்களால் கூடாது போகலாம். நல்ல சுகம் இருக்கும், அவர்கள் பசியாலும், பட்டினியாலும் துன்பப்படுவார்கள். ஆனால் நம்முடைய தேவன் நம் மேல் மனதுருகி இந்த மாதிரியான கஷ்டங்களில் இருந்து நம்மை பாதுக்காக்க வல்லவராய் இருக்கிறார். அவரை நோக்கி கூப்பிடும் யாராயிருந்தாலும் இவைகளில் இருந்து விடுவிக்கப்படுவர். ஒருபோதும் தம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை ஆண்டவர் விரும்பமாட்டார் . கடவுள் தம்முடைய பிள்ளைகளுக்கு யார் மூலமாவது உதவிகளை அனுப்புவார். இதை வேதத்தில் நாம் நிறைய இடங்களில் வாசிக்கலாம். எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது: நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரவேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா...

நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருப்போம்

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர் ,சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள். பிரியமானவர்களே! விண்ணையும், மண்ணையும் படைத்த நம்முடைய கடவுள் அதை ஆள்வதற்கு மனுஷனையும் படைத்து இந்த பூமி முழுதும் நிரம்பும்படி செய்து அவர்களை இந்த பூமியை ஆண்டுக்கொள்ளும் படியும் செய்து,நம் அனைவருக்கும் ஒரே கடவுளாய் இருந்து நம்மை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக வரும் நம்முடைய முன்னோர்களின் உடன்படிக்கையை காத்து நடந்து கடவுளின் திருமுன் குற்றமற்றவர்களாய் நிற்கும்படி இந்த நாளில் உறுதி எடுத்து நம்முடைய சகோதரர் சகோதரிகளுக்கு துரோகம் ஏதும் செய்துவிடாதபடி ஆண்டவரின் முன் நிற்க நம்மை தகுதிப்படுத்தி,ஒரே இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாய் முன்னே தூரமாய் இருந்தவர்களும் இப்போது அவரின் பிள்ளைகளாய் ஓன்று கூடி அவர்முன் நம்மை தாழ்த்தி அவர் பாதம் பணிந்திடுவோம். நாம் யாவரும் ஆண்டவரின் ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்படிந்து நடந்து அவர் நம்மோடு செய்துக்கொண்ட உடன்படிக்கை, வாழ்வும்அமைதியும்,தரும் உடன்படிக்கை யாவையும் காத்து நடக்கவே நமக்கு அறிவை அளித்திருக்கிறார்.மெய்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை: அவன் என் திருமுன் அமைதியோடும்,...

கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுவோம்.எபேசியர் 6:6

கர்த்தருக்குள் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்முடைய எல்லா வேண்டல்களையும், மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்பி கிறிஸ்துவின் பணியாளர்களாய் செயல்பட்டு கிறிஸ்து எப்படி தான் ஒரு தெய்வ குமாரனாய் இருந்தும் தனது தந்தைக்கு எல்லா காரியங்களிலும் கீழ்படிந்து வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்றினாரோ நாமும் அதைப்போல் எல்லாக்காரியத்திலும் கிறிஸ்துவைப்போல் செயல்பட்டு கடவுளின் திருவுளத்தை அறிந்து அதன்படியே வாழ்ந்து அவரின் சித்தத்தை நிறைவேற்றுவோம். அப்பொழுது நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளிலும் இருந்து நம்மை பாதுகாத்து, காப்பாற்றி நம் தேவைகளையும், நாம் விரும்பும் எல்லாவற்றையும் கொடுத்து நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். நாம் வாழும் இந்த உலகத்தில் பலவிதமான கஷ்டங்களையும், இன்னல்களையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவக்கிறோம். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இல்லை என்று சொல்லும் ஒருவராகிலும் கிடையாது. ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீயஆவிகள் ஆகியவற்றோடும் போராடி வாழ்கிறோம். ஆகையால் நாம் கடவுளோடு இணைந்து அவர் தரும் வல்லமையாலும்,...