Tagged: Daily manna

ஆண்டவர் நம்மை என்றென்றைக்கும் கைவிடவே மாட்டார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்மை ஆண்டவர் நமது எல்லாத்தேவைகளையும் சந்தித்து நம்மை அவருடைய இறக்கைகளின் மறைவில் மறைத்து காத்து, நாம் போகையிலும், வருகையிலும் நம்மோடு கூடவே இருந்து நம்மை என்றென்றைக்கும் கைவிடாமல் காப்பார். அதற்கு நாம் நமக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய் நம்முடைய கண்களை ஏறெடுப்போம். அப்பொழுது விண்ணையும், மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்து நமக்கு உதவி வரும். நம்முடைய கால் இடறாத படிக்கு பார்த்துக்கொள்வார். நம்மை காக்கும் தேவன் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதுமில்லை, ஆண்டவரே நம்மை காக்கின்றார். நம் வலப்பக்கத்தில் உள்ளார். அவரே நமக்கு நிழலாய் இருக்கிறார். பகலில் கதிரவனும், இரவில் நிலாவும், நம்மை தீண்டாது. ஆண்டவர் நம்மை எல்லாத் தீமையிலிருந்தும் பாதுக்காப்பார். அவரே நம் உயிரையும் காத்திடுவார். பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கி யிருப்பதுபோல நாமும் ஆண்டவர் நமக்கும் இரங்கும் வரை அவரையே நோக்கியிருப்போம். அப்பொழுது ஆண்டவர் நம்மேல் மனதுருகி நம் வேண்டுதலை...

நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் ஆண்டவரிடமே உள்ளது

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! வாழ்வு தரும் உணவாக வந்த நம் ஆண்டவர் அவரையே தியாகப்பழியாக நமக்கு கொடுத்து நம்மை இந்த உலகத்தில் வாழும் நிலையில்லாத வாழ்விலிருந்து மீட்டு என்றென்றும் அவரோடு கூடவே வாழும் நிலையான வாழ்வை நாம் பெற்றிட இந்த பூமிக்கு இறங்கி வந்து நம்முடைய கவலைகள்,கஷ்டங்கள் யாவையும் நாம் மறந்து அவரோடு சந்தோஷமாக இருக்கும்படி தம் உடலாகிய மன்னாவை நற்கருணை வாயிலாக நமக்கு அளித்து,அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற்றுக்கொள்ள வேண்டுமாய் தமது பிதாவின் திருவுளத்தை அப்படியே நிறைவேற்றி இன்றுவரை நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார். இனிமேலும் வழிநடத்துவார். நற்கருணை என்பதை ஒரே வரியில் சொல்வோமானால் அது ஆண்டவரின் உயிருள்ள பிரசன்னம் என்று சொல்லலாம். அதை வாழ்வுதரும் உணவாக புசிக்கும் நாம் எல்லாவற்றிலும் அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து நம்முடைய செயல்கள் யாவும் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்கும்படி நடந்துக்கொள்ள வேண்டும். கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல் ஆகும். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு இயேசுவே! இந்த உணவை எவராவது...

கடவுள் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தை அறிந்தவர்.

அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த சகோதர, சகோதரிகளுக்கு, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாளிலும் நம்முடைய ஆண்டவராகிய தேவன் நம் ஒவ்வொருவரின் இருதயத்திலும் வாசம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்று வேதம் சொல்கிறது. நாம் இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாய் வாழ்ந்தோமானால் ஆண்டவர் நம் இதயத்தில் வந்து தங்குவார். நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கு அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாங்களையும் கைக்கொண்டு நம்முடைய இதயத்தை அவரிடத்தில் சமர்ப்பிப்போம். ஆண்டவரே கடவுள்: வேறு எவரும் இல்லை என்று உலகில் வாழும் எல்லா மக்களும் அறிந்து கொள்ள வேண்டுமாய் மனிதனின் இதயத்தில் வாழ விரும்புகிறார். ஆனால் நாம் அவரை கண்டு கொள்ளாமல் நமது விருப்பப்படி நடந்தால் அவரும் நம்மை கண்டு கொள்ளாமல் இருப்பார். சிலவேளைகளில் கண்டித்து உணர்த்துவார். அப்பொழுதும் நம் இதயத்தை கடினப்படுத்துவோமானால்  அவர் நம்மை விட்டு விலகிடுவார். நமக்கு கிடைத்த பொக்கிஷத்தை நழுவ விடாமல் காத்துக்கொள்வோம். ஏனெனில் நமது இதயத்தில் எண்ணங்களும்,...

தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறிய நமக்கு அருளப்பட்டது.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்தநாளிலும் ஆண்டவர் நமக்கு அருளிய அவருடைய மகிமையின் ராஜ்யத்தை நாம் அலட்சியம் செய்யாமல் அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து, பயந்து நடந்து அந்த ராஜ்யத்தில் பங்குபெறும் பேற்றை அடைவோமாக. ஆண்டவரைப்பற்றி அறிந்தும் அவரை ஏதோ கோடி தெய்வத்தில் அவரும் ஒருவர் என்று இல்லாமல், அவர் ஒருவரே தெய்வம் என்று உணர்ந்தவர்களாய் செயல்படுவோம். எவ்வளவோ பேர்கள் அறிந்தும் அலட்சியம் செய்வதுபோல் நாம் இல்லாமல் அவர் காட்டும் வழியில் நடந்து அவருக்கே மகிமை உண்டு பண்ணுவோம். கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துக கொள்ளாமலும் இருக்காதபடிக்கு நம்முடைய இருதயத்தில்உணர்ந்து மனந்திருந்துவோம். ஏனெனில் அநேக மக்கள் கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கிறார்கள். நானும் அவர்களை குணமாக்காமல் இருக்கிறேன். உங்கள் கண்களோ பேறுபெற்றவை. ஏனெனில்...

பாசம்

ஒரு ஊரில் மிகவும் சந்தோஷமாக டேவிட்டின் குடும்பம் வாழ்ந்து வந்தனர்.ஒருநாள் டேவிட்டின் பிள்ளைகள் இரண்டு பேரும்,அக்காவும், தம்பியுமாக சேர்ந்து அவர்கள் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது தம்பி தனது அக்காவிடம் அக்கா வா அருகில் ஒரு ஆறு ஓடுகிறது. நாம் அதை பார்த்து விட்டு வரலாம்,என்று கூப்பிட்டான். அக்கா தனது தம்பியிடம் வேண்டாம் என்று சொல்லியும் தம்பி பிடிவாதமாக கூப்பிட்டதால் அக்காவும் மனமிரங்கி சரி தம்பியின் ஆசையை நிறைவேற்றலாம் என்று நினைத்து போகலாம் என்று சொன்னாள். இருவரும் சேர்ந்து ஒரு ஒத்தையடி பாதை வழியாக நடந்து பக்கத்தில் உள்ள எல்லா இயற்கை காட்சிகளையும் கண்டு களித்தவாறு போய் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களை மறந்த நிலையில் சந்தோஷமாக இருந்ததால் வெகு தொலைவில் வந்துவிட்டனர். பிறகுதான் தெரிந்தது, தாங்கள் வெகு தொலைவில் வந்துவிட்டோமே என்று, திடீரென்று அச்சமயத்தில் பனிமழை பொழிய ஆரம்பித்தது. தாங்கள் வந்த பாதை தெரியாமல் இருவரும் தடுமாறினார். நேரம் ஆக, ஆக இருட்ட ஆரம்பித்தது.இருட்டில் பாதை தெரியாமல் எப்படியாவது வீடு போய் சேர வேண்டும்...