Tagged: Daily manna

இறையாட்சி பேச்சில் அல்ல,செயல்பாட்டில்தான் இருக்கிறது.1 கொரிந் தியர் 4:20.

நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில் என்று வேதத்தில் வாசிக்கிறோம். நாம் கடவுளை பின்பற்றி அவரின் வார்த்தைகளை கைக்கொண்டு நடப்போமானால் நம்முடைய செயல்பாட்டை வெறும் பேச்சில் அல்லாது அதை செயல்பாட்டில் காண்பிக்கிறவர்களாய் வாழ வேண்டும். ஆண்டவர் கட்டளையிடும் அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து உண்மையாய் நடந்தால் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார். நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளாதபடிக்கு நமது மன விருப்பங்களின் படி செய்து இதுதான் கடவுள் விரும்பும் காரியம் என்று பாவ வாழ்க்கையில் ஈடுபட்டால் நம் செயல்பாட்டில் குறை உள்ளவர்களாய் ஆவோம் நமக்கு நாமே தீர்ப்பளித்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வேதத்தில் நாம் வாசிப்பது படி எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்.அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்: உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது...

கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களை காப்பார்.

இயேசுகிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப் பட்டவர்களாயுமிருக்கிற ஒவ்வொருவரின் பாதங்களையும் ஆண்டவர் காத்துக்கொள்வார். யார் அந்த பரிசுத்தவான்கள் என்றால் அவருக்கு கீழ்படிந்து பயந்து, அவரின் சித்தத்தை செயல்படுத்தும் ஒவ்வொருவரும் பரிசுத்தவான்களே ஆவார்கள். அவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு அவரின் இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டு அவருடைய நற்செய்தியை அறிவிப்பாளர்களாகவும் அவரின் நல்வாழ்வைப் பலப்படுத்தும் நலம்தரும் செய்தியை உரைத்து, அவர் தரும் விடுதலையை எல்லாம் மக்களும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் பறைசாற்றி நம் கடவுள் ஒருவரே அரசாளுகின்றார் என்று எடுத்துரைத்து வருபவர்களின் பாதங்களை ஆண்டவர் அழகாக ஒரு தீங்கும் அவர்களை தொடாதபடிக்கு அவர்களுடைய பாதங்களை காப்பார். ஏசாயா 52:7 :நாகூம் 1:15 மற்றும் உரோமையர் 10:15.ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். அப்பேற்பட்ட பரிசுத்தவான்கள் உலகத்தை நியாந்தீர்ப்பார்களென்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஒரு வழக்கு ஏதாவது உண்டானால் நாம் அவர்களிடம் சென்று நமது வழக்கை தீர்த்துக் கொள்ளலாம் என்று 1 கொரிந்தியர் 6:1,2,3 ஆகிய வசனங்கள் கூருகிறது. அவர்கள் தேவதூதர்களையும் நியாந்தீர்ப்பார்கள் . ஆண்டவர் இந்த உரிமையை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவருடைய இரத்தத்தால்...

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம்..1 யோவான் 3:11

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துக்கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதினால் அல்ல. மாறாக அவர் நம்மீது அன்புக்கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்காக அவர் இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம்மை மீட்கும்படி இந்த உலகிற்கு அனுப்பி இரத்ததினால் நம்மை சம்பாதிக்கும்படி செய்து இவ்வாறு தமது அன்பை வெளிப்படுத்தினார். அன்பானவர்களே! கடவுள் இவ்வாறு நம்மீது அன்புக்கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்புக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார். அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அன்பின் ஊற்றே கடவுள்தான். அன்பு செலுத்துவோரே கடவுளுக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள். ஜெபம் அன்பே...

ஆண்டவரின் சொற்படியே வலைகளைப் போடுவோம்.லூக்கா 5:5

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தமக்கென 12 சீடர்களை தெரிந்துக்கொண்டு தம்முடைய வல்லமையை அவர்களுக்கும் அளித்து நீங்கள் எங்கும் சென்று என் நற்செய்தியை அறிவியுங்கள் என சொல்கிறார். ஒருநாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் அவரின் இறைவார்த்தையை கேட்பதற்கு நெருக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக்கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டு இருந்தனர். அப்படகுகளுள் ஓன்று சீமொனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்கு கற்பித்தார். அவர் பேசி முடிந்தபின்பு சீமோனை நோக்கி ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளை போடுங்கள்என்றார். ஆழத்திற்கு தள்ளிக்கொண்டுபோய் என்பதற்கு எதிர் காலத்தில் நாம் செய்ய வேண்டிய அருள்பணியைக் குறிக்கும். சீமோன் மறுமொழியாக ஐயா,இரவு முழுதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களை பிடித்தார்கள் வலைகள் கிழியத் தொடங்கவே...

ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை பார்க்கிறது.1பேதுரு 3:12

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவரின் கண்கள் எப்பொழுதும் தமக்கு பயந்து உண்மையோடும் நேர்மையோடும் நடக்கும் ஒவ்வொருவரின் மேலும் இருக்கும். அவர்களை ஆண்டவர் ஒருபோதும் கைவிடவே மாட்டார். அவர்கள் கூப்பிடும்பொழுது அவர்களின் சத்தத்தை கேட்டு உடனே அவர்களின் எல்லா உபத்திரங்களில்  இருந்தும் காத்துக்கொள்வார். நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல. ஆனால் அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார் திருப்பாடல்கள் 34:19. அவர்கள் எலும்புகளை எல்லாம் அவர் பாதுக்காக்கின்றார். அவற்றுள் ஒன்றும் முறிபடாது. தீயோரைத் தீவினையே சாகடிக்கும்.நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவருக்கு பயந்து வாழ்வோமானால் அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவார். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? அப்படியானால் தீச்சொல்லின்று நாவைக் காத்து வஞ்சக மொழியை நம்மை விட்டு அகற்றவேண்டும். இவ்வாறு தீமையை விட்டு விலகி நன்மை செய்வோமானால் நல்வாழ்வை அடைந்திடுவோம். ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நம்மை நோக்கிகொண்டிருக்கிறது. நமக்கு தீமை செய்வோரை கண்டும் நாம் மனம் புழுங்க தேவையில்லை....