Tagged: Daily manna

ஆண்டவரைத் தேடுவோர் கண்டடைவர்

கேளுங்கள்,உங்களுக்கு கொடுக்கப்படும்;தேடுங்கள்,கண்டடைவீர்கள்.தட்டுங்கள்,உங்களுக்கு திறக்கப்படும்.ஏனெனில் கேட்போர் எல்லோரும் பெற்றுக்கொள்கின்றனர்.தேடுவோர் கண்டடைகின்றனர்.தட்டுவோருக்கு திறக்கப்படும்.உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தை கேட்கும் உங்கள் பிள்ளைக்கு கல்லை கொடுப்பீர்களா? அல்லது அந்தப்பிள்ளை மீன் வேண்டும் என்று கேட்டால் அதற்கு பதிலாக பாம்பை கொடுப்போமா?நாமே நம்முடைய பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்பதை கொடுக்கும் பொழுது விண்ணையும்,மண்ணையும் உண்டாக்கிய கடவுள் நாம் கேட்கும் பொழுது கொடுக்காமல் இருப்பாரா?நிச்சயம் கொடுப்பார்.நாம் கேட்க வேண்டிய முறையில் கேட்டால் நமக்கு இல்லை என்று சொல்லவே மாட்டார். யோவான் 14 : 13 ,14, ஆகிய வசனங்களில் நாம் வாசிப்பது என்ன?நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்,என்று சொல்கிறார். நாம் மறந்தாலும் நம்மை ஒருபோதும் மறக்காத இயேசு நாம் கேட்பதை கொடுத்து ஆசீர்வதிப்பார்.அதற்கு நாம் அவரைத் தேடவேண்டும். எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்.என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டு பிடிப்பார்கள் என்றும் எழுதியிருக்கிறது. ஆண்டவரிடமே செல்வமும்,மென்மையும்,அழியாப் பொருளும் அனைத்து...

எருசலேம் குமாரத்தியே கேள்

நாம் வேண்டுவதற்கு முன்னே மறுமொழி தரவும்,நாம் பேசி முடிப்பதற்கு முன்னே பதில் அளிக்கவும் கடவுள் எப்பொழுதும் நம்முடைய நினைவாக நிழலாக இருக்கிறார்.நம்மை ஒரு திராட்சை தோட்டமாக உருவாக்கி நல்ல பழங்களை நாம் கொடுக்கும்படி அவர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.நற்கனிகளை கொடுக்கிறோமா?என்று ஒவ்வொருவரும் இந்த நாளில் சிந்தித்து செயல்பட வேண்டுமாக விரும்புகிறார்.ஏனெனில் மலைகளை உருவாக்கியவர் அவரே; தோற்றுவிப்பவர் அவரே; எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுதுபவரும் அவரே;காலைப்பொழுதை காரிருள் ஆகச் செய்பவரும் அவரே;இப்பேற்பட்ட ஆண்டவருக்கு நாம் நல்ல பழங்களை கொடுக்கிறோமா? ஒருநாள் இயேசு காலையில் நகரத்திற்கு திரும்பி வந்தபொழுது அவருக்கு பசி உண்டாயிற்று.வழியோரத்தில் ஒரு அத்தி மரத்தை பார்த்து அதன் அருகில் சென்று அதில் ஏதாவது கனி இருக்கும்,பறித்து சாப்பிடடலாம் என்று நினைத்தார்.ஆனால் அந்த மரத்தில் ஒன்றும் இல்லாததால் அந்த மரத்தைப் பார்த்து இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய் என்று சொன்னார்.உடனே அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று.சீடர்கள் யாவரும் ஆச்சரியப்பட்டு இந்த மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?என்று...

தாகமாய் இருப்பவர்களே,நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்.ஏசாயா 55:1

பிரியமானவர்களே!! இதோ நம்முடைய ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் இவ்வாறே அழைக்கின்றார்.தாகமாய் இருப்பவர்களே,நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்.கையில் பணமில்லாதவர்களே,நீங்களும் வாருங்கள்.தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,வாருங்கள்,காசு பணமின்றித் திராட்சை ரசமும் பாலும் வாங்குங்கள்.உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தை செலவிடுகின்றீர்கள்?நிறைவு தராத ஒன்றிற்காக ஏன் உங்கள் உழைப்பை வீனாக்குகிரீர்கள்?உங்கள் ஆண்டவருக்கு செவிகொடுங்கள்.நல்லுணவை உண்ணுங்கள்;கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.ஏசாயா 55 : 1, 2 , நம்முடைய ஆண்டவர் எத்துனை கருணை மிக்கவர் என்பதை நாம் சமயத்தில் மறந்து புலம்பி தவிக்கிறோம்.நாம் மறந்தாலும் அவர் நம்மை ஒருபோதும் மறக்கவே மாட்டார்.ஏனெனில் நம்முடைய எண்ணங்கள் வேறே,அவருடைய எண்ணங்கள் வேறே,நம்முடைய வழிமுறைகள் வேறே,அவருடைய வழிமுறைகள் வேறே.மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிகவும் உயர்ந்து இருப்பது போல நம்முடைய சிறிய எண்ணங்களைவிட ஆண்டவரின் எண்ணங்கள் மிகவும் உயர்ந்து இருக்கின்றன. எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது.ஒரு மனிதர் வெளியூர் செல்ல நினைத்து அங்குள்ள உறவினர்களுக்கு தன்னுடைய தோட்டத்தில் விளைந்த நல்ல காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக்கொண்டு...

ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்தருள்வார்

விண்ணகக் கடவுளாகிய ஆண்டவர் பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவர்.அவரிடம் அன்புக்காட்டி அவருடைய கட்டளைளைக் கடைப்பிடித்தால் நம்மேல் அவரது அளவில்லா இரக்கங்களை பொழிந்தருள்வார்.அவரின் மக்களாகிய நாம் இரவும்,பகலும் அவரையே நோக்கிப்பார்த்தால் எல்லா ஆபத்துக்களிலும் இருந்து நித்தமும் காத்திடுவார்.அவருடைய தெய்வீக சமாதானத்தினால் நிறைத்திடுவார்.இதைத்தான் தாவீது நன்கு உணர்ந்து அவரது சட்டத்தை இரவும்,பகலும் சிந்திப்பவர் மகிழ்ச்சி கொள்வார்கள் என்று திருப்பாடல் 1 : 2 ல் எழுதியிருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைப்பட்டு இருந்த பொழுது மோசேயை அங்கு அனுப்பி தமது மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இஸ்ரயேல் நாட்டுக்கு அழைத்து வந்து அவர்கள் பயிருடதாததும்,அவர்கள் கட்டாதும் ஆன வீட்டிலே குடியிருக்கச் செய்து அவர்களை கண்ணின் மணியைப்போல் காத்து அவர்களுக்கு அமைதியை தந்தருளினார்.கானான் நாட்டில் குடியிருந்த அவர்கள் எத்தனை தடவையோ பாவம் செய்து அவரை விட்டு பின்வாங்கிப் போனாலும் அவர் அவர்களோடு கூடவே இருந்து ஒரு தீங்கும் தொடாதபடிக்கு காத்தருளினார். அதே ஆண்டவர் இன்றும் நம் மத்தியில்...

ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துக்கொள்ளுங்கள்.எபே 5:17

கடவுளின் இரக்கத்துக்கு கெஞ்சி நிற்கும் நாம் அவரின் திருவுளம் அறிந்து செயல்பட்டால் எத்துனை இனிது.அவருக்கே உகந்த தூய,உயிருள்ள பலியாக நம்மை படைத்தோமானால் அவர் மனம் எவ்வளவாக அகமகிழும்.நாம் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு என்ன? எது என்றால் இந்த உலகத்தின் போக்கின்படி நடக்காமல் நம்முடைய உள்ளம் புதுப்பிக்கப்பட்டு மாற்றம் அடைந்து கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து எது நல்லது?எது உகந்தது? எது நிறைவானது? என்று அறிந்து புரிந்துக்கொள்ள வேண்டுமாக விரும்புகிறார். ஒரு தம்பதிகளுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள்.ஆனால் அந்த தகப்பன் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என நினைத்து இறைவனிடம் கேட்டாராம்.ஆனால் இறைவன், மகனே நான்தான் உனக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறேனே,அது போதாதா?என்று கேட்டுவிட்டு நீ சென்று அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்து நிம்மதியாக இரு என்று சொன்னாராம்.ஆனால் அந்த தகப்பனோ இல்லை ஆண்டவரே!நீர் எனக்கு அவசியம் ஒரு ஆண் குழந்தையை கொடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக...