Tagged: Daily manna

உள்ளதே போதும் என்ற மனநிறைவோடிருப்பதே நலம்

பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது. செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார்.  சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்கு தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு ? ஆனால், வேலை செய்பவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். ஆனால் செல்வர்களின் பணமோ அவர்களை தூங்கவே விடாது. ஒருவர் சேர்க்கும் அதிகப்படியான செல்வம் அவருக்கு துன்பமே விளைவிக்கும். அந்த செல்வத்தை பாதுகாக்க அவர்கள் எவ்வளவாக கஷ்டப்படுகிறார்கள். நாம் யாவரும் தாயின் வயிற்றில் இருந்து வெற்றுடம்போடு வருகிறோம். வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகிறோம். நம் உழைப்பால் கிடைக்கும் பொருள் எதையும் நம்மோடு கொண்டு செல்வதில்லையே! வாழ்நாள் முழுதும் இருள், கவலை , பிணி, துன்பம். இவைகள் இல்லாத மனிதர் உண்டா? ஆகையால் கடவுள் நமக்கு கொடுக்கும் வாழ்நாளை மகிழ்ச்சியோடு நமக்குள்ளதே போதும் என்ற மனநிறைவோடு வாழ்வதே சிறந்ததாகும். கடவுள் ஒருவருக்கு பெருஞ்செல்வமும், நல்வாழ்வும், கொடுத்து அவற்றை...

நம்மை பாதுக்காத்து தேற்றுகிறவர் நம் ஆண்டவர்

ஆண்டவர் கூறுவது இதுவே ; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச்செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் செல்வம் விரைந்து வரச்செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள் ; மார்பில் அனைத்துச் சுமக்கப்படுவீர்கள் ; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன் ; நீங்கள் தேற்றப்படுவீர்கள். ஏசாயா 66 : 12, & 13. இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சிக் கொள்ளும்.உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்.; ஆண்டவர் தமது ஆற்றலைத் உங்களுக்கு தெரியப்படுத்துவார். நாம் தினந்தோறும் பலவிதமான பாடுகளை கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது. அதை நமது ஆண்டவரும் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் நமக்கு சொல்லியே சென்று இருக்கிறார். நாம் யாவரும் அவர் வழியாக அமைதி காணும் பொருட்டே அவற்றை நம்மிடம் சொல்லியிருக்கிறார். உலகில் உங்களுக்கு துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள் நான் உலகின்மீது வெற்றிக்கொண்டுவிட்டேன் என்று யோவான் 16 :33 ம் வசனத்தில் வாசிக்கிறோம். அவர் பொய் சொல்லவில்லை. துன்பங்கள் உண்டே என்றுதான்...

எல்லோருக்கும் மதிப்புக் கொடுங்கள்

“கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று “. மற்றும் அது, ” இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும் “, இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள் இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். 1 பேதுரு 2 : 7,8. வாசிக்கிறோம். விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவன் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுப் போனாலும் அவரே நம் எல்லோருக்கும் மூலைக்கல்லாக விளங்குகிறார். இந்த உலகில் வந்து பிறந்த ஒவ்வொருவரும் ஆண்டவரின் பிள்ளைகளே! நாம் யாரையும், வேதனைப்படுத்தவோ, அலட்சியப்படுத்துவதையோ, இறைவன் ஒருநாளும் விரும்பவே மாட்டார். எல்லோரையும் மதித்து நடக்க வேண்டும், மதிப்பு கொடுக்க வேண்டும் என்றே ஆண்டவர் விரும்புகிறார். அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டு பணிந்திருங்கள்; அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப் பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள். இவ்வாறு நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம் எல்லோருக்கும் மதிப்பு கொடுக்கவும், சகோதர, சகோதரிகளிடம் அன்பு செலுத்தவும், கடவுளுக்கு அஞ்சி நடக்கவும், அரசருக்கு மதிப்பு கொடுக்கவும் வேண்டும் என்பதே நம்...

உலகத்தை ஜெயிப்பவர்கள் யார் ? யார் ?

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ ? கடவுள் தெரிந்துக்கொண்டவர்களுக்கு எதிராக யார் குற்றம் சாட்ட இயலும் ? அவர்களை [ நம்மை ] குற்ற மற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே! நமக்கு எதிராக யார் தண்டனை தீர்ப்பு அளிக்க இயலும் ? நமக்காக இறந்து உயிருடன் எழுப்பப்பட்டு இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காக பரிந்து பேசுகிறார் அல்லவா! நம்மேல் அன்புக் கூர்ந்தவரின் செயலால் நாம் வெற்றி மேல் வெற்றி பெற்று அனைத்திலும் ஜெயிப்பவர்களாக இருக்கிறோம்.உரோமையர் 8 : 31 to 37 ல் வாசிக்கலாம். கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது நம்முடைய மன உறுதியான நம்பிக்கையால் இந்த உலகத்தை ஜெயிக்கலாம். இந்த உலகில் இருப்பவனிலும் நம்மில் இருப்பவர் பெரியவராயிற்றே! பவுலும், சீலாவும் தெசலோனிக்காவில் ” இயேசுவே அந்த மெசியா என்று அறிவித்த பொழுது...

சகோதர அன்பு

நாம் யாவரும் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மிடம் எத்துனை அன்பு கொண்டுள்ளார்,என்று பாருங்கள். 1 யோவான் 3:1. ஆண்டவரிடம் எந்தவொரு பாரபட்சமும் இல்லை.அவருடைய சாயலாக படைக்கப்பட்ட நம் எல்லோரையும் சகோதர,சகோதரிகளாய் அவருடைய உறுப்பாய் இருக்கும்படி படைத்திருக்கிறார். உடல் ஒன்றே: உறுப்புகள் பல,உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல நாமும் கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கிறோம்.1 கொரிந்தியர் 12:12; 13. நீங்கள் யூதரா?கிரேக்கரா? செல்வந்தரா?அடிமையா?நாம் எல்லோரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்கு பெற்று அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். இவ்வாறு கடவுள் நம்மை படைத்திருக்கும்பொழுது நமக்குள் ஏன் கோபம், சண்டை, பொறாமை, பகைமை, பிரிவினை, கட்சிமனப்பான்மை, கலாத்தியர் 5:20. இதையெல்லாம்விட்டு நாம் யாவரும் ஆண்டவர் விரும்பும் பிள்ளைகளாக மாறி வாழுவோம்.ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்மை, நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் இவைகளைப் பற்றிக்கொண்டால் நம்மிடம் அன்பு நீரூற்றைப்போல் ஊறும்.கலாத்தியர் 5:22 .நாமும் அவருடைய உறுப்பாய் மாறுவோம் என்பதில் ஐயமில்லையே! ஒருவர் மற்றவர்களுடைய சுமைகளை தாங்கிக் கொள்ளுவோம். அவர்களோடு ஒப்பிட்டு பெருமை பாராட்டாமல் இயேசுகிறிஸ்து நமக்காக...