Tagged: Daily manna

”எனக்கு அடுத்திருப்பவர் யார்?” (லூக்கா 10:29)

திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் இயேசு கூறிய கதை ”நல்ல சமாரியர்” என்னும் சிறப்பான உவமை ஆகும். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமை தரும் செய்தி என்ன? ”எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்னும் கேள்விக்குப் பதில் கேள்வியாக, ”உமக்கு அடுத்திருப்பவராக இல்லாத ஒருவரைக் காட்ட முடியுமா?” என்றுகூட இயேசு சவால் விட்டிருக்கலாம். ஆனால் இயேசு ஓர் உவமை வழியாக அந்த உண்மையைக் கற்பித்தார். சமாரிய இனத்தவர் தாழ்த்தப்பட்டோர்; அவர்களுக்கு யூதர்கள் நடுவே மதிப்பு இருக்கவில்லை. ஆனால் கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் குற்றுயிராக விடப்பட்ட மனிதருக்கு உதவிசெய்தது அந்த சாதாரண சமாரியர்தானே தவிர யூத குருவோ, லேவியரோ அல்ல. யார்யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். இந்த உண்மையை வாழ்க்கையில் காட்டியவர் நல்ல சமாரியர். இன்று இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள்; மனித மாண்பு மறுக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள்....

கடின உள்ளமும், மண விலக்கும் !

மணவாழ்வு ஒரு மிகப் பெரிய சவால் என்பதை நாம் அறிவோம். மணவிலக்குகள் பெருகி வரும் இக்காலத்தில் மணவாழ்வின் ஒற்றுமைக்காக செபிக்கவும், முயற்சிகள் எடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். மோசேயின் அனுமதியைப் பற்றி பரிசேயர் இயேசுவிடம் வினவியபோது உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே இவ்வாறு எழுதிவைத்தார் என்கிறார் இயேசு. மணவிலக்கு, மண முறிவு என்பதெல்லாம் கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள். எப்போது கணவன் அல்லது மனைவியின் உள்ளம் கடினப்பட்டுவிட்டதோ, அப்போது அவர்களின் மனதில் மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அம்மன முறிவின் வெளிப்பாடே மணவிலக்கு. எனவே, தம்பதியர் தங்கள் உள்ளம் கடினப்பட்டுப் போகாமல் காத்துக்கொள்ளவேண்டும். தன்னலம் என்பது கடின உள்ளத்தின் ஓர் அடையாளம். புரிந்துகொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை, மன்னிக்காமை, பாசம் கொள்ளாமை, நல்லதைப் பாராட்டாமை … இவை அனைத்துமே கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள்தாம். இத்தகையோர் மனதில் ஏற்கனவே மணமுறிவு ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம். கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, கனிவான இதயத்தைப் பெற நாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். அவ்வாறே, கணவன் மனைவி...

ஆவியால் பேருவகை !

லூக்கா 10: 17-24 இயேசுவின் செபம் நமக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவும், ஊக்க மருந்தாகவும் அமைகிறது. அவரது செபத்தைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம். 1. இயேசுவின் செபம் துhய ஆவியால் துhண்டப்பட்டதாக அமைந்தது, ஆவியின் துணையால்தான் நான் இறைவனை அப்பா, தந்தாய் என்று அழைக்கிறோம் என்று பவுலடியாரும் கூறியுள்ளார். ஆவியானவரே நாம் செபிப்பதற்குத் துhண்டுகோலாகவும், துணையாளராகவும் விளங்குகிறார். கோவிலில் நமது வழிபாடுகள் துhய ஆவியின் துணை வேண்டி தொடங்குவதை நினைவுகூர்வோம். எனவே, இயேசுவைப் போல நாமும் துhய ஆவியில் நிறைந்து செபத்தில் ஈடுபடுவோம். 2. இயேசு பேருவகையுடன் செபித்தார். எங்கே துhய ஆவி இருக்கிறாரோ, அங்கே மகிழ்ச்சி உண்டு. மகிழ்ச்சி என்பது ஆவியின் ஏழு கனிகளுள் ஒன்று அல்லவா. எனவே, ஆவியால் நிறையும்போது அங்கே நிச்சயம் மகிழ்ச்சி உண்டு. மேலும், செபம் என்பதுவும் ஒரு மகிழ்ச்சியின் அனுபவமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் செபிக்கும்போது, மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் அடையவேண்டும் என்று...

மிகப்பெரியவர் யார்?

”விண்ணரசில் மிகப்பெரியவர் யார்?” என்பது சீடர்களின் கேள்வி. இயேசுவின் பதில் ”மனந்திரும்பி சிறுபிள்ளைகள் போல் ஆக வேண்டும்”. இயேசுவின் இந்தப்பதில் சீடர்கள் விண்ணரசிற்கு வெளியே இருப்பதைச்சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. வாழ்வில், மனிதர்கள் எதை எதிர்பார்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள் என்பது முக்கியம். அது பதவியையா? அதிகாரத்தையா? பணத்தையா? இன்பத்தையா? இவை அனைத்தும் விண்ணரசில் நுழைவதற்கு தடைக்கற்கள். அப்படியென்றால் வி்ண்ணரசிற்கு நுழைவது எப்படி? நாம் அனைவரும் சிறுபிள்ளைகளாக மாற வேண்டும். சிறுபிள்ளைகளிடத்தில் மூன்று முக்கியமான பண்புகள் காணப்படுகிறது. 1. தாழ்ச்சி. குழந்தைகள் எப்போதுமே தங்களை முன்னிறுத்திக்கொள்வதில் எள்ளளவும் பிரியப்பட மாட்டார்கள். அவர்கள் மறைவாக, பின்புலமாக இருந்து செயல்படுவதைத்தான் விரும்புவார்கள். வளர்ந்தபிறகு போட்டி உலகில் நுழைந்தபிறகு தான், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். 2. சார்ந்திருத்தல். மற்றவர்களைச் சார்ந்திருத்தல் என்பது குழந்தைகளில் இயல்புகளில் ஒன்று. மற்றவரை சார்ந்திருந்து வாழ்வை எதிர்கொள்கிறார்கள். அவர்களை அன்பு செய்கிறவர்கள் மட்டில், அவர்கள் மகிழ்வோடு சார்ந்திருக்கிறார்கள்....

திசை மாறா பயணம்

இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தில் நடந்த ஒரு உறையாடலில் அவரைப் பின்தொடர்வதுபற்றிய சில கருத்துக்கள் இங்கே பரிமாரப்படுவதைப் பார்க்கிறோம். நிலை வாழ்வு பெற, எல்லோருமே எருசலேம் பயணத்தில் பங்குகொள்ள வேண்டும். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” லூக் 9’23. ஆகவே, தப்பமுடியாது, தவிர்க்க முடியாது, மாற்று வழிகிடையாது. நீயும் நானும் விரும்புவதுபோல அப்பயணம் அமைவதில்லை. சில சமயங்களில் நாம் விரும்பாதவைகள் வசதி குறைவுகள் குறுக்கிடலாம். நம் வாழ்க்கைப் பயணத்தில் இவைகளை நாம் ஏற்று வாழத் தொடங்கும்போது இயேசுவோடு நாம் எருசலேம் பயணம் மேற்கொள்ளுகிறோம். இந்த எருசலேம் பயணத்தில் சில நேரங்களில் சில முடிவுகள் நம்மேல் சுமத்தப்படலாம். “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” (லூக் 9:60) மொத்தத்தில் எருசலேம் பயணம் ஒரு கலப்பையில் கை வைத்து உழுகின்ற சிறப்பான...