Tagged: Daily manna

விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்!

இயேசுவின் இந்த உவமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், வியப்புதான் மேலிடும். காரணம், திருமண விருந்துக்கு வர மறுப்பது என்பது சற்று வியப்பான செய்திதான். அதிலும் ஒவ்வொருவரும் சொன்ன சாக்குபோக்குகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஆம், இயேசு சொன்ன உவமையின் நோக்கமும் அதுதான். இறைவன் தருகின்ற விருந்தில் பங்கு கொள்வதற்கு நாம் மிகவும் தயங்குகிறோம். அதுவே வியப்புக்குரியதுதான். அதிலும் அத்தயக்கத்துக்கான காரணங்களாக நாம் முன்வைக்கும் காரணங்கள் அதிலும் வியப்புக்குரியவை என்பதை நமக்கு விழிப்பூட்டவே இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கிறார். இறையாட்சியின் விருந்திற்கு இறைவன் நம்மை அழைக்கின்றார். அந்த விருந்து நிறைவான, நிலையான, அழியாத விருந்து. அந்த விருந்தை நாம் திருப்பலியிலும், இறைமொழியிலும், இறை அனுபவங்களிலும் பெறுகிறோம். ஆனாலும், அந்த விருந்தின்மீது நாம் அதிக ஆர்வம் கொள்வதில்லை. மாறாக, அழிந்து போகின்ற உணவு, பொழுதுபோக்குகள், நிறைவற்ற உறவுகள்… இவற்றில் நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம். அத்துடன், இறையாட்சியின் விருந்தில் கலந்துகொள்ளாததற்கு நாம் ஆயிரம் சாக்குபோக்குகளைச் சொல்கிறோம்....

இறப்பே .. புது வாழ்வு

நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது. இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11:4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, “விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்”( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார். எவ்வாறு இறக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு வாழ வேண்டும். அமைதியாக, நிம்மதியாக, வேதனையின்றி,தனிமையின்றி...

அனைத்து ஆன்மாக்கள் திருவிழா

நவம்பர் மாதம் ஆன்மாக்களின் மாதம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாம் தேதி, அகில உலக திருச்சபை ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாட நமக்கு அழைப்புவிடக்கிறது. அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாள், மற்ற விழாக்களைப் போன்றோ, பெருவிழாக்களை போன்றதோ அல்ல. இந்த விழாவிற்கென்று தனித்தன்மை இருக்கிறது. இறந்து போன ஆன்மாக்களை நாம் இந்த நாளில் சிறப்பாக நினைவுகூா்ந்தாலும், வழிபாட்டு ஆண்டின் தரத்தில், மிக முக்கியம் வாய்ந்த, ஆண்டவரின் விழாக்களில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது. அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது. பழங்காலத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கம், அனைத்து சமயங்களிலும் இருந்தது. இந்த பழக்கமே, நாளடைவில் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தோன்றியிருக்கலாம். இதனைப்பின்பற்றி தான், இறந்தவர்களுக்காக இறைவேண்டல்களும், திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆயரான இசிதோர் கி.பி. 636 ல், இறந்தவர்களுக்கென்று ஒருநாளை ஒதுக்கி, அவர்களுக்காக மன்றாடும் முறையை ஏற்படுத்தினார். இது நாளடைவில் பல துறவி மடங்களிலும், அதிலும் குறிப்பாக தொமினிக்கன் துறவற மடங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், கி.பி. 15...

அனைத்துப் புனிதர்களின் விழா

புனிதம் என்பது திருச்சபையால் கொடுக்கப்படும் மிகப்பெரிய மணிமகுடம். நிறைவாழ்வை தங்கள் பலவீனங்களோடு, குறைகளோடு நிறைவாக வாழ முற்பட்டவர்களை, தாய்த்திருச்சபை புனிதர்கள் என்று, போற்றி பெருமைப்படுத்துகின்றது. திருச்சபையினால் அங்கீகரிக்ப்பட்ட புனிதர்கள், இன்னும் வெளிஉலகிற்கு தெரியாமல் புனித வாழ்க்கை வாழ்ந்தவர்களும், நிச்சயம் இந்த உலகத்தில் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களையெல்லாம் இந்த நாளிலே நாம் சிறப்பாக நினைவு கூற வேண்டும். இந்த விழாவானது, அனைத்து ஆன்மாக்கள் தினத்திற்கு முன்னதாக, நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், கீழைத்திருச்சபையில் நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுநாளே பிற்காலத்தில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி அவர்கள், புனித பேதுரு பேராலயத்தில் அனைத்து புனிதர்களையும் மறைசாட்சிகளையும் நினைவுகூறும் அடையாளமாக, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி, அவர்களை மாட்சிமைப்படுத்தினார். இதுவே நவம்பர் முதல் தேதியில் அனைத்து புனிதர்களின் தினமாக அனுசரிக்க, தூண்டுதலாக அமைந்தது. இடைக்காலத்தில் அனைத்து புனிதர்களின் விழாவிற்காக இரவு திருவிழிப்பு மற்றும் எட்டுநாள்...

மதிப்புப் பெறுதல் !

இயேசுவின் ”செயல்வழிக் கற்றல் ” முறை இன்றும் தொடர்கிறது. உணவு அருந்தும் வேளையைப் பயன்படுத்தி இயேசு நல்ல மதிப்பீடுகளை மக்களுக்குக் கற்றுத் தருகிறார். குறிப்பாக, இயேசுவின் சீடர்கள் முதன்மையான இடத்தையும், மதிப்பையும் விரும்பித் தேட வேண்டாம் என்று அறிவுரை பகர்கின்றார். அதற்காக நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். விருந்துக்கு செல்லும்போது விருந்தளிப்பவர் தருகின்ற மதிப்பைப் பற்றி இயேசு கூறுகின்ற எடுத்துக்காட்டு நமது வாழ்விலேகூட எப்போதேனும் நடந்திருக்கச்கூடிய ஒரு நிகழ்வுதான். நாம் முதன்மை இடத்தைத் தேடினால், அதை இழந்து பி;ன்னிடத்திற்கு செல்ல நேரிடும். கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைவரின் முன்பாக மேலிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பெருமைக்கு உள்ளாகியிருப்போம். ஆகவே, முதன்மை இடத்தை, பெருமையை, பாராட்டை பிறருக்கு விட்டுக்கொடுக்கின்ற நல்ல பழக்கத்தை ஒரு வாழ்வு மதிப்பீடாக ஏற்றுக்கொள்வோம். அப்போது, இறைவன் நம்மைப் பெருமைப்படுத்துவார். மன்றாடுவோம்: தாழ்ந்தோரை உயர்த்துகின்ற இயேசுவே, எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்தி வாழும் அருளைத் தாரும். பிறரிடமிருந்து பாராட்டை, முதன்மையை, மதிப்பை...