Tagged: Daily manna

நம்பியபடி நிகழட்டும் !

இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்று சொல்கிறார் இயேசு. எனவே, யாரிடம் நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களிடையே மட்டுமே அவர் அற்புதங்கள் செய்தார். அதுமட்டுமல்ல, மாற்கு நற்செய்தியிலே நம்பிக்கை பற்றிய செய்தி ஒன்று அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயேசுவின் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்தபோது, அவர்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார். அது மட்டுமல்ல, அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை (மாற் 6:5) என்னும் விசித்திரமான, கொஞ்சம் துணிச்சலான செய்தியைப் பார்க்கிறோம். எனவே, நம்பிக்கை இருக்கிறர்களுக்கு மட்டுமே வியப்புக்குரிய செயல்களை இறைவன் செய்கிறார். எனவே, நாமும் நமது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம். இறை நம்பி;க்கையை மட்டுமல்ல, நமது தன்னம்பி;க்கையையும்கூட. நம்மீது, நமது...

துன்பத்தின் வழியாகவும் நற்செய்தி அறிவிப்பு!

பிரான்சிஸ் சவேரியார் விழாவாகிய இன்று நமது நற்செய்தி அறிவிப்புக் கடமையைப் பற்றிச் சிறிது சிந்திக்க அழைப்பு விடுக்கிறது திருச்சபை. இன்றைய நற்செய்தி வாசகமும், முதல் வாசகமும் (முதல் வாசகம் : இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3) நற்செய்தி அறிவிப்பின் இரு எதிர்கோணங்களை எடுத்தியம்பி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”””””””’’“ என்று கட்டளையிடுகிறார். நற்செய்தி அறிவிப்பின் அடையாளங்களையும் ஆண்டவர் பட்டியல் இடுகிறார். அவற்றில் முகாமையான ஒன்று உடல் நலமற்றோரைக் குணமாக்குவது. நோயுற்றோருக்காகப் பரிந்து மன்றாடி அவர்களை நலம்பெறச் செய்வது ஒரு நற்செய்தி அறிவிப்பு உத்தி. அதே வேளையில், முதல் வாசகத்தின்படி(முதல் வாசகம் : இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3), “சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்”” “ என்னும் செய்தியின் வழியாக பேதுரு, துன்பத்தின் வழியாகவும் நாம் நற்செய்தி...

இயேசுதரும் முழுமையான விடுதலை

இயேசுவின் ஒவ்வொரு செயல்பாடும் நமக்கு மிகப்பெரிய கருத்தியலையும், ஆழமான சிந்தனையையும் தருகிறது. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் அதுவே, மிகச்சிறந்த வாழ்க்கை நெறிகளை நமக்குத் தருகிறது. இன்றைய நற்செய்தியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆல்ஃப்ரட் எடேர்ஷிம் என்கிற விவிலிய அறிஞர் இந்த பகுதிக்கு அருமையான விளக்கத்தைக் கொடுக்கிறார். இயேசு தன்னுடைய பணிவாழ்வில் மூன்றுமுறை உணவைக் கொடுத்ததாக நற்செய்தியில் சொல்லப்படுகிறது. அந்த மூன்றுமுறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. முதலில் கலிலேயாவில் தனது நற்செய்திப்பணி முடிந்தவுடன் கடைசியாக 5000 பேருக்கு, அப்பம் பலுகக்கொடுக்கிறார். அதன்பிறகு அவர் வேறு எந்த நற்செய்திப்பணியும் செய்யவில்லை. உணவைக்கொடுத்தது தான் கடைசிப்பணி. இரண்டாவது முறை, புறவினத்து மக்கள் மத்தியில் பணி முடிந்ததும் 4000 பேருக்கு அப்பத்தைப் பலுகச்செய்து கொடுக்கிறார். இதற்கு பிறகு அந்த பகுதியில் அவர் வேறொன்றும் செய்யவில்லை. மூன்றாம் முறை தன்னுடைய சீடர்களோடு இறுதி உணவு அருந்துகிறார். அதற்கு பிறகு சிலுவையில் மரிக்கிறார். உணவு என்பது நிறைவைக் குறிப்பதாக...

துணிவோடு இருப்போம்

பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் காற்று மண்டலத்தில் இருப்பதாக நம்பினர். அவைகள் உணவு மற்றும் தண்ணீர் வழியாக மனிதர்களின் உடலுக்குள் புகுவதற்கு வாய்ப்பிருக்கிற என்பது அவர்களின் எண்ணம். எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி, நமது உடலில் 36 பாகங்கள் வழியாக தீய ஆவிகள் உடலுக்குள் ஊடுறுவமுடியும். ஒவ்வொரு பாகங்களையும் குறிப்பிட்ட தீய ஆவிகள் கட்டுப்படுத்துகிறது என்றொரு நம்பிக்கையும் மக்கள் மனதில் இருந்தது. இப்படிப்பட்ட தீய ஆவி ஒன்றைத்தான் இயேசு அந்த மனிதரிடமிருந்து ஓட்டுகிறார். பழங்காலத்தில் தீய ஆவிகளை ஓட்டுவதற்காக மந்திரவாதிகள் பல செய்முறைகளைப்பின்பற்றினர். உதாரணமாக, பேய்பிடித்தவரின் மூக்கில் வளையம் ஒன்றை மாட்டி, சில மந்திரச்சொற்களை உச்சரித்து பேய் ஓட்டுவர். அதேபோல் ஒரு வகையான செடியின் வேரை, பேய் பிடித்தவரின் அருகே கொண்டுபோக, பேய் ஓடிவிடுவதாகவும் நம்பினர். இப்படி சில செய்முறைகள் மூலமாக பேய்களை ஓட்டுகிறவர்கள் மத்தியில், “வாயை மூடு, இவரைவிட்டு வெளியே போ” என்கிற வெறும் வார்த்தைக்கு, தீய ஆவிகள் கட்டுப்பட்டு ஓடுவதைக்கண்டுதான், இயேசுவை...

மனிதரைப் பிடிப்பவரான அந்திரேயா !

திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர். மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார். இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம். மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரும்...