Tagged: Daily manna

இயேசு அனுபவம்

வேறு எந்த நற்செய்தியாளரும் எழுதாத வகையில், லூக்கா நற்செய்தியாளர் தனது நற்செய்தி நூலின் முகவுரையில், தன்னை அறிமுகப்படுத்துகிறார். ”நானும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆராய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை…”. மற்றவர்கள் எழுதிய நற்செய்தியை மட்டும் வைத்து, லூக்கா நற்செய்தியாளர் திருப்தியடையவில்லை. இயேசுவுடனான தன்னுடைய அனுபவத்தை மையமாக வைத்து, இந்த நற்செய்தியை எழுதுவதாக அவர் சொல்கிறார். உண்மையான நம்பிக்கை என்பது நேரடி அனுபவத்திலிருந்து பெறக்கூடியது. அது தனிப்பட்ட நபரின் நேரடி அனுபவம். இரண்டாம் தரமாக பெறுவது கிடையாது. தான் கேட்டதை உறுதி செய்தபிறகு எழுதினாலும், தனிப்பட்ட முறையில் அவரின் இயேசுவுடனான உறவின் அடிப்படையில், நற்செய்தியை எழுதுவதாக லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவினுடைய அன்பின் ஆழத்தை, தனிப்பட்ட முறையில் தான், நாம் அதிகமாக உணர முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இயேசு அனுபவத்தைப் பெற, இந்த பகுதி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைக்கு நாம், மற்றவரின் அனுபவத்தின் அடிப்படையில் இயேசுவைப்பின்பற்ற விரும்புவதுதான், நமக்கு விசுவாசத்தளர்ச்சியையும், உறுதியில்லாத...

சீடத்துவ வாழ்க்கை

இயேசுவைப்பின்பற்ற விரும்பும் சீடர்கள் அவர்களுடைய வாழ்வில் எதைப்பற்றிக்கொண்டு வாழக்கூடாது என்பதை,  நற்செய்தி மூலமாக நமக்கு அறிவிக்கிறார். 1. பாதுகாப்பு. இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் அனைவருமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாதுகாப்பிற்கு ஒரு வீடு, ஒரு குடும்பம், ஒரு வேலை என்று, வாழ்வை பாதுகாப்போது எண்ண நினைக்கிறவர்கள், இந்த உலகத்தில் வாழ்கிற மக்கள். ஆனால் இயேசு இதனைக் கடந்து நிற்கிறார். தனக்கென்று, எந்த ஒரு பாதுகாப்பான வேலையும் தேவை இல்லை, என்று கடவுளின் பராமரிப்பில் முழுமையான நம்பிக்கை வைக்கிறார். 2. எதிர்ப்பு. உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஏனென்றால் எதிர்ப்பசை் சம்பாதிக்க பயப்படுகிறார்கள். தங்களுக்கு எந்த பிரச்சனையும் வராத இடத்தில், பாதுகாப்பாக இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். இதனைச் சொன்னால், எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும், எனவே, இதனை எதிர்க்க வேண்டியதில்லை. நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு? என்று, யாரையும் பகைத்துக்கொள்ள விரும்புவது கிடையாது. இயேசு அப்படி வாழவில்லை....

விசுவாசம் – கடவுளின் கொடை

இயேசு கடவுளின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறார். இயேசுவின் இந்த செயல், விசுவாசம் என்பது போற்றிப்பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, அது பறைசாற்றப்பட வேண்டியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கத்தோலிக்க திரு அவை இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைகொண்டு இருக்கிறது. இந்த இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறையினரின் அர்ப்பணத்திலே இருந்திருக்கிறது. அன்றைக்கு சீடர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அர்ப்பண உணர்வோடு தலைமுறையினர் தோறும் அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த பாதுகாப்போடு, மகிச்சியோடு, தியாக உள்ளத்தோடு பரிமாறியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஆனாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட அந்த மாட்சிமையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் சந்தித்த இன்னல்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் திருத்தூதர்கள். திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவுக்காக சிந்திய இரத்தம் அதற்கு சாட்சி. இன்றைக்கும் நாம் பெற்றிருக்கிற இந்த பாரம்பரியமான விசுவாசத்தை சிதைக்காமல் எந்தச்சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு...

கடவுளின் அருகாமையில் இருக்க….

தீய ஆவிகள் இயேசுவைக்கண்டதும், ”இறைமகன் நீரே” என்று கத்தியதாக நற்செய்தி கூறுகிறது. ”இறைமகன்” என்ற வார்த்தையின் பொருளை இங்கு நாம் பார்ப்போம். இறைமகன் என்கிற வார்த்தை, மத்திய கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த மக்களால், அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வார்த்தை. எகிப்து தேசத்தின் அரசர்கள் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். அகுஸ்துஸ் சீசர் முதல் ஒவ்வொரு உரோமை அரசர்களும் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். பழைய ஏற்பாட்டில் நான்கு வழிகளில் இந்த வார்த்தை பயன்படுகிறது. 1. வானதூதர்கள் கடவுளின் மகன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தொடக்க நூல் 6: 2 ல் ”மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப்புதல்வர் கண்டு…. ” என்று பார்க்கிறோம். 2. இஸ்ரயேல் நாடு கடவுளின் மகனாகக் கருதப்படுகிறது. ஓசேயா 11: 1 ”எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்”. இங்கே இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததும், அவர்களைக் கடவுள் அழைத்து வந்ததும் தெரியப்படுத்தப்படுகிறது. 3. ஒரு நாட்டின் அரசர், கடவுளின் மகனாக பார்க்கப்படுகிறார்....

மக்களுக்காக வாழ்ந்த இயேசு

கழுகுப்பார்வைகள், இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்க கூர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டன. எப்படியும் இயேசுவை தொலைத்துவிட வேண்டும் என்று, தலைமைச்சங்கத்தால் அனுப்பப்பட்ட குழு, இயேசுவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயேசுவின் ஒவ்வொரு அசைவும் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இயேசுவின் முன்னால், ஓய்வுநாளில் கைசூம்பிப்போன மனிதன், குணம் பெறுவதற்காக காத்திருக்கிறான். அந்த மனிதனுக்கும் தெரியும், ஓய்வுநாளில் சுகம்பெறுவது, தனக்கு சுகம் கொடுக்கிறவருக்கு தேவையில்லாத பிரச்சனைகளைத் தரும் என்று. ஆனால், அந்த மனிதன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குணம் பெறுவது ஒன்றையே இலக்காக வைத்திருக்கிறான். ஓய்வுநாளில் குணப்படுத்துவது வேலைசெய்வதாகும். உயிர்போகக்கூடிய சூழ்நிலையில் இருக்கிற ஒருவனுக்கு மட்டுமே, ஓய்வுநாளில் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் செய்தால், அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். ஏன் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இந்த சட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்று நமக்கு கேட்கத்தோன்றும். நமது பார்வையில், இதனைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், யூதர்கள் எந்த அளவுக்கு, இதனை கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம் என்றால்,...