Tagged: Daily manna

உலகம் பற்றிய நமது பார்வை

செல்வரும், இலாசரும் உவமை நமக்கு அருமையான சிந்தனைகளைத் தருகிறது. செல்வரைப்பற்றிய உயர்ந்த பார்வையும், ஏழைகளைப்பற்றிய தாழ்ந்த பார்வையும் இங்கே தவிடுபொடியாகிறது. இங்கு தீர்ப்பிடப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, இந்த சமூகத்தின் மட்டில் நமக்கு அக்கறை வேண்டும் என்கிற எண்ணத்தை இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பணக்காரனின் தவறாக இங்கே சித்தரிக்கப்படுவது அக்கறையின்மை. இந்த உலகத்தைப்பற்றிய அக்கறையின்மை. துன்பத்தைப் பார்த்தும், உதவி செய்ய ஆற்றல் இருந்தும் ஒருவிதமான பாராதத்தன்மை, மற்றவர்களின் வறுமையைப்பார்த்தும் உணர்வற்ற தன்மை. இவைதான் செல்வந்தனின் தண்டனைக்குக்காரணம். தன் கண்முன்னே ஒருவன், சாகக்கிடக்கிறான் என்பது தெரிந்தாலும், அதைப்பற்றிய சிறிதும் கவனம் எடுக்காத அவனுடைய உணர்வுகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படக்கூடியவை. இந்த உலகத்தோடு நாமும் ஒருவகையில் இணைந்தவர்கள் தான். நமக்கும் இந்த உலகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். நாம் விரும்பாவிட்டாலும், அதை நமது வாழ்வில் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால், அதுவே நமது அழிவுக்குக் காரணமாகிவிடும். அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

“துன்பக் கிண்ணம்”!

செபதேயுவின் மனைவி தன் மக்களுக்காக இயேசுவிடம் பதவிகள் வேண்டியபோது, அவர் கேட்ட கேள்வி: “ நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? யூதர்களின் நம்பிக்கையின்படி, அப்பத்தைப் பகிர்வது ஆசிர்வாதங்களைப் பகிர்வதற்குச் சமம். கிண்ணத்தைப் பகிர்வது என்பது துன்பங்களைப் பகிர்வதற்குச் சமம். இயேசு தம் சீடர்களிடம் தமது பாடுகளைப் பகிர்வதற்கு அவர்கள் ஆயத்தமா என்று வினவுகிறார். தாங்கள் சொல்வது என்னவென்று உணராமலே அவர்களும் “ஆம்” என்கின்றனர். இயேசுவோ அவர்களின் எதிர்கால பணிவாhழ்வை மனதில் கொண்டு, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்கிறார். யாக்கோபும், யோவானும் நல்ல சீடர்கள். அவர்கள் இயேசுவுடன் அப்பத்தையும் பகிர்ந்தனர். துன்பக் கிண்ணத்தையும் பகிர்ந்தனர். அவரது அன்பையும், ஆசிர்வாதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுபோல, அவரது பாடுகளிலும், துன்பங்களிலும் பங்கெடுத்தனர். உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்க வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் நல்ல உறவு. இன்று நமது உறவுகளை ஆய்வு செய்து நாம் துன்பக் கிண்ணத்திலும்...

இறைவனை மகிமைப்படுத்துவோம்

யூதர்களைப்பொறுத்தவரையில் அவர்களின் விசுவாச வாழ்வு என்பது தலைமுறை, தலைமுறையாக பரிமாறப்படுவது. தொடக்கத்தில் கடவுள் திருச்சட்டத்தை மோசேக்கு கொடுத்தார். மோசே அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார். யோசுவா அதை இஸ்ரயேலரின் பெரியவர்களிம் ஒப்படைத்தார். இஸ்ரயேலின் பெரியவர்கள் வாயிலாக திருச்சட்டம் இறைவாக்கினர்களிடம் கொடுக்கப்பட்டது. இறைவாக்கினர்கள் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களிடம் ஒப்படைத்தனர். இயேசு வாழ்ந்த காலத்தில் விசுவாச வாழ்விற்கு பொறுப்பானவர்கள் இந்த மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும்தான். எனவேதான், இவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பையும், புகழையும் எதிர்பார்த்தனர். எந்த அளவுக்கு என்றால், தங்களை கடவுளுக்கு இணையாக காட்டிக்கொள்வதுபோல தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தங்களை முன்னிறுத்தினர். இந்தப்பிண்ணனியில்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் இயேசு அவர்களுக்கு சாட்டையடி தருகிறார். பிரிந்து போன சபை சகோதரர் ஒருவர் கேட்டார்: நற்செய்தியிலே இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என அழைக்க வேண்டாம் என்றிருக்கிறதே? எதற்காக குருக்களை, உங்கள் மக்கள் ‘தந்தை’ என்று அழைக்கிறாhகள்;? என்று. இன்றைக்கு சம்பந்தமில்லாத, தொடர்பில்லாத கேள்விகளைக்கேட்பதில் பிரிந்துபோன...

கடவுளின் கொடை

திருச்சபை என்றால் என்ன? திருச்சபையில் பேதுருவின் பணி என்ன? பேதுருவின் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. எபேசியர் 2: 20 ல் பார்க்கிறோம்: ”திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்”. இங்கே திருச்சபையின் மூலைக்கல்லாக இயேசு சுட்டிக்காட்டப்படுகிறார். அவரில்லையென்றால், திருச்சபை உறுதியாக நிற்க முடியாது, என்று நாம் பொருள்படுத்தலாம். 1பேதுரு 2: 5 ”நீங்கள் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக!” இங்கே ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், திருச்சபையின் கற்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் இல்லையென்றால், திருச்சபை இல்லை. எனவே தான், சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது, தானே துன்புறுத்தப்படுவதாக இயேசு அவரிடம் சொல்கிறார். 1கொரிந்தியர் 3: 11 ல் பார்க்கிறோம், ”ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது”. மேற்சொன்ன அனைத்துமே, இயேசுதான் திருச்சபையின் ஆணி வேர் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது. அதாவது,...

ஏழைகளுக்குச் செய்யும் உதவி

கடவுள் நமக்கு தந்தையாக இருக்கிறார். நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். எந்த ஒரு தந்தையும், தனது பிள்ளை தனக்கு மதிப்பையும், மரியாதையையும் மற்றவர்கள் மத்தியில் கிடைக்கக்கூடிய அளவுக்கு, தனது பிள்ளை நடக்க வேண்டும், என்றுதான் நினைப்பார். தன்னுடைய பிள்ளையினால், தனக்கு மதிப்பும், புகழும் வரும்போது, அதனுடைய பூரிப்பில், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். நமது தந்தையாக இருக்கிற கடவுள் மகிழ்ச்சியடைய நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான், இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. இறைத்தந்தையின் பிள்ளைகளாக, அவரைப் பெருமைப்படுத்த நாம் செய்ய வேண்டிய காரியங்கள் கடினமானது அல்ல, மாறாக, மிக எளிதான காரியங்கள் தான். சின்னஞ்சிறிய சகோதர, சகோதரிகள் என்று இயேசுவால் அழைக்கப்படுகிற, ஏழைகள், எளியவர்கள், தேவையில் இருக்கிறவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை, கைம்மாறு கருதாமல் செய்வதுதான், இறைத்தந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல்கள். அதைச்செய்வதை, இந்த நற்செய்தி வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது. வானகத்தந்தையை மகிழ்ச்சிப்படுத்த, நம்மால் முடியாத, மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய...