Tagged: Daily manna

நீதியின் கடவுள்

எசாயா 42: 1 – 4 பகுதியிலிருந்து, மத்தேயு இயேசுவின் பணிவாழ்வை ஒப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டில், முதலில் இது பாரசீக அரசர் சைரசுக்கு ஒப்பிடப்படுகிறது. சைரஸ் தொடர்ந்து நாடுகளை வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார். அவருடைய வெற்றியை கடவுளின் திட்டமாகவே இறைவாக்கினர் எசாயா பார்த்தார். சைரஸ் அறியாமலேயே, கடவுள் அவரைப்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று அவர் நினைத்தார். இந்தப் பகுதி சைரஸ் அரசரைப்பற்றி எழுதப்பட்டதாக இருந்தரலும், இயேசுவுக்கான, இயேசுவின் பணிக்கான இறைவாக்காகவே இது பார்க்கப்படுகிறது. சைரஸ் குறிப்பிட்ட பகுதிகளை வெற்றி கொண்டார். இயேசுவோ இந்த அவனி முழுவதையும் வெற்றிகொண்ட வெற்றி வீரராக மதிக்கப்படுகிறார். இயேசுவின் முக்கியப்பணியாக இறைவாக்காகக் கூறப்படுவது, நீதியை அறிவிப்பது. நீதி என்கிற கிரேக்க வார்த்தையின் பொருள்: கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும், மக்களுக்குரியதை மக்களுக்கும் கொடுப்பது. இயேசு கடவுளுக்குரியதை கடவுளுக்கும், மக்களுக்கானதை மக்களுக்கும் கொடுப்பதற்காகவே வந்தார். எனவே தான், தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியது கிடைக்காமல் வாழ்ந்த, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக, அவர்கள் சார்பாக...

தாயன்பு

ஒரு தாய் தன் குழந்தையின் மீது ஒவ்வொரு மணித்துளியும் நினைவு வைத்திருப்பாள். அந்த குழந்தையின் தேவையை, அவளாகவே அறிந்து, அதனை நிறைவேற்றுகிறவள் தான் தாய். எந்த ஒரு தாயும் தன் குழந்தை வேதனைப்படுவதையோ, துன்பப்படுவதையோ விரும்பமாட்டாள். இந்த தாயன்பு தான், கடவுளின் அன்பாகச் சொல்லப்படுகிறது. இந்த தாயன்பை விட பல மடங்கு மேலானது கடவுளின் அன்பு. தாயன்பையே நாம் வியந்து பார்க்கிறோம். அப்படியென்றால், கடவுளின் அன்பு எந்த அளவிற்கு மகத்துவமானது என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ளலாம். சுமைகளால் சோர்ந்திருப்பவர்களை இயேசு அழைக்கிறார். வழக்கமாக, நண்பர்களின் மகிழ்ச்சியில் நாம் அதிகமாகப் பங்கெடுப்போம். அவர்களோடு மகிழ்ந்திருப்போம். ஆனால், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டுமென்றால், ”என்னுடைய நிலையே எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது” என்று, அதிலிருந்து ஒதுங்கிவிடுவோம். துன்பத்திலும், துயரத்திலும் பங்கெடுக்கிறவர்கள் வெகு குறைவுதான். ஆனால், இங்கே இயேசுவே முன்வருகிறார். அவராகவே முன்வந்து, நமது துன்பத்தில் பங்கெடுக்கிறார். நம்மை மீட்பதற்கு துணையாக இருக்கிறார். கடவுளின்...

இறை அனுபவம்

இயேசு தன்னுடைய அனுபவத்தை இங்கு விவரிக்கிறார். அவருடைய அனுபவம் என்ன? சாதாரண, எளிய மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஆளுகின்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ளுகின்றனர். இயேசு இங்கு அறிவு ஆற்றலை கண்டிக்கவில்லை. மாறாக, அறிவுச்செருக்கை சாடுகிறார். தன்னை ஏற்றுக்கொள்ளாததால் கோபப்படவில்லை. மாறாக, உண்மைக்கு அவர்கள் செவிசாய்க்காததால் கண்டனம் செய்கிறார். நற்செய்தியை அறிவுப்பூர்வமாக அணுகினால் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, இதயப்பூர்வமாக அணுக வேண்டும். சாலமோன் போல ஞரனத்தைப்பெற்றிருந்தாலும், குழந்தையின் இதயத்தையோ, எளிமையையோ, கடவுள் நம்பிக்கையையோ பெற்றிருக்கவில்லை என்றால், அதனால் பயன் ஒன்றும் இல்லை. யூதப்போதகர்களும் கூட இதை தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தனர். அறிவினால் அல்ல, எளிமையான நம்பிக்கையினால் கடவுளை அடைய முடியும் என்பது அவர்கள் ஏற்றுக்கொண்ட உண்மை. தங்களை விட சாதாரண மக்கள் கடவுளுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பது அவர்கள் உணராதது அல்ல. இருந்தபோதிலும் அவர்களின் அறிவுச்செருக்கு, கடவுளைப்பற்றி நாங்கள் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம் என்கிற மமதை, அவர்கள் கடவுளை...

நன்மை செய்ய சூளுரைப்போம்

தீயது செய்வது மட்டும் தவறல்ல, நல்லதைச் செய்யாமலிருப்பதும் தவறு தான். இன்றைய நற்செய்தியில் இயேசு, திருந்த மறுத்த நகரங்களைப்பார்த்து, மனமுடைந்து அவர்களின் அழிவை நினைத்து வேதனை கொள்கிறார். கடவுள் நம் அழிவில் மகிழ்ச்சி கொள்பவரல்ல. வேதனையுறுகிறவர். இஸ்ரயேல் மக்கள் செய்த தவறுக்குத்தான், அவர்கள் பலவேளைகளில் தண்டிக்கப்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டபோது, அவர்களை விட, அவர்களுக்காக வருந்தியவர், கடவுளைத்தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. அவர்கள் பல தவறுகளைச் செய்தார்கள். அதிலே ஒன்று, நன்மை செய்யாமலிந்தது. அதுவும் தவறுதான். நாம் தீயது செய்தால் தான், தவறு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நான் ஒன்றும் செய்யவில்லை. என்று, நன்மை செய்யாமலிருக்கும் ஒருவர் தப்பித்துக்கொள்ள முடியாது. அதுவும் தவறுதான். கடவுளின் தண்டனையைப் பெற்றுத்தரக்கூடிய அளவுக்கு, அந்த தவறு மிகப்பெரியது. எனவேதான், இயேசுவின் வாழ்வில் நாம் பார்க்கிறபோது, இயேசு சென்ற இடங்களில் எல்லாம், நன்மைகளைச் செய்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு, இயேசு நன்மை செய்வதை, ஒரு அளவுகோலாக...

உடனிருப்பும், ஒத்துழைப்பும்

இயேசுவின் போதனைகளை நாம் கேட்கிறபோது, நம்மால் அவரைப் பின்தொடர முடியுமா? அவருடைய போதனையில் நிலைத்து நிற்க முடியுமா? என்கிற சிந்தனைகள் நமது உள்ளத்தில் ஓட ஆரம்பிக்கிறது. நிச்சயம் இயேசுவின் போதனைகளை நமது வாழ்வில் ஏற்று, வாழ முயற்சிப்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும், நாம் அனைவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும், கடவுளுக்கு ஏற்புடையதாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்று நற்செய்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறது. நாம் போதனைகளை வாழ முயற்சி எடுத்து, அதில் நம்மால் வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், கிறிஸ்துவின் போதனைகளை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும் நமது உடனிருப்பையும், ஒத்துழைப்பையும் முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பது நமது விருப்பமாக இருக்கிறது. ஒரு ஓட்டப்பந்தயத்தில் பல வீரர்கள் ஓடுகிறார்கள். ஓடக்கூடிய அனைத்து வீரர்களையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதோ, தோல்வியடைவதோ, அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு தடையாக இருப்பது இல்லை. அதேபோலத்தான், கடவுளின் வார்த்தையை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும்...