Tagged: Daily manna

நம்பிக்கையிழந்த இளைய சமுதாயம்

நம்பிக்கை என்பது ஒரே சமதளத்தில் இருக்கக்கூடியது அல்ல. சில வேளைகளில் மிகுந்த நம்பிக்கை உணர்வு நம்மிடம் மேலோங்கியிருக்கும். பல நேரங்களில் நாம் நம்பிக்கை உணர்வு அற்றவர்களாக இருப்போம். அப்படிப்பட்ட மனநிலையைத்தான் சீடர்கள் தங்களது வார்த்தையில் பிரதிபலிக்கிறார்கள். நிச்சயமாக, இது குற்ற உணர்வில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். தங்களுடைய போதகரிடத்தில் உண்மையாக இல்லாத ஒரு நிலையில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். சாதாரண மனிதர்களின் நம்பிக்கை வாழ்வில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை, உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள். சீடர்கள் தங்களின் நம்பிக்கை உணர்வை அதிகப்படுத்தும்படியாக இயேசுவிடத்தில் கேட்கிறார்கள். ஒன்று மட்டும், சீடர்களின் வார்த்தையில் தெளிவாக இருக்கிறது. தங்களிடம் நம்பிக்கை குறைவு என்பதை, ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த நம்பிக்கைக் குறைவை இயேசு ஒருவரால் தான், சரிப்படுத்த முடியும் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு நம்பிக்கையை அதிகப்படுத்துவது, கடவுளின் வல்லமையால் மட்டும் தான் முடியும் என்பதை, இந்த நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. நமது வாழ்வில், நமது நம்பிக்கை இறக்கம் காண்கிறபோதெல்லாம், நாம் கடவுளின்...

தற்பெருமை வேண்டாம்

இயேசு, ”வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன்” என்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை எப்படிப்புரிந்து கொள்வது? இயேசு எதற்காக இதைச்சொல்கிறார்? இயேசு தனது பணியின் பயிற்சியாக, எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புகிறார். அவர்கள் தங்களது பணியை முடித்தபின் இயேசுவிடம் மகிழ்ச்சியோடு தங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொள்கிறார்கள். ”ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்று பெருமை பொங்கச்சொல்கிறார்கள். இதனுடைய பிண்ணனியில்தான் இயேசு மேற்கண்ட வார்த்தைகளைச்சொல்கிறார். இதற்கு இரண்டுவிதத்திலே பொருள் கொடுக்கலாம். 1. இயேசு கொண்டு வர விரும்பிய இறையாட்சிக்கான அறிகுறிகள் தான் சாத்தான் தோற்கடிக்கப்படுவது. ஏனென்றால், இருளின் ஆட்சி முடிந்து, சாத்தான் தோற்கடிக்கப்பட்டு, கடவுளின் அரசு மலரத்தொடங்கிவிட்டதற்கான அருங்குறிகள் தான் சீடர்களின் வெற்றி. 2. இயேசு சீடர்களின் தற்பெருமைக்கு எதிராக கொடுக்கின்ற எச்சரிக்கையாகவும் இதை எடுக்கலாம். ஏனென்றால், சாத்தான்கள் தற்பெருமையினால் கடவுளுக்கெதிராக கிளர்ந்தெழுந்த வானதூதர்கள். அவர்கள் தற்பெருமையினால் கீழே விழுந்தார்கள். சீடர்களும் பெற்றிருக்கிற சிறிய வெற்றியை வைத்து தற்பெருமை அடைந்துவிடக்கூடாது, என்று...

மனம்மாற அழைப்புவிடுக்கும் புதுமைகள்

இன்றைக்கு ஏராளமான புதுமைகளும், அற்புதங்களும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. திருப்பலியில் அப்பம், இயேசுவின் திரு உடலாக மாறக்கூடிய புதுமை, கன்னி மரியாளின் காட்சிகள், புனிதர்களின் பரிந்துரைகள் மூலமாக நோயாளிகள் குணமாகக்கூடிய புதுமைகள் என ஏராளமான புதுமைகள் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இந்த புதுமைகளின் நோக்கம் என்ன? எதற்காக புதுமைகள் நடக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்கு விடையாக வருவது தான், இன்றைய நற்செய்தி வாசகம். புதுமைகள் என்பது ஒருவரின் ஆற்றலை வெளிப்படத்தக்கூடியது அல்ல. மாறாக, கடவுளின் வல்லமை வெளிப்படக்கூடிய ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு, கடவுள் பெரியவர் என்பதைக் காட்டுவதற்காக அல்ல. கடவுளின் இரக்கத்தை நாம் அதிகமாகப் புரிந்து கொள்வதற்காக. நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்காகத்தான் புதுமைகள் நடந்தேறுவதாக இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அறிய வருகிறோம். திருந்த மறுத்த நகரங்களில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அந்த புதுமைகள் கடவுளின் இரக்கத்தைக் குறித்துக்காட்டுவதற்காக செய்யப்பட்ட புதுமைகள். மக்கள் கடவுளை கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நிகழ்த்தப்பட்ட புதுமைகள்....

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா

ஈனோக்கு எழுதிய நூல், ஏவபடாத நூலாக பார்க்கப்படுகிறது. எனவே அது விவிலியத்தின் ஒரு நூலாக இணைக்கப்படவில்லை. அது யூதப்பாரம்பரியத்திலிருந்து வந்த நூல். ஏவப்படாத நூலாக இருந்தாலும், விவிலிய வரலாற்றுப்பிண்ணனியை அறிந்து கொள்ள அது கொஞ்சம் உதவுகிறது. கடவுளுடைய திருமுன்னிலையில் ஏராளமான வானதூதர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் முதன்மைத் தூதுவர்களாக ஏழு பேர் இருக்கிறார்கள் என இந்த புத்தகத்திலிருந்து நாம் அறிய வருகிறோம். அவர்கள், கபிரியேல், மிக்கேல், இரபேல், உரியல், இரகுவேல், ரெமியேல், செரேகுவேல். அவர்களில் முதன்மைத்தூதுவர்களாக குறிப்பிடப்படுகிறவர்கள் இன்றைக்கு நாம் திருவிழாவைச்சிறப்பிக்கிற கபிரியேல், மிக்கேல், இரபேல். மிக்கேல் மற்றும் கபிரியேல் தூதுவர்கள் இஸ்லாம் சமயத்திலும், யூத சமயத்திலும் தூதுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். கத்தோலிக்க விவிலியத்தில் தோபித்து புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், தோபித்து புத்தகத்தை “உறுதிப்படுத்தப்பட்ட” புத்தகமாக மற்ற கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளாததனால், இபேலையும் ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்கத்திருச்சபையின் பாரம்பரியப்படி, எண்ணற்ற தூதுவர்கள் கடவுள் திருமுன்னிலையில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, ஆர்ப்பரித்து, கடவுளை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே...

இயேசுவைப் பின்பற்றுவோம்

நாம் அனைவருமே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தி (+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62 ) வாசகத்தின் சாராம்சம். இன்றைக்கு பல புனிதர்களை தாய்த்திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. இந்த புனிதர்கள் அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா? என்று, நாமே வியந்து பார்த்தவர்கள். நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்தில் வாழ்ந்த, புனித அன்னை தெரசா இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நவீன காலத்திலும் ஏழை, எளிய மக்கள் மீது அன்பு கொண்டு, சிறப்பான வாழ்வை வெளிப்படுத்தியவர்கள் நமது நாட்டில் பணிபுரிந்த இந்த புனிதை. எப்படி இவர்களால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடிந்தது என்றால், அவர்களது எளிமையான பதில், இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்த அந்த வாழ்க்கை தான், அவர்களால் இப்படிப்பட்ட சிறப்பான வாழ்வை வாழ, உறுதுணையாக இருந்தது. இயேசு தான், நமக்கு வழிகாட்டி. முன்மாதிரி. திருத்தூதர்கள் இயேசுவை பின்பற்றி தான்,...