Tagged: Daily manna

யெருசலேமின் மேன்மை

யெருசலேம் தேவாலயம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மையமாக இருந்தது. அது ஏதோ வானுயர்ந்த, மகிமைக்குரிய கட்டிடம் மட்டும் அல்ல. மாறாக, அது கடவுளின் பிரசன்னம் நிறைந்த இடம். கடவுள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. பகைவர் முதலில் கைப்பற்ற விரும்பும் இடமாகவும், அது கருதப்பட்டது. அப்படிப்பட்ட யெருசலேமையும், அதன் மையத்தில் அமைந்திருந்த தேவாலயத்தையும் பார்த்து, இயேசு இறைவாக்கு உரைக்கிறார். இயேசுவின் இறைவாக்கு அவரின் உயிர்ப்பிற்கு பிறகு வரலாற்றில் நிறைவேறியது. கி.பி. 70 ம் ஆண்டில், உரோமைப்படைகள் யெருசலேமிற்குள் நுழைந்தன. கற்கள் மேல் கற்கள் இராதபடி, அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான பேர் நாடு கடத்தப்பட்டனர். தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. யெருசலேம் கடவுளுக்கு பிரியமான இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான், அங்கு அவருடைய பிரசன்னத்தைக் காட்டினார். ஆனாலும், இடம் மட்டும் கடவுள் வாழ்வதற்கான காரணமாகிவிடாது. மனிதர்களும் விசாலமானவர்களாக இருக்க வேண்டும். யெருசலேம் கள்வர்களின் குகையாகிப்போனது. ஏழை, எளியவர்களை...

கடவுளின் பராமரிப்பில் வாழ்வோம்

ஆலயத்தின் பெண்களுக்கான இடத்தினருகே, 13 காணிக்கைப்பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. எக்காளம் போன்ற அமைப்பில் அவைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனுடைய மேற்புறம் குறுகியும், கீழ்ப்புறம் அகன்றும் காணப்பட்டிருந்தன. ஒவ்வொரு காணிக்கைப்பெட்டிகளும் ஒவ்வொரு நோக்கத்திற்கானவை. ஆலயத்தில் பலிபொருட்களை எரிப்பதற்குப் பயன்படும் விறகுகளை வாங்க, ஆலயப்பொருட்களை பராமரிக்க, நறுமணப்பொருட்கள் வாங்க என்று பல தேவைகள் ஆலயத்திற்கு இருந்தன. அவற்றை நிறைவேற்ற, இந்தக்காணிக்கைப் பயன்படுத்தினர். இயேசு இந்தக்காணிக்கைப்பெட்டிகள் இருந்த இடத்திற்கு அருகே அமர்ந்திருக்கிறார். செல்வந்தர்களும் காணிக்கைப் போடுகின்றனர், ஏழைக்கைம்பெண்ணும் காணிக்கைப் போடுகின்றார். செல்வந்தர்கள் அதிக பணத்தைக் காணிக்கையாக செலுத்துகின்றனர். ஏழைக்கைம்பெண்ணோ, தன் பிழைப்பிற்காக வைத்திருந்த அனைத்தையுமே போட்டு விடுகிறாள். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப்போகிறேன்? என்பது தெரியாது. யாராவது எனக்கு உதவுவார்களா? அவளுக்கு தெரியாது. ஆனால், கடவுளின் பராமரிப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் அவளின் அந்தக்காணிக்கை. அவளின் நம்பிக்கை பணத்தில் அல்ல, கடவுளின் பராமரிப்பில். இந்த இரண்டு காசுகளும் கடவுள் எனக்குத்தந்தது. அதைக்கடவுளுக்கே காணிக்கையாக்குகிறேன் என்று,...

இயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர்

அரசர் என்பவர் யார்? ஓர் அரசர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? எப்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த உதாரணம். இந்த உலகம் ஏற்றுக்கொள்வது போன்ற அரசர் இயேசு அல்ல. காரணம், அவர் அரசரின் வாரிசு அல்ல. தச்சரின் மகன். போரில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியவரும் அல்ல. ஆனால், மக்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்டு, குறிப்பாக, ஏழை, எளியவர்கள் நடுவில் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒப்பற்ற அரசர். அவர்கள் வாழ்வை உயர்த்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்தவர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறபோது, மற்றவருக்கு உதவி செய்ய மனமிருக்கலாம். அப்படி இருப்பவர்கள் கூட இன்றைக்கு அரிதாகி விட்டார்கள். ஆனால், துன்பத்தில் இருக்கிறதுபோது, தனது உயிரே ஊசலாடிக்கொண்டிருக்கிறபோது, தனது நிலையே மற்றவர்களால் பரிதாபப்படுகிறதுபோல இருக்கிறபோது, ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்கிறார் என்றால், அதுதான் ஒரு அரசரின் உணர்வாக இருக்க வேண்டும். அதுதான் நம்மை ஆளுகிறவர்களின் வாழ்க்கையாக...

கடவுளின் முடிவில்லா ஆட்சி

சதுசேயர்கள் பலவற்றை யூத மதத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறியப்படுவது உயிர்த்தெழுதலை வைத்துதான். உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாமை தான், சதுசேயர்களின் அடையாளமாக இருந்தது. சதுசேயர்களும் யூத மதத்தின் ஒரு பிரிவினர் தான். ஆனால், பரிசேயர்கள் அவர்களை அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பியவர்கள். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பரிசேயர்கள் விவிலியத்தை கடவுளின் வார்த்தையாகவே முழுமையாக நம்பியதால், உயிர்த்தெழுதல் உண்டு என்றே நம்பினர். லூக்கா நற்செய்தியாளர் இயேசு வழியாக இந்த உவமையைச் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. யூதர்கள் உரோமையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது கி.பி முதல் நூற்றாண்டிலும், எருசலேமையும், அதன் ஆலயத்தையும் அழித்தபோது, ஆயிரக்கணக்கான யூதர்கள் கணக்கின்றி கொல்லப்பட்டனர். உரோமையர்களின் கொலைவெறித்தாக்குதலில் இறந்தவர்கள் கடவுளின் வாக்குறுதிப்படி உயிர்த்தெழுவார்கள் என்கிற நம்பிக்கையை நற்செய்தியாளர் அந்த மக்களுக்கு விதைக்கிறார். இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைக் கொன்றழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டிருந்த உரோமையர்களுக்கும் சவுக்கடி கொடுக்கும்விதமாக எழுதப்படுகிறது. கடவுள் தன் மக்களுக்கு வாக்களித்த...

இயேசுவின் சமுதாய சீர்திருத்தம்

ஒவ்வொரு யூதரும் ஆண்டிற்கு ஒருமுறை ஆலயவரி செலுத்த வேண்டும். அதற்கு செக்கேல் எனப்படும் நாணயத்தின் பாதி மதிப்பில், இந்த வரியைச் செலுத்த வேண்டும். இது ஒரு தொழிலாளியின் இரண்டு நாள் கூலிக்கு இணையானது. பாஸ்கா திருவிழா கொண்டாடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, இந்த காணிக்கையைப் பிரிப்பதற்காக, ஆங்காங்கே எல்லா நகர வீதிகளிலும், கிராமங்களிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வரிவசூலிக்கப்படும். பெரும்பாலும், யெருசலேமில் பாஸ்கா விழா கொண்டாட வரும் பயணிகள் தான், இதில் அதிக எண்ணிக்கையில் கொடுப்பார்கள். பாலஸ்தீனத்தில் அனைத்து வகையான நாணங்களும் புழக்கத்தில் இருந்தன. கிரேக்க நாணயம், உரோமை நாணயம், சிரிய நாணயம், தீர் நாணயம், எகிப்து நாணயம் என்று, பல நாணயங்கள் இருந்தன. அவைகளுக்கான சரியான மதிப்புகளும் சரியான விகிதத்தில் பாலஸ்தீனத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால், நாணயம் மாற்றுவோருக்கு ஆலயத்தில் என்ன வேலை என்று கேட்கத்தோன்றும்? யெருசலேம் ஆலயத்தில் செலுத்தப்படும், இந்த ஆலய வரி எல்லா நாட்டு நாணயத்திலும் கொடுக்க முடியாது. யெருசலேமில்...