Tagged: Daily manna

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம் (+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27). தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக? அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது....

கடவுளை ஏற்றுக்கொள்ள …

“என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்று இயேசு கூறுகிறார்? இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு எது தடையாக இருக்கிறது? நாம் இயேசுவிடத்தில் செல்வதற்கு என்ன தயக்கம்? இயேசுவை ஏற்றுக்கொள்வது எளிதானது போல தோன்றினாலும், அது சவால்கள் நிறைந்த பாதையாக இருக்கிறது. அதுதான் இங்கே தடையாக, தயக்கமாக இயேசுவால் சுட்டிக்காட்டப்படுகிறது. இன்றைக்கு இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு நம்முடைய பதவி, நாம் பெற்றிருக்கிற பட்டங்கள், நாம் சேர்த்து வைத்திருக்கிற செல்வங்கள் தடையாக இருக்கிறது. ஏனென்றால், நாம் இயேசுவின் மீது நாட்டம் வைத்திருப்பதை விட, மேற்சொன்னவைகள் மீதுதான் அதிக நாட்டம் வைத்திருக்கிறோம். அதுதான் நமக்கு பெரியதாகத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட எண்ணங்களை மாற்றுவது என்பது எளிதானது அல்ல. ஏனென்றால், நாம் வாழக்கூடிய இந்த உலகமும் இதுபோன்ற சிந்தனைகளை நமக்குத் தந்துகொண்டே இருக்கிறது. நாம் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு இவையெல்லாம் தடையாக இருக்கிறதா? தடையாக இருந்திருக்கிறதா? என்று சிந்திப்போம். எந்நாளும் நாமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வதற்கு, கடவுளின் அருள் வேண்டி மன்றாடுவோம். ~ அருட்பணி....

நம்பிக்கையினால் வாழ்வு !

கி.மு. 600 ஆம் ஆண்டையொட்டி யூதா நாட்டில் வாழ்ந்த இறைவாக்கினர்தான் அபக்கூக்கு. வடக்கிலிருந்து பாபிலோனியர்கள் படையெடுத்து வந்து தாக்கும் ஆபத்து எப்போதும் சூழ்ந்திருந்தது. யூதாவிலோ நாட்டின் ஒற்றுமையும், நீதியும் குலைந்து, வலியோர் எளியோரை ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் அபக்கூக்கு இறைவாக்குப் பணியில் ஈடுபடுகிறார். கயவர்களை ஏன் இறைவன் தண்டிக்காமல் விட்டுவைக்கிறார்? பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும்போது இறைவன் ஏன் மௌனமாய் இருக்கிறார்? என்னும் கேள்விகளை அபக்கூக்கு எழுப்பி, அவற்றுக்கு விடை காண முயல்கிறார். பன்னெடுங்காலமாக மானிட இனத்தைத் தட்டி எழுப்பும் கேள்வி அல்லவா இது! ஏன் இந்த உலகில் தீமை? ஏன் தீயவர்கள் தழைக்கிறார்கள், நல்லவர்கள் துன்புறுகிறார்கள்? இக்கேள்விக்கு விடை காண முயலும் இறைவாக்கினருக்கு ஆண்டவர் தரும் பதில்: நம்பிக்கையோடிருங்கள். எனவேதான், மிகப் பிரபலமான இந்த வார்த்தைகளோடு இன்றைய முதல் வாசகம் நிறைவுக்கு வருகிறது: “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்”. மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நேர்மையுடையவர்கள் தம் நம்பிக்கையினால்...

நாம் வாழப்போகும் வாழ்க்கை

முரண்பாடுகளின் உலகம் நாம் வாழக்கூடியது. இங்கே குறைகள் சொல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகம். நல்லவற்றைப் பாராட்ட வேண்டும் என்பதோ, குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதோ, இங்கேயிருக்கிற மனிதர்களுக்கு பழக்கமல்ல. ஒருவர் எதைச்செய்தாலும் அதில் எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம் என்கிற மனப்பான்மை தான், இன்றைய தலைமுறையினரிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இயேசுவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த முரண்பாட்டை விளக்குகிறார். இயேசு வாழ்ந்த போது, திருமுழுக்கு யோவானும் அவருடைய சமகாலத்தவராக இருந்தார். திருமுழுக்கு யோவான் ஒருவிதமான தவ வாழ்க்கையை வாழ்ந்தவர். தன்னை முழுமையாக வருத்திக் கொண்டவர். ஆடம்பரங்களை விரும்பாதவர். தனிமையை விரும்பி, தனிமையாக வாழ்ந்தவர். இயேசு மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக வாழ்ந்தவர். இரண்டு பேரையும் மக்கள் குறைகூறினார்கள். ஒருவரைப் பற்றி சொன்ன குறையைத்தான் மற்றவர் வாழ்ந்தார். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வையும் மக்கள் குறைகூறினார்கள். நமது வாழ்க்கையில் நாம் குறைகூறுகிறவர்களாக இருக்கிறோமா? அடுத்தவர் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்யும்போது, அதனைப்...

அமல உற்பவ அன்னை விழா

நமது கத்தோலிக்க மறைக்கல்வி பாவத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது. பிறப்பு வழிப் பாவம், செயல் வழிப் பாவம். கடவுள் இந்த உலகத்தைப் படைத்து அனைத்தும் நல்லதென இருப்பதாகக் கண்டார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைக்கிறார். ஆனால், நமது முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்து, தாங்கள் பெற்றுக்கொண்ட அருள்வாழ்வை இழந்து விடுகிறார்கள். இதுதான் உலகத்தில் துன்பத்தைக் கொண்டு வந்ததாக, நாம் நம்புகிறோம். பிறக்கக்கூடிய குழந்தைகள் அனைத்துமே பிறப்புவழிப்பாவத்தோடு தான் பிறக்கிறார்கள். இதுதான் பிறப்பு வழிப் பாவம். தந்தையாகிய கடவுள், தனது மகன் பிறப்பதற்கு அன்னை மரியாளைத் தேர்ந்து கொண்டார். எனவே, மரியாளுக்கு மிகுதியான அருளைப்பொழிந்து மாசற்ற நிலையில், பிறப்பு வழிப்பாவம் அவரைத் தீண்டாத வகையில் காத்துக்கொண்டார். மீட்பரின் தாயாக கடவுள் அவரைத் தேர்ந்து கொண்டதால், மீட்பரின் பேறுபலன்கள் அவருக்கு முன்பே வழங்கப்பட்டது. இதனை நாம் விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். அன்னை மரியாள் எவ்வாறு தனது உடலால், உள்ளத்தால், ஆன்மாவால்...