”ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்”
நன்றி என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த நன்றி என்ற சொல்லின் பொருள் அறியாது, நன்றி இல்லாத ஒரு தன்மை இந்த உலகத்தில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, நாம் வாழக்கூடிய இந்த உலகம், மற்றவர்களைப் பயன்படுத்த அதிக முயற்சி எடுக்கிறது. எந்த அளவுக்கு மற்றவர்களைப் பயன்படுத்தி இலாபம் அடைய முடியுமோ, அந்த அளவுக்கு மற்றவர்களைப் பயன்படுத்துவதில் அதிக மெனக்கெடுகிறது. பயன்படுத்திய பிறகு, அவர்களை தூர எறிந்துவிடுகிறது. இதுதான் நாம் வாழக்கூடிய உலகம். ஆனால், திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய தேவைக்கு மட்டும் பயன்படுத்துகிறவராக இல்லை. அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்து நலன்களுக்காகவும் நன்றி செலுத்துகிறார். அந்த நன்றியின் வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல் (திருப்பாடல் 116: 12 – 13, 14 – 15, 18 – 19). கடவுளிடத்தில் கேட்டதைப் பெற்றுவிட்டோம், இனி கடவுள் தேவையில்லை என்று, அவர் கடவுளை விட்டு விலகவில்லை....