Tagged: Daily manna

இயேசுவின் வாழ்வு

நமது குழந்தைகளுக்கு பிறந்தநாள் வருகிறபோது, அவர்களை ஆலயத்திற்கு கொண்டு சென்று, திருப்பலியில் கலந்துகொண்டு, அருட்பணியாளர்களிடம் சிறப்பாக செபிக்கச் சொல்வோம். அதுபோல, பெரியவர்களிடமும் நாம் அவர்களைக் கொண்டு செல்வோம். இது எல்லா மக்கள் மத்தியிலும் காணப்படக்கூய ஒரு நிகழ்வு. இதைத்தான் யூதப்பாரம்பரியத்தில் வாழ்கின்ற பெண்களும் செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளை, மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு போதகர், ஆசீர்வதிக்க வேண்டுமென கொண்டுவருகிறார்கள். இயேசு தன்னிடம் கொண்டு வரப்பட்ட குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்கு தயாராக இருக்கிறார். தனக்கு களைப்பு இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், குழந்தைகளைச் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார். குழந்தைகள் யூத சமுதாயத்தில் பொருளாக பார்க்கப்பட்டவர்கள். வயதுவருகிறவரை, அவர்கள் பெற்றோரின் அரவணைப்பில் தான் வளர முடியும். பெண் குழந்தை என்றால் மதிப்பே கிடையாது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் குழந்தைகளையும் இயேசு அரவணைப்பது, மிகப்பெரிய ஒரு நிகழ்வாக இருக்கிறது. கடவுள் தனக்கு கொடுத்த ஆசீரை, மற்றவர்களுக்கு எப்போதெல்லாம் கொடுக்க முடியுமோ, எந்த வழியில் எல்லாம் கொடுக்க முடியுமோ,...

உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்

கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கினார். இந்த கட்டளைகள் பத்து கட்டளைகளாக தரப்பட்டிருந்தாலும், அந்த கட்டளைகள் காட்டும் நெறிமுறைகளாக நாம் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் அன்பு. இந்த அன்பு என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தான் அனைத்து கட்டளைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக, “களவு செய்யாதிருப்பாயாக” என்பது பத்துக்கட்டளைகளுள் இருக்கக்கூடிய ஒரு கட்டளை. வெளிப்படையாக இது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதாக இருந்தாலும், சற்று ஆழமாக நாம் சிந்தித்துப்பார்க்கிறபோது, அதனுள் இருக்கிற உண்மையான பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு பொருளை உழைத்து ஒருவர் சம்பாதிக்கிறார். அந்த பொருள் அவருக்குரியது. அவருடைய உழைப்பில் நாம் பெறக்கூடியது. மற்றவரின் பொருளை நாம் திருடுகிறபோது, அவரிடத்தில் நமக்கு அன்பு இல்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். அந்த மனிதரிடத்தில் நமக்கு அன்பு இருந்திருந்தால், நிச்சயம் நாம் அதை எடுக்க நமது மனம்...

இயேசுவின் இதயத்தை பெற்றிருப்போம்

நாம் பேருந்திற்காக காத்திருக்கிறபோது, நாம் இரயிலில் பயணம் செய்கிறபோது பிச்சைக்காரர்கள் நம்மிடத்தில் பிச்சை கேட்டு வருகிறபோது, ”இவர்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா?” என்று நமக்குள்ளாக கடிந்திருப்போம். ”உழைத்து சம்பாதிக்க வேண்டியதுதானே?” என்று அறிவுரை கூறியிருப்போம். இல்லையென்றால் பாராமுகமாய் இருந்திருப்போம். நாம் மட்டுமல்ல, அனைவருமே இப்படித்தான் பிச்சைக்காரர்களைப் பார்ப்போம். ஆனால், நம்மிடம் உதவி கேட்டு வரும் அனைவரையுமே, இயேசுவாக பார்க்க வேண்டும் என்று நற்செய்தி அழைப்புவிடுக்கிறது. இயேசுவை நாம் பார்த்ததில்லை. அவருடைய தோற்றத்தை நாம் அறிந்திருக்கவில்லை. ஆனால், உதவி கேட்டு இயலாமையில் வரும் அனைவருமே, இயேசுவின் சாயலில் உள்ளவர்கள் என்பதை, இயேசுவின் வார்த்தைகள் நமக்கு தெளிவாக்குகிறது. இந்த நற்செய்தி இரண்டு எளிய சிந்தனைகளை நமது மனதில் பதிக்கிறது. 1. நாம் இயேசுவின் மனநிலையில் பார்க்க வேண்டும். 2. நாம் இயேசுவை அவரில் பார்க்க வேண்டும். இந்த இரண்டு மனப்பாங்கும் நம்மிடம் இருக்கிறபோது, நிச்சயம் நம்மால் மற்றவர்களை அன்பு செய்ய முடியும். மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும்....

நற்செய்தி அறிவிக்கிற சீடர்களாக வாழ……

பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு தான் வாக்களித்த தேசத்தைத் தருகிறார். வாக்களிக்கப்பட்ட மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், விரைவில் அவர்கள் தங்கள் கடவுளை மறந்துவிட்டு, கடவுளை விட்டு விலகிச்செல்கிறார்கள். அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கிறார்கள். அடிமைகளாக மாறுகிறார்கள். இந்த நேரத்தில் தங்களின் இந்த நிலைமைக்கு காரணம் தங்களுடைய பாவம் தான் என்பதை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு வேண்டுகிறார்கள். கடவுளும் அவர்களை மீட்பதற்கு மெசியாவை அனுப்புவதாக வாக்குறுதி தருகிறார். எனவே, இஸ்ரயேல் மக்கள் வாக்களிப்பட்ட மெசியாவிற்காக காத்திருக்கிறார்கள். இந்தப்பிண்ணனியில் தான் பேதுரு இயேசுவை “மெசியா” என்று சொல்கிறார். இயேசு கிறிஸ்து பேதுரு தன்னைப்பற்றி “தான் மெசியா, உலகிற்கு வரவிருந்தவர்” என்று கூறியதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அதேவேளையில் தான் மெசியா என்பதை எவருக்கும் சொல்ல வேண்டாம் என்பதைக் கண்டிப்பாகக்கூறுகிறார். எதற்காக இயேசு தான் மெசியா என்பதை மற்றவர்கள் அறிவதைத்தவிர்க்க வேண்டும்? இயேசுவுடனான நம்முடைய உறவு தனிப்பட்ட உறவு. மற்றவர்கள்...

ஆண்டவரையே நம்பியிரு. அவரே உன் சார்பில் செயலாற்றுவார்

ஆண்டவரை நம்பியிக்க திருப்பாடல் (திருப்பாடல் 37: 3 – 4, 18 – 19, 27 – 28, 39 – 40) ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார். ”நம்புதல்” என்கிற வார்த்தையின் பொருள் என்ன? நம்பிக்கை என்பது கடவுள் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்வது கிடையாது. இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என இரண்டு வகைகளாக மனிதர்களைப் பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யார்? கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள். அவர்கள் கடவுளைப் பார்த்தது கிடையாது. ஆனால், அது ஒருவிதமான நம்பிக்கை. கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் யார்? கடவுள் இருக்கிறார் என்பதை நம்பாதவர்கள். இவர்கள் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருக்கலாம். இங்கு நம்பிக்கை என்று சொல்லப்படுவது, கண்ணால் காண முடியாத கடவுள் ஒருவர் இருக்கிறார் என்கிற வெறுமனே நம்பிக்கை மட்டும் அல்ல, மாறாக, இந்த இறைவன் என்னை அன்பு செய்கிறார் என்கிற உறுதிப்பாடு. அவர் என்னை வழிநடத்துகிறார் என்கிற...