Tagged: Daily manna

ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்

கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு மத்தியில் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள் நமக்கு ஒரு சில கேள்விகளை எழுப்புகிறது. நாம் மன்றாடுகிற நாளில் மட்டும் தான், கடவுள் நமக்கு உதவி செய்வாரா? நம்மை வழிநடத்துவாரா? நாம் மன்றாடவில்லை என்றால், அவர் நமக்கு துணைநிற்க மாட்டாரா? என்ற கேள்விகள் நம் உள்ளத்தை அரிக்கிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது? கடவுள் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தார் என்கிற வரிகள், கடவுள் நமக்கு வழங்கியிருக்கிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுள் இந்த உலகத்தைப் படைத்து, நமக்கு வாழ்வையும் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் கொடுத்த கடவுள், அவரே நம்மை இயக்கினால், நாம் பெற்றுக்கொண்ட வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, அவர் நமக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார். நன்மை எது? தீமை எது? என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். தொடக்கநூலில் நமது முதல் பெற்றோரிடம், இந்த உலகத்தை ஒப்படைத்தபோது, கடவுள் இதைத்தான் சொல்கிறார். ”தோட்டத்தில் இருக்கும் எந்த...

பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது

திருப்பாடல் 51: 1 – 2, 10 – 11, 16 – 17 இஸ்ரயேல் மக்கள் வாழ்வில், கடவுளுக்கு பலி செலுத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்கு அதிக அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். லேவியர் புத்தககத்தில் நாம் வாசித்துப் பார்த்தால் பலி செலுத்துவது பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகப் பார்க்கலாம். எதையெல்லாம் பலி செலுத்த வேண்டும்? எப்படி பலி செலுத்த வேண்டும்? என்று பல ஒழுங்குமுறைகளை இஸ்ரயேல் மக்கள், லேவியர் நூலைப் பின்பற்றி கடைப்பிடித்தார்கள். ஆக, பலி செலுத்துவது இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்று என்பது தான், இங்கு நாம் அறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எதற்காக பலி செலுத்தப்படுகிறது? கடவுள் நம்மிடமிருந்து பலி வேண்டுவதில்லை. அவருக்கு அது அவசியமுமில்லை. நாம் புதிதாக பலி என்று ஒன்றை செலுத்திவிட முடியாது. ஏனென்றால், நாம் செலுத்தக்கூடிய காணிக்கையும் அவருடைய அருளினால் தான் பெற்றிருக்கிறோம். பின் ஏன் பலி...

நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்

திருப்பாடல் 34: 3 – 4, 5 – 6, 15 – 16, 17 – 18 நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலுமிருந்து விடுவிக்கின்றார் என்று ஆசிரியம் பாடுகிறார். நீதிமான் யார்? என்ற அடிப்படை கேள்வி நம் நடுவில் எழுகிறது. எசேக்கியேல் 18: 9 இதற்கான விளக்கத்தைத் தருகிறது, ”என் நியமங்களையும், நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்”. கடவுளுடைய நியமங்களையும், கடவுள் வகுத்து தந்திருக்கிற நீதி நெறிகளையும் கடைப்பிடிக்கிறவன் தான் நீதிமான். நாம் கடவுள் நமக்கு வகுத்து தந்திருக்கிற நெறிகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், நாம் நீதிமான்களாக வாழ ஆரம்பிக்கிறோம். நீதிமான்களுக்கு கடவுள் தரும் சிறப்பு என்ன? அனைத்துத் துன்பங்களிலுமிருந்து அவர்களை விடுவிக்கின்றார். கடவுள் துன்பங்களே கிடையாது என்று சொல்லவில்லை. மாறாக, துன்பங்கள் வருகிறபோது, அவர்களுக்கு விடுதலை தருவேன் என்கிறார். அப்படியென்றால், நீதிமான்களுக்கு துன்பங்கள் வருமா? நிச்சயம். நாம் கடவுள் வகுத்திருக்கிற நியமங்களின்படி...

ஆண்டவரே இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்

இரக்கத்தின் பரிமாணங்களாக நாம் பலவற்றைப் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் பரிமாணங்களும் முக்கியமான ஒன்று மன்னிப்பு. அந்த மன்னிப்பு பற்றிதான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொதுவாக, நாம் கடவுளிடத்தில் செபிக்க வருகிறபோது, நமது மனநிலை எப்படிப்பட்ட மனநிலையாக இருக்கிறது? ஒருபோதும் மன்னிப்பிற்காக நாம் செபிப்பது கிடையாது. கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்காக மன்றாடுவது கிடையாது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் கடவுளிடம் செபிக்கிறோம், கடவுளைப் புகழ்கிறோம். ஆக, தேவையை நிறைவேற்றுவது தான், நமது செபத்தின் மையக்கருத்தாக இருக்கிறது. ஆனால், இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் நாம் செபிக்க வேண்டும். அதனையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. இந்த திருப்பாடலை(திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 10 – 11, 12, 150)  “மன்னிப்பின் பாடல்“ என்று நாம் சொல்லலாம். கடவுளின் மன்னிப்பிற்காக, கடவுளின் அருளுக்காக, தாவீது கதறிய பாடல் தான் இந்த திருப்பாடல். இந்த திருப்பாடல்...

ஆண்டவரே! உமது வழியை எனக்குக் கற்பியும்

இந்த திருப்பாடல் (திருப்பாடல் 86: 1 – 2, 3 – 4, 5 – 6, 11) “தாவீதீன் செபம்” என்று சொல்லப்படுகிறது. இது ஏதோ குறிப்பிட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட திருப்பாடல் அல்ல. மாறாக, அன்றாட வாழ்க்கையில் தாவீது கடவுளோடு பேசக்கூடிய வார்த்தையாக இது நம்பப்படுகிறது. கடவுளின் தயவு, வழிகாட்டுதல், செய்யக்கூடிய எல்லாக்காரியங்களிலும் கிடைக்க வேண்டி பாடப்பட்ட, விண்ணப்பப்பாடல் தான், இந்த திருப்பாடல். இந்த திருப்பாடலை நாம் தியானிக்கிறபோது, வெறும் உதடுகளால் மட்டும் வார்த்தைகளைச் சொல்லாமல், உள்ளத்தோடு இணைந்து, கடவுளிடத்தில் வேண்டுதலை எழுப்ப வேண்டும். ஒவ்வொருநாளும் நமது வாழ்க்கையில் புதிய நாளைத் தொடங்குகிறபோது, கடவுளிடம் இந்த திருப்பாடலைச் செபித்து, அவருடைய வழிநடத்துதலைக் கேட்கலாம். ஒவ்வொருநாளும் பல முடிவுகளை நமது வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். படிக்கிற மாணவர்கள் முதல் வீட்டில் இருக்கிற பெரியவர்கள் வரை, ஒவ்வொருவரும் முடிவு எடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார். அந்த முடிவுகளை...