நம்பிக்கைதான் வாழ்க்கை
இஸ்ரயேல் மக்களின் கடவுள் அனுபவம் தான் விவிலியத்தின் பழைய ஏற்பாடு. நாடோடிகளாக, நாடே இல்லாமல், தங்களை வழிநடத்த அரசர் இல்லாமல், போர்த்தந்திர முறைகள் தெரியாமல் வாழ்ந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களாக, ஒடுக்கப்பட்ட மக்களாக அறியப்பட்டார்கள். ஆனால், அவர்களைச்சுற்றிலும் பெரிய நிலப்பரப்புகளோடு, வழிநடத்த அரசர்களோடு, போர்த்தந்திர முறைகளோடு பாபிலோனியர்கள், அமலேக்கியர்கள், கானானியர்கள் எனப் பலர் வாழ்ந்து வந்தனர். இஸ்ரயேல் மக்களின் ஒரே நம்பிக்கை அவர்கள் வழிபட்டு வந்த ‘யாவே’ இறைவன். சிறிது காலங்களுக்குப்பின் அவர்கள் நாடுகளைக்கைப்பற்றி, ஒரு பெரிய தேசமாக உருவானபோது, இது தங்களின் வலிமையினால் கிடைத்த வெற்றி அல்ல, மாறாக, ‘யாவே’ இறைவன் தந்த வெற்றி என்று ஆர்ப்பரித்தனர். இது நெடுநாள் நீடிக்கவி;ல்லை. யாவே இறைவனை விட்டு விலகிச்சென்று, இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்தவுடன் நாட்டை இழந்து அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது, அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டபோது, கடவுள் அவர்களை மன்னித்து...