உயிர்ப்பு தரும் நம்பிக்கை
கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை நம்பிக்கை உயிர்ப்பு. நற்செய்தியாளர்கள் உயிர்ப்பு என்னும் கண்ணாடி வழியாகத்தான் இயேசுவின் வாழ்வை நமக்கு, இறைவார்த்தையாக தந்திருக்கிறார்கள். இத்தகைய அடிப்படை நம்பிக்கைக்கு இன்றைய வாசகம் ஒரு மிகப்பெரிய சான்றைத்தருகிறது. அதுதான் வெற்றுக்கல்லறை. ஆயத்தநாளுக்கு முந்தைய நாள் இயேசுவை அடக்கம் செய்கிறார்கள். ஆயத்தநாளுக்கு அடுத்தநாள் விடியற்காலையில் பெண்கள் கல்லறைக்குச்செல்கிறார்கள். அங்கே ஆண்டவரின் உடலைக்காணவில்லை. கல்லறை வெறுமையாக இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்தது என்றால், இரண்டு காரணங்கள் இருக்க முடியும். ஒன்று சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது இயேசு உயிர்த்திருக்க வேண்டும். இயேசுவின் உடலை சீடர்கள் எடுத்துச்சென்றிருக்க வாய்ப்பில்லை. காரணம், மத்தேயு 27: 62 முதல் உள்ள இறைவார்த்தைகளில் நாம் பார்க்கிறோம்: தலைமைக்குருக்களும், பரிசேயர்களும் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள். காவலர்களின் பாதுகாப்பை மீறி, சீடர்களால் இயேசுவின் உடலை திருடியிருக்க முடியாது. அப்படியே, சீடர்கள் இயேசுவின்...