Tagged: Daily manna

தொழுநோயாளியின் நம்பிக்கை

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4), தொழுநோயாளி, இயேசுவிடத்தில் நம்பிக்கையோடு வருவதைப் பார்க்கிறோம். இயேசு தன்னை நிச்சயம் குணப்படுத்துவார், இயேசுவிடத்தில் சென்றால், தனது துன்பத்திற்கு விடுதலை கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையோடு, இயேசுவிடத்தில் அவர் வருகிறார். பொதுவாக, தொழுநோயாளிகள் யூதப்போதர்களின் அருகில் வரமாட்டார்கள். அது தடை செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு வருவது தெரிந்தால், மற்றவர்கள் அவர்களை கல்லால் எறிந்து விரட்டலாம். இயேசுவைப்பற்றியும், அவரது போதனை பற்றியும், ஏழைகளிடத்தில் அவர் காட்டிய இரக்ககுணம் பற்றியும், நிச்சயம் அந்த தொழுநோயாளி கேள்விப்பட்டிருக்க வேண்டும். அந்த நம்பிக்கையோடு தான் அவர் இயேசுவிடத்தில் வருகிறார். ஒருவேளை யாராவது கல்லெறிந்தால், அதைத்தாங்குவதற்கும் அவர் தயார்நிலையில் இருந்திருக்க வேண்டும். இயேசு நிச்சயம் தன்னை வரவேற்பார், என்று அந்த தொழுநோயாளி உறுதியாக நம்பினார். தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோயாக யூதப்பாரம்பரியத்தில் கருதப்பட்டது. ஆனால், இந்த மனிதன் இயேசுவை முழுமையாக நம்பினான். இயேசுவிடத்தில் இருக்கிற...

உண்மை கிறிஸ்தவர்களாக வாழ…

ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது என்பது, யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் ஏற்றுக்கொண்ட பொது சிந்தனை. மத்திய கிழக்குப்பகுதிகளில் “வேரைப்போல அதன் கனி” என்கிற பழமொழி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையோ பறிக்க முடியுமா?” என்று கேட்கிறார். முட்செடிகளுக்கும் திராட்சைப்பழங்களுக்கும் என்ன தொடர்பு? முட்பூண்டுகளுக்கும், அத்திப்பழங்களுக்கும் என்ன ஒற்றுமை? பாலஸ்தீனப்பகுதியில் ஒரு சில முட்செடிகள், சிறிய பழங்களைக் கொண்டிருந்தது. அது திராட்சைப் பழங்களைப் போன்ற தோற்றம் உடையதாக இருந்தது. அதேபோல முட்பூண்டுகளில் இருக்கும் பழங்கள், அத்திப்பழங்களை நினைவுபடுத்துவது போன்று இருந்தது. எவ்வளவுதான் அவைகள் தோற்றத்தில், திராட்சைப் பழங்களையும், அத்திப்பழங்களையும் நினைவுபடுத்துவது போல இருந்தாலும், அவைகள் திராட்சைப்பழங்களாகவோ, அத்திப்பழங்களாகவோ மாறிவிட முடியாது. அதேபோலத்தான் போலி இறைவாக்கினர்களும். அவர்கள் இறைவாக்கினர்களைப் போல உடையில் காணப்பட்டாலும், அவர்கள் இறைவாக்கினர்கள் ஆகிவிட முடியாது. எனவே, அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்....

கிறிஸ்தவத்தின் சவால்கள்

“தூய்மையானது எதையும் நாய்களுக்கு கொடுக்க வேண்டாம்”. தொடக்க கால திருச்சபையின் பிண்ணனியில், இதனை இரண்டுவிதமாக நாம் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, இந்த சொல்லாடல், யூதர்களால் பயன்படுத்தப்பட்டது. யூதர்களைப் பொறுத்தவரையி் கடவுளுடைய கொடைகளும், அருளும் யூதர்களுக்கு மட்டும் தான் சொந்தம். வேறு எவரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. குறிப்பாக, திருத்தூதர் பவுலின் எதிரிகளாகக் காட்டிக்கொண்டவர்கள், விருத்தசேதனம் மூலம் தான், கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியும், என்று உறுதியாக நம்பியவர்கள், இந்த சொல்லாடலை பயன்படுத்தினார்கள். இரண்டாவதாக, தொடக்ககால திருச்சபை சந்தித்த இரண்டு சவால்களோடு இது தொடர்புடையதாக இருந்தது. புறவினத்து மக்களிடையே வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு, எப்போதுமே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவது முதலாவது சவாலாக இருந்தது. இரண்டாவது சவால், ஒருசிலர் கிறிஸ்தவத்தையும், புறவினத்து நம்பிக்கையையும் ஒன்று சேர்த்து, ஒரு சில சமரசங்களோடு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சி எடுத்தனர். இந்த இரண்டு சவால்களுக்கு மத்தியில், சொல்லப்பட்ட சொல்லாடல் தான், “தூய்மையானது எதையும் நாய்களுக்கு கொடுக்க வேண்டாம்” என்பது....

உமது பேரன்பினால் எனக்கு பதில் மொழி தாரும்

கடவுளின் மீது ஆழ்ந்த பற்றுறுதி கொண்ட ஒரு மனிதனின் ஏக்கத்தின் வெளிப்பாடு தான் இன்றைய திருப்பாடல். கடவுள் மீது பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அந்த நம்பிக்கை சிலருக்கு மேலோட்டமானதாக இருக்கிறது. ஒரு சிலருக்கு அது அதிக ஈடுபாடு கொண்டதாக இருக்கிறது. கடவுள் மீது தான் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாட்டி காரணமாக, தன்னுடைய வாழ்வில் சந்தித்த மோசமான தருணங்களையெல்லாம் கடவுளிடம் சொல்லி, தன்னுடை ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார். இறைவனைக் கேள்வி கேட்பது தவறான ஒன்று. ஏனென்றால், அவர் நம்மைப் படைத்தவர். நமக்கென்று ஒரு சில வரைமுறை இருக்கிறது. ஒரு தந்தையிடம் கேள்வி கேட்க பிள்ளைகளுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் அதற்கு ஓர் எல்லையும் இருக்கிறது. அந்த எல்லையை தான் மீறிவிடக்கூடாது, கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்கிற ஏக்கப்பெருமூச்சை வெளிப்படுத்தக்கூடிய பாடலாகவும் இது அமைந்துள்ளது. கடவுள் மீது நம்பிக்கை வைத்து, வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்கள் தங்களது வாழ்வில் சந்திக்கிற சோதனைகள் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்....

வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்ச்சிகளையெல்லாலம் அனுபவித்திருந்த செக்கரியா, தனது மகனைப்பற்றிய நீண்டதொரு கனவை வைத்திருந்தார். கடவுள் பக்தியுள்ள ஒவ்வொரு பாரம்பரிய யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியா வந்து, அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். மெசியாவின் வருகைக்கு முன்னால், அவருடைய முன்னோடி வந்து, அவருக்கான வழியை ஆயத்தம் செய்வார் என்றும் உறுதியாக நம்பினர். செக்கரியா தனது மகனை மெசியாவின் முன்னோடியாக கனவு கண்டார். தான் அனுபவித்த நிகழ்ச்சிகள், கண்ட காட்சிகள் வழியாக, திருமுழுக்கு யோவான் தான், மெசியாவின் முன்னோடி என்பதை, அவர் ஆணித்தரமாக நம்பினார். நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுமே ஏதோ ஒரு செய்தியை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. தெளிவான பார்வையுடன், நமது அனுபவத்தையும் அத்தோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் அதை தெளிவாக உணர முடியும். அத்தகைய தெளிவைத்தான், செக்கரியா தனது வாழ்க்கையில் கண்டார். கடவுளின் செய்தியை நாம் அறிந்து கொள்ள,...