Tagged: Daily manna

பணிவாழ்வு

இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6), இயேசு கிறிஸ்து தனது சீடர்களை பணிவாழ்விற்கு தயாரிப்பாக, அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள அனுப்புகிறார். இயேசு அவர்களை அனுப்புகிறபோது, பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். எதற்காக பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று இயேசு சொல்கிறார்? ஒரு வழிப்பயணத்தில் நமக்கு பல தேவைகள் நிச்சயம் இருக்கும். அந்த தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் சென்றால், அந்த பணியை இன்னும் அதிக ஆர்வத்தோடு, நேர்த்தியோடு செய்து முடிக்கலாம். அப்படியிருக்கிறபோது, இயேசு ஏன் பொருள் இல்லாத பயணத்தை ஊக்குவிக்கிறார். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும். முதலாவது, பணிவாழ்வில் தன்னை இணைத்துக்கொள்கிற ஒவ்வொருவரும், கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்க வேண்டும். செய்வது நாமாக இருந்தாலும், நம் வழியாகச் செய்து முடிப்பவர், தந்தையாகிய கடவுள். நாம் வெறும் ஊழியர்கள். அவ்வளவுதான். நமக்கே கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் எதைப்பற்றி மக்களிடையே போதிக்கப்போகிறோம்? நமது அனுபவமே...

மாற்றங்கள் மலரட்டும்

இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21) ஒரு வித்தியாசமான நிகழ்வு நடைபெறுகிறது. இயேசு வழக்கமாக அணுகுவதற்கு எளிதானவர். மக்கள் நடுவில் ஒரு பிரபலமான போதனையாளராக இருந்தாலும், கூட்டம் அதிகமாக இயேசுவைச் சூழ்ந்திருந்தாலும், இயேசு சாதாரண ஏழைகளும், எளியவர்களும் அணுகுவதற்கு எளிதானவராக இருந்தார். பாவிகளையும் அரவணைத்தார். குழந்தைகளை ஆசீர்வதித்தார். ஆனால், இன்றைய நற்செய்தியில், இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரை அணுக முடியவில்லை என்று, நற்செய்தியாளர்கள் சொல்கிறார். இது, இயேசு எந்த அளவுக்கு தனது பணிவாழ்வில் அர்ப்பணம் உள்ளவராகவும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது குடும்பத்தை முன்னிறுத்தாக, பொதுநலம் கொண்ட சிந்தனையாளராக இருந்தார் என்பதை, எடுத்துக்காட்டுகிறது. நாம் வாழக்கூடிய சமுதாயத்தோடு பொருத்திப்பார்ப்போம். இன்றைக்கு அரசியலாக இருக்கட்டும், ஆன்மீகமாக இருக்கட்டும். அனைத்திலேமே குடும்ப உறவுகளை இணைக்கக்கூடியதை நாம் பார்க்கிறோம். குடும்பத்திற்கு முதன்மையான இடங்களையும், அவர்கள் பொறுப்பில் இல்லையென்றாலும், அதிகாரம் செய்யக்கூடிய அவல நிலை எங்கும் காணப்படுகிறது. தாங்கள் பொதுநலனுக்காக உழைக்க வந்திருக்கிறோம்...

இருப்பதிலிருந்து கொடுத்தல்

இந்த உலகத்தில் பல மனிதர்கள், மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளைச் செய்கிறார்கள். செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே நல்ல மனதோடு செய்யப்படுகிறதா? என்றால், அது விவாதத்திற்கு உட்பட்டது. காரணம், இன்றைய அரசியல் உலகில் செய்யப்படுகிற உதவிகள் அனைத்துமே, இலாப நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்படுவதாக இருக்கிறது. உதவிகள் அனைத்துமே இரக்கச்செயலாக ஏற்கப்படுமா? என்றால், இல்லை என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பதிலாகத் தருகிறது. நாம் உதவிகள் செய்வது சிறந்தது. ஆனால், எத்தகைய மனநிலையோடு செய்கிறோம்? என்பது, அதைவிட முதன்மையானது. ஆராயப்பட வேண்டியது. நாம் எவ்வளவு கொடுக்கிறோம்? என்பது முக்கியமல்ல. எப்படி கொடுக்கிறோம்? எந்த மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியமானது. அதுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை, இந்த உலகத்தில் இருக்கிற மக்களை நாம் ஏமாற்றிவிடலாம். அவர்களுக்குக் கொடுப்பதுபோல கொடுத்து, அவர்களிடமிருந்து அவர்கள் அறியாமல் நாம் பிடுங்கிவிடலாம். இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த உத்தியைத்தான் கையாளுகின்றன. ஆனால், அதற்கான...

கிறிஸ்தவ ஒற்றுமை

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16) நாம் பார்க்கிற வேலையாட்கள், வேலைக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள், சோம்பேறிகள் அல்ல. காலையிலிருந்து அவர்கள் யாராவது தங்களை வேலைக்கு அழைத்துச்செல்வார்களா? என்று காத்திருக்கிறார்கள். இவர்கள் அன்றாடக்கூலிகள். சமுதாயத்தின் அடிவிளிம்பில் இருக்கக்கூடிய மக்கள். அடிமைகளைவிட இவர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அடிமைகளின் நிலைமை அவர்கள் இருக்கும் வீட்டின் நிலைமையைப்பொறுத்து மாறுபடும். உணவுக்கு அவர்களுக்கு கஷ்டம் இருக்காது. என்னதான் அடிமை வேலை செய்ய வேண்டியிருந்தாலும், பட்டினி நிலைமை இருக்காது. ஆனால், இங்கே சொல்லப்படுகிற அன்றாடக்கூலிகளின் நிலைமை அப்படி அல்ல. உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற நிலைமை. கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும், அரைவயிற்று உணவு தான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருநாள் வேலையில்லை என்றாலும், அவர்களின் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். சீடர்கள் இயேசுவோடு தொடக்கமுதலே இருப்பதால் அவர்களுக்குத்தான் முதல் உரிமை என்பதல்ல. கிறிஸ்துவை, கிறிஸ்துவின்...

உடன் பணியாளர்களாக…

இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3), இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடனுழைத்தவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு தரப்பட்டிருக்கிறது. இயேசுவின் திருத்தூதர்கள் மற்றும் பெண் சீடர்களைப்பற்றியும், அவர்கள் யார்? என்பது பற்றியும், நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசு தனிமனிதராக பணி செய்யவில்லை. அவருடைய பணிவாழ்வில் பலருக்கும் பங்கு இருந்ததை இது நமக்கு தெளிவாக்குகிறது. இந்த உலகத்தில் பொதுநலத்தோடு மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையான மக்களுக்கு, களத்தில் இறங்கி உதவி செய்ய முடியாது. இதற்கு அவர்களது பணி, குடும்பம், சூழ்நிலை தடையாக இருக்கலாம். ஆனால், தங்களால் இயன்றதை பொருளாகவோ, பணமாகவோ கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அதில் அவர்களுக்கு நிறைவு இருப்பதாக உணர்கிறார்கள். இரண்டாவது வகையான மக்களும் நேரடியாக முழுநேரத்தையும், முழுமூச்சியோடு இறங்க வாய்ப்பில்லாதவர்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களது உடனிருப்பு மூலமாக, சிறு,சிறு உதவிகள் மூலமாக எப்போதும் பொதுநலனோடு உழைத்துக்கொண்டிருக்கிறவர்கள். மூன்றாவது வகையான மக்கள், முழுக்க முழுக்க மக்களுக்காக,...