தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா
மரியாள் தன் தாய் அன்னம்மாளின் வயிற்றில் இருக்கிறபோதே, கடவுளின் அருளால் பாவ மாசின்றி பாதுகாக்கப்பட்டிருந்தாள் என்பதுதான், இந்த விழாவின் மையப்பொருளாகும். இது மரியாளின் மாசற்ற உற்பவத்தின் உன்னதமான நிகழ்வை கூருகின்றது. இதற்கு விவிலிய ஆதாரம் ஏதும் இல்லை. இது ஒரு மறையுண்மை. இதை கி.பி 1854 ம் ஆண்டு, டிசம்பர் 08 ம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ”மரியாள் அமல உற்பவ” என்ற அப்போஸ்தலிக்க மடலிலே பிரகடனப்படுத்தியுள்ளார். இது பெரும்பாலும் பாரம்பரியத்தையும், இறையியல் மற்றும் திருவழிபாட்டு மரபு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது ஆகும். மரியாள் கடவுளின் மகனைக் கருத்தாங்கியதால், மரியாளின் பிறப்புநிலையைப்பற்றி பல விவாதங்கள் எழுந்தன. இந்த கருத்து பரவத்தொடங்கியபோது, பல இறையியலாலர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இச்சிக்கலுக்கு கீழ்க்காணும் விளக்கம் மூலமாக தீர்வு காணப்பட்டது. டன்ஸ் ஸ்காட்டஸ் என்பவர் 1300 ம் ஆண்டு, கடவுளின் அருள் இரண்டுவிதங்களில் செயல்படுகிறது என ஒரு விளக்கம் கொடுத்தார். கடவுளின் காக்கும் அருள்...