Tagged: Daily manna

பவுலடியாரும், இயேசுவின் பாடுகளும்

2தீமோத்தேயு 2: 8 – 15 தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், இதுவரை பவுலடியார், துன்பத்தைத் தாங்குவதில் அவர் கொண்டிருந்த தனித்துவத்தைப் பற்றி அறிவுரையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இரண்டாவது அதிகாரத்தின் தொடக்கத்திலிருந்து, அவருடைய அறிவுரை இயேசுவின் பாடுகளை நோக்கி நகர்கிறது. ”இயேசு உயிர் பெற்று எழுந்தார் என்பதை நினைவில் கொள்” என்று சொல்கிறார். அதாவது, இயேசுவின் பாடுகள் அழுத்தம் பெறுகிறது, அவருடைய துன்பங்கள் அறிவுரையின் மையமாகிறது. கடவுளுடைய வார்த்தையை யாரும் சிறைப்படுத்த முடியாது. இயேசுவை, அவருடைய சாவு சிறைப்படுத்தி விடும் என்று, பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தப்புக்கணக்கு போட்டார்கள். ஆனால், இயேசு சாவிலிருந்து உயிர் பெற்றெழுந்தார். பவுலடியாருடைய துன்பங்களும், பாடுகளும் யாருக்கும் மீட்பைப் பெற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை பலருக்கு உந்துசக்தியாக இருக்கப்போகிறது. குறிப்பாக, துன்பங்களைத் தாங்குவதற்கு மற்றவர்கள் கற்றுக்கொள்கின்ற வாழ்க்கை அனுபவமாகவும் இருக்கிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, துன்பங்களைத் தாங்குவதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் பவுலடியார் இங்கு சொல்ல...

இயேசு அருளும் வாக்குறுதி

2தீமோத்தேயு 1: 1 – 3, 6 – 12 இயேசு அருளும் வாக்குறுதி ”இயேசு அருளும் வாக்குறுதிக்கு ஏற்ப, அவருடைய திருத்தூதனான பவுல்” என்று, பவுல் தன்னுடைய திருமுகத்தைத் தொடங்குகிறார். இங்கு வாக்குறுதி என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. இயேசு அருளும் வாக்குறுதி என்று பவுல் எதனைக் குறிப்பிடுகிறார்? வழக்கமான பவுலின் திருமுகத்திலிருந்து, இந்த கடிதம் சற்று மாறுபட்ட தொனியில், அதிலும் குறிப்பாக, இந்த வார்த்தையை பவுல் பயன்படுத்தியிருப்பதன் நோக்கம் புரிவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், விவிலியத்தில் அதற்கான விளக்கங்கள் இடம்பெறவில்லை. இதனுடைய பொருள் என்ன, என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம். உரோமை நகரில் பவுல் சிறையில் அடைக்கப்பட்ட இடம் என்று காட்டப்படுகிற இடத்தை நாம் பார்த்தோம் என்றால், பவுல் சொல்ல வருகிற அர்த்தத்தை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் சிறையில் அடைக்கப்பட்ட இடம், குகை போன்ற பாதாள அறை. அந்த...

கடவுளுக்கான காணிக்கையை செலுத்தி விட்டீர்களா?

மாற்கு12:13-17 நம் வாழ்க்கையை திறனாய்வு செய்து பார்க்கின்ற போது ஒரு உண்மை புலனாகிறது. அந்த உண்மை என்னவெனில் கடவுள் நமக்கு கொடுப்பதில் கணக்குப் பார்ப்பதில்லை. எப்படி இருந்த நான் இப்படி இருக்கிறேன்? இந்த கேள்வியை கேட்டுப் பார்த்தீர்களா? நம்முடைய உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்கைத்தரம் இவைகளில் எவ்வளவோ வளர்ந்திருக்கிறோம். இன்னும் கடவுள் நம்மை விசேசமாய் உயர்த்தப் போகிறார் என்பதை எல்லாம் நினைக்கும் போது என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது என்று பாடிய அன்னை மரியாளோடு சேர்ந்து பாடத் தோன்றுகிறது. இத்தனையையும் இனிதே இன்முகத்தோடு குறித்த நேரத்தில் அருவியாய் பொழியும் ஆண்டவருக்கு நான் கொடுப்பது என்ன? என்ற கேள்வியைக் கேட்க சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள் என்கிறார். ஒரு சிலருக்கு கடவுளுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. இதோ உங்களுக்கான இரண்டு பதில்கள்: 1)...

பாவம் வளர வளர அவமானமும் வளரும்

அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார் (மாற்12:9) மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது இயல்பு. பாவத்திலிருந்து திரும்புவது இறை இயல்பு. தந்தையே நான் உமக்கும், எனக்கும் என் அயலாருக்கும் எதிராக பாவம் செய்தேன். இனி இந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற வாக்குறுதி தான் வானளவு நம்மை உயர்த்தும். நம்மை பரிசோதித்து பார்த்து பாதையை திருத்தாத பயணம் நம்மை பாதாளம் வரை தாழ்த்தும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் பாவத்திற்கு மேல் பாவங்களை தங்கள் மேல் குவித்து அவமானங்களை அள்ளுகின்றனர். முதல் பாவம் : ஒரு பணியாளரை நையப்புடைத்தது இரண்டாம் பாவம் : வோறொரு பணியாளரை தலையில் அடித்து அவமதித்தது மூன்றாம் பாவம் : மற்றொரு பணியாளரை கொலை செய்தது நான்காம் பாவாம் : சிலரை நையப்புடைத்தது, சிலரை கொன்றது ஐந்தாம் பாவம் : திராட்சைத் தோட்ட உரிமையாளரின் அன்பு மகனை கொன்றது எத்தனை பாவங்கள் பாருங்கள்....

வாக்குறுதிகள்

விடுதலைப்பயணம் 24: 3 – 8 இஸ்ரயேல் மக்களோடு கடவுள் மோசே வழியாக பேசுகிறார். தன்னுடைய வார்த்தைகளை மோசேக்கு அறிவித்து, அவர் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட இஸ்ரயேல் தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும், ஒரே குரலாக, ”ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று பதில்மொழி தருகின்றனர். இஸ்ரயேல் மக்கள் கடவுள் மீது வைத்திருந்த பக்தி, நம்பிக்கை இந்த பகுதியில் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வெறும் வார்த்தைகளால் மட்டும் அதை சொல்லவில்லை. மாறாக, பலிபீடங்களை எழுப்பி, அதில் கடவுளுக்கு பலி செலுத்தி, தங்களது வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். பலி செலுத்துவது என்பது வாக்குறுதியின் அடையாளமாக இருக்கிறது. பொதுவாக, பலியிடுதலில் விலங்குகள் பலியிடப்படுகின்றன. அப்படி பலியிடப்படுகிறபோது, வாக்குறுதி கொடுக்கிறவர்கள் அந்த பலிபீடத்தைச் சுற்றி வருகிறார்கள். எதற்காக? அதனுடைய பொருள் இதுதான்: நாம் இருவரும் இங்கே வாக்குறுதி கொடுக்கிறோம். ஒருவேளை, யாராவது வாக்குறுதியை மீறினால், இந்த விலங்குகள்...