இயேசுவின் பரந்த மனம்
இயேசுவின் இன்றைய வார்த்தைகள், யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போடுகின்ற வார்த்தைகள். நூற்றுவர் தலைவன், தனது பையனை குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சனையும் அவருக்குத் தெரியும். யூதச்சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டிற்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை. இயேசு ஒரு யூதர். நூற்றுவர் தலைவன் ஒரு புற இனத்தவர். இந்த சிக்கல் இரண்டு பேருக்குமே தெரியும். அப்படியிருந்தும், இயேசு ”நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொல்கிறார். இயேசு தெரியாமல் சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் பதிலை, எதிர்வினையை எதிர்பார்த்துச் சொல்கிறார். இங்கே தான், நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த விசுவாசம் வெளிப்படுகிறது. அந்த விசுவாசத்தை பாராட்டும் இயேசு, அடுத்த ஒரு இடி போன்ற செய்தியை அறிவிக்கிறார். அதாவது, ”கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்த செய்தி. மெசியா வருகிறபோது,...