அடையாளம் அவசியமா வேணுமா?
லூக்கா 11:29-32 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவரை அடையாளத்திற்காக, அதிசயத்திற்காக மட்டும் நாம் தேடினால் ஏமாற்றம் தான் அதிகமாக வரும். அப்போது தான் நம் நம்பிக்கையில் இருள் படா்ந்து நிற்கும். அற்புதத்திற்காக தேடாமல் மனமாற்றம் பெறுவதற்காக தேடினால் அவரின் கட்டளைகளைக் கண்டிப்பாக நாம் கடைப்பிடிப்போம். ஆண்டவரிடம் அதிசயம், அற்புதம் கிடைக்கும் என எதிர்பார்ப்பவர்களிடம் இரண்டு தவறான பண்புகள் இருப்பதை இன்றைய நற்செய்தி வாசகம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. 1. அவநம்பிக்கை ஒருசிலர் ஆண்டவா் அதிசயம் செய்தால் தான் அவரை நம்புவேன். அவர் அதிசயம் செய்யவில்லை என்றால் ஆலயம் வரமாட்டேன். அவரை பார்க்கமாட்டேன். அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்ற எண்ணம் கொண்டிருப்பது மிகவும் தவறானது. இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் இருப்பதில்லை....