Tagged: Daily manna

இன்று புதுமையானவற்றைக் காண்பாய்!

லூக்கா 5:17-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுளிடமிருந்து ஆசீர் வேண்டும் என நாம் ஏங்குவது உண்டு. அதற்காக தான் நாம் தினமும் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்படும் அந்த ஆசீரை இன்றைய நற்செயதி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. முடக்குவாதமுற்றவர் அந்த ஆசீரைப் பெற்றுக்கொண்டார். நாமும் பெற வேண்டுமெனில் இரண்டு வழிகள் அதற்கு உண்டு. 1. பாவமன்னிப்பு நாம் ஒவ்வொரு நாளும் கடவுளிமிருந்து ஆசீரை பெற வேண்டுமெனில் பாவமன்னிப்பு என்பது அவசியமானது. இந்த பாவமன்னிப்பை நாம் அனுதினமும் திருப்பலியல் கலந்துக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம். நம் பாவத்தை மனதுருகி அறிக்கையிடலாம். பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றோமெனில் கடவுளின் ஆசீர் மிக எளிதாக நமக்குள் பாய்ந்து வர முடியும். பாவத்திலிருந்து வெளியே வந்த...

கடவுளின் மக்கள்

திருமுழுக்கு யோவான் அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கிறார். திருமுழுக்கு என்பது யூதர் அல்லாத புறவினத்தவர் யூத மதத்திற்கு வருகிறபோது நிறைவேற்றக்கூடிய ஒரு சடங்கு. அந்த சடங்கை அனைவருக்கும் கொடுப்பதன் வழியாக, யூதர்களையும் அவர் புறவினத்து மக்களாக, இன்னும் கடவுளுக்குள் வராத மக்களாகவே பார்க்கிறார் என்பதை நமக்கு அறிவிக்கிறது. ஆக, வெறும் பிறப்போ, அருள் அடையாளங்களோ நம்மை கடவுளின் பிள்ளைகளாக மாற்றிவிடாது. மாறாக, உண்மையான வாழ்வே, நமக்கு கடவுளின் அருளைப் பெற்றுத்தரும். விரியன் பாம்புக்குட்டியை திருமுழுக்கு யோவான் உவமையாகச் சொல்கிறார். விரியன் பாம்புகளை ஒருவருக்கு ஒப்பிட்டுச்சொன்னால், அவரை அவதூறாகப் பேசுவதற்குச் சமம் என்ற கருத்து, மத்திய கிழக்குப் பகுதிகளில் நிலவி வந்த நம்பிக்கை. விரியன் பாம்புக்குட்டிகள் என்று சொல்வது அதைவிட மோசமான வார்த்தை. காரணம், விரியன் பாம்புக்குட்டிகள் தங்களது தாயை பிறக்கிறபோது, கொன்றுவிடும். அதேபோல யூத சமயத்தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற மக்களை, அவர்களே தவறான வாழ்க்கையை வாழக்கூறி, அவர்களை அழித்துவிடுகிறார்கள் என்று உவமையாகச் சொல்லப்படுகிறது....

தூய சவேரியார் திருவிழா

புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா (டிசம்பர் 3 ) வந்தார்! வென்றார்! மத்தேயு 8:5-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய சவேரியார் திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார். இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம்...

நடந்ததை சொல்லு…

மத்தேயு 9:27-31 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பிய அனைவருக்கும் அதிசயம் நடக்கிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. பார்வையற்ற இருவர் நம்பியதால் அவர்களுக்கு ஆச்சரியம் நடக்கிறது. கண்கள் மிக அற்புதமாய் திறக்கின்றன. அதிசயம் நடந்த பிறகு அவர்கள் செய்தது மிகவும் கவனிக்கத்தக்கது. ஆண்டவர் இயேசு நடந்ததை வெளியே சென்று அறிவிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் அதையெல்லாம் தாண்டி நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியை பரப்புகிறார்கள். அன்புமிக்கவர்களே! நாமும் பார்வையற்ற இருவரை பின்பற்ற அழைக்கப்படுகிறோம். நாம் ஆண்டவரிடம் இருந்து அதிசயம், புதுமைகளைப் பெற்ற பிறகு அவர்களைப் போன்று ஆண்டவரின் வல்லமையை அறிவிக்க வேண்டும். எப்படி அறிவிக்கலாம்? இரண்டு முறைகளில் அதை...

வாழ்க்கையில் விழாமல் இருக்க இது வேண்டும்…

மத்தேயு 7:21,24-27 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருவிவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டிருக்கிற அன்பு அறிவுரைகள். நம் வாழ்வை உயர்த்தும் அமுதமொழிகள். வாழ்க்கையில் நாம் விழாமல் நேராகச் செல்வதற்கான ஏணிப்படிகள். திருவிவிலியத்தை படிக்கிறவர்கள் தடுமாறுவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பார்கள். திருவிவிலியம் செய்யும் இரண்டு நன்மைகளை நாம் இன்று தெரிந்துக் கொள்ள வேண்டும். 1. துப்புரவு செய்கிறது காலையிலே திருவிவிலியத்தை எடுப்பவர் துப்புரவு செய்கிறார். எதை துப்புரவு செய்கிறார்? தன் மனதில் மாட்டிக்கிடக்கிற மாசுக்களை துப்புரவு செய்கிறார். ஆகவே திருவிவிலியம் வாசிப்பதால் காலையிலே மனது சுத்தப்படுத்தப்படுகிறது. அந்த நாளை பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள்ளே மிக விரைவாக ஓடி வருகிறது. இப்படி செய்வதால்...