Tagged: Daily manna

நமது வலிமையாகிய கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்

திருப்பாடல் 81: 2 – 3, 4 – 5, 9 – 10 கடவுளை வலிமையானவராக இந்த திருப்பாடல் சித்தரிக்கிறது. கடவுளின் வலிமையை புகழ்ந்து பாடுவதாகவும் இது அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் பார்வையில் பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும், கடவுள் தான் வலிமையுள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தான் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தவர். எகிப்தில் இருக்கிற தெய்வங்களையெல்லாம் தோற்கடித்து விட்டு, அவர்களுக்கு வெற்றி தேடித்தந்தவர். அந்த கடவுளிடம் உண்மையான விசுவாசம் உள்ளவர்களாக இருக்கும்படி, இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஒரு விளையாட்டு வீரரை எடுத்துக்கொண்டால், அவருக்கென்று பலம் இருக்கும், பலவீனமும் இருக்கும். அவருடைய பலம் தான், அவருடைய வெற்றிக்கு காரணமாக அமைய முடியும். அந்த பலத்தில் தான், அவர் களத்தில் போராடுகிறார். அந்த பலத்தில் தான், வெற்றிகளைக் குவிக்கிறார். இங்கே, கடவுளை இஸ்ரயேல் மக்களின் பலமாக, ஆசிரியர் குறிப்பிடுகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இருக்கிறவரை, எவராலும் அவர்களை வீழ்த்திவிட முடியாது. அதேவேளையில், கடவுள்...

நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்

திருப்பாடல் 99: 5, 6, 7, 9 ர் கடவுளைப் போற்றுவதற்கும் மகிமைப்படுத்துவதற்கும் திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால் அவர் தூயவர் என்று ஆசிரியர் சொல்கிறார். இங்கே கடவுளுக்கு “தூய்மை“ என்கிற அடையாளம் கொடுக்கப்படுகிறது. தூயவர் என்பது அப்பழுக்கற்றவர் என்பதாக அர்த்தம் கொள்ளலாம். வெள்ளை மனம் உடையவர். புனிதத்தின் நிறைவாக ஆண்டவர் இருக்கிறார். எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும், இஸ்ரயேலின் கடவுளுக்கு நிகரான தூய்மை யாரிடமும் இல்லை என்பது இங்கு தரப்படுகிறது கூடுதல் செய்தி. தூய்மையின் உறைவிடமாக இருக்கிற இறைவனை நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது தான், நமக்கு கொடுக்கப்படுகிற சிந்தனையாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியிலும் இதே சிந்தனை தான் நமக்குத்தரப்படுகிறது. புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கும் ஒருவர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த புதையலை தனதாக்கிக் கொள்கிறார். விலையுயர்ந்த முத்தைக் காணக்கூடிய ஒருவர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். அதேபோல, தூய்மையின் ஆண்டவரை நாம் நமதாக்கிக்கொள்ள வேண்டும். அவர் தான் நாம் பெறுதற்கரிய...

ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமை வாழ்வை வழங்குகிறார்

திருப்பாடல் 103: 6 – 7, 8 – 9, 10 – 11, 12 – 13 மனிதரின் பார்வை வேறு, இறைவனுடைய பார்வை வேறு. இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள், தங்களுக்கென்று ஒரு சில ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அது முற்காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், தற்காலத்தில் அதனை தொடர்ந்து கொண்டே வருகின்றனர். எந்த ஒரு சமூகமும் எப்போதும் ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தே வந்திருக்கிறது. நியாயம், அநியாயம் என்று பாராமல், பிறப்பின் அடிப்படையில் ஒருவரை மதிக்காமலும், ஒருவருக்கு தேவையில்லாத மரியாதையையும் இந்த சமூகம் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், இறைவன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, இறைவன் அவர்களுக்கு உதவி செய்தார். அவர்கள் அடிமைத்தளையிலிருந்து மீண்டு எழுவதற்கு உதவி செய்தார். அவர்களும் மற்றவர்கள் முன்னிலையில் மதிக்கப்பட, மாண்போடு வாழ அவர்களை கரம் பிடித்து தூக்கிவிட்டார். அதேவேளையில்...

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23 இறைவனை மறந்துவிட்ட, முற்றிலும் புறக்கணித்து விட்ட மக்களுக்கு விடுக்கப்படும் அறைகூவல் தான், இந்த திருப்பாடல். ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது அனைவருடைய கடமை. ஆனால், அதைக்கூட செய்யாமல், நன்றி உணர்வு இல்லாமல் வாழ்கிற மக்களுக்கு இந்த பாடல், திருந்தி வாழ அழைப்புவிடுக்கிறது. இறைவன் தொடக்கத்தில் இருந்து இஸ்ரயேல் மக்களுக்குச் செய்து வந்திருக்கிற எல்லா நன்மைகளையும் இந்த பாடல் நினைவுறுத்துகிறது. இஸ்ரயேல் மக்கள் சிலை வழிபாட்டில் தங்களையே முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறவர்களாக இருந்தனர். சிலை வழிபாடு என்பது சிலைகளை வழிபடுவது என்பதாக மட்டும் அர்த்தம் கிடையாது. மாறாக, உண்மையான இறைவனை மறந்து, தவறான வழிபாட்டு முறைகளை கடைப்பிடிப்பது. தங்களுக்கு நன்மைகள் செய்த இறைவனை அவர்கள் மறந்தார்கள். வேற்றுத்தெய்வங்களை வழிபட்டார்கள். இவ்வளவு செய்தும் அவர்களை திரும்ப ஏற்றுக்கொண்ட, கடவுளின் நன்மைத்தனத்தைப் பார்க்காமல், அவர் செய்த நன்மைகளை பொருட்படுத்தாது, நினைவில் கொள்ளாது வாழ்ந்தனர். இந்த...

முயற்சி தரும் நிறைவு

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் – போன்ற வார்த்தைகள் நாம் செய்ய வேண்டிய செயல்களைக் குறிக்கக்கூடிய சொற்களாக இருக்கிறது. இந்த சொற்களின் அடிப்படையான பொருள்: முயற்சி. முயன்றால் நாம் பெற முடியாதது ஒன்றுமில்லை. அந்த முயற்சி தான், நமது விசுவாச வாழ்வின் அடித்தளம். அந்த முயற்சியைப் பற்றிப்பிடித்து விட்டால், நாம் இந்த உலகத்தில் அடைய நினைப்பதை நிச்சயமாக அடைய முடியும். நாம் முயற்சி எடுக்க வேண்டும். ஒருபோதும் சோம்பேறிகளாக வாழக்கூடாது. எதிர்மறை சிந்தனை உடையவர்களாக இருக்கக்கூடாது. இந்த உலகத்தில் நம்மை விட எத்தனையோ பேர் குறைகளோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளிடத்தில் முறையிடுவதற்கும், சண்டை போடுவதற்கும் எவ்வளவோ இருக்கிறது. அது நமது பார்வையில் நியாயமானதாகக் கூட தோன்றலாம். ஆனால், அவர்கள் அதையெல்லாம் பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு, மிக உறுதியாக வாழ்வில் முயற்சி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்வை மகிழ்வோடு வாழ்ந்திருக்கிறார்கள். தடைகளையும், சோதனைகளையும் வலிமையோடு வென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்கு சிறந்த உதாரணங்களாக வாழ்வில்...