Tagged: Daily manna

உண்மையான விசுவாசம்

லூக்கா நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில், இயேசு சதுசேயர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஒரே இடமாக, இந்த வாக்குவாதம் அமைகிறது. சதுசேயர்கள் தாங்கள் என்ன செய்தோம், எதை நம்புகிறோம்? என்று அறியப்படுவதைவிட, எதை நம்பவில்லை என்பதன் அடிப்படையில், இந்த நற்செய்தியில் அறியப்படுகிறார்கள். சதுசேயர்கள் எதற்காக உயிர்த்தெழுதலை நம்பவில்லை? எதனால் அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதவர்களாக இருந்தனர்? இந்த கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்தபின், இந்த வாசகம் நமக்குத்தரும் செய்தியைப் பார்ப்போம். அடிப்படையில் சதுசேயர்கள் “தோரா” என்று சொல்லப்படுகின்ற, முதல் ஐந்து புத்தகங்களை மட்டுமே நம்பினார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்ற புத்தகங்களையும் கடவுளால் ஏவப்பட்ட நூல்களாக நம்பினார்கள். முதல் ஐந்து புத்தகங்களில் உயிர்த்தெழுதல் பற்றிய வார்த்தைகள் இல்லை. இந்த உயிர்த்தெழுதல் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் தாமதமாகத் தோன்றியவை. எனவே, அவைகளைப் பற்றிய குறிப்பை நாம், தொடக்க புத்தகங்களில் பார்க்க முடியாது. இந்த வேறுபாடு தான், சதுசேயர்களையும், பரிசேயர்களையும் பிரிப்பதாக அமைந்தது. இதுதான் இவர்களை, ஒருவர் மற்றவர்க்கு எதிராக வேறுபடுத்திக் காட்டுவதாக...

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

நோ்ந்தளியுங்கள்… நேராகுங்கள் யோவான் 2:13-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருவிழா திருப்பலி நம்மை கடவுளுக்கு நேர்ந்தளிக்க அழைப்பு கொடுக்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கே சொந்தம் என்பதை ஆலயத்தில் அறிக்கையிட வேண்டும். உரக்க அதை வெளியிட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்துவோம். இன்று ஆலயம் வந்திருக்கின்ற நாம் அதை முழு ஆர்வத்தோடும் ஆசையோடும் செய்வோம். அதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆலயத்தில் நேர்ந்தளிக்க வேண்டும். அப்படி ஆலயத்திற்கு நம்மை நேர்ந்தளிக்கும் போது இரண்டு விதங்களில் நாம் பயன் பெறுகிறோம். 1. பாதுகாப்பு பெறும் வளையம் உருவாகிறது நாம் ஆண்டவருக்கு ஆலயத்தில் வைத்து நம்மை நேர்ந்தளிக்கும்...

இயேசுவின் எல்லையில்லா அன்பு

வரிதண்டுவோரும், பாவிகளும் இயேசுவை நெருங்கிவந்தனர். ஆனால், பரிசேயரோ இயேசு சொல்வதைக் கேட்டு முணுமுணுத்தனர். இந்த முதல் இறைவார்த்தையே இருவேறான மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டுகிறது. இயேசுவை நோக்கி எதற்காக பாவிகள் நெருங்கி வர வேண்டும்? பாவிகள், ஏழைகள், வரிதண்டுவோர் தங்களது வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினர். தாங்கள் கடவுளால் ஏற்கெனவே தீர்ப்பிடப்பட்டதாகக் கருதினர். தங்களுக்கு இனிமேல் வாழ்வு இல்லை என்று நினைத்தனர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. தங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையை அவை விதைத்தன. மற்றொருபக்கத்தில் பரிசேயர்களோ, தாங்கள் ஏற்கெனவே கடவுளின் அரசுக்கு தகுதிபெற்று விட்டதாக எண்ணிக்கொண்டிருந்தனர். தாங்கள் மட்டும் தான், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று நினைத்தனர். ஏழைகளையும், பாவிகளையும் வாழ்வை இழந்துவிட்டதாகப் போதித்துக்கொண்டிருந்தனர். அவர்களது போதனை இப்போது, இயேசுவின் போதனையால் வெல்லப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல, அவர்களுக்கே அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. இதுவரை தங்களிடம் பணிந்து நின்றவர்கள், இப்போது இவர்களைப் பார்த்து பரிகாசிக்க தொடங்கியவுடன்,...

மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்

திருப்பாடல் 112: 1ஆ – 2, 4 – 5, 9 கடந்த மாதத்தில் திருநேல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் இறந்த குடும்பத்தினரின் இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏழை, எளியவர்களின் வறுமையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அநியாய வட்டி வாங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது இன்றைக்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதற்கு துணைபோவது கலியுகத்தின் உச்சகட்டம். இப்படியிருக்கிற சூழ்நிலையில் இன்றைய திருப்பாடல், ”மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்” என்று சொல்கிறது. கடன் என்பது ஒருவரது இக்கட்டான சூழ்நிலையில் நாம் பணமாகவோ, பொருளாகவோ கொடுத்துச் செய்கிற உதவி. இந்த கடன் கொடுப்பது எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பது முக்கியம். இன்றைக்கு கடன் கொடுப்பது வியாபார நோக்கத்திற்கானதாக இருக்கிறது. அது ஒரு வியாபாரம். உனக்கு நான் பணம் தருகிறேன், எனக்கு நீ அதற்கான கூலியைக் கொடுத்து விட வேண்டும் என்பது தான் வியாபார கடன்....

உம் திருமுன் வைத்துக் காத்தருளும்

திருப்பாடல் 131: 1, 2, 3 வாழ்க்கையில் குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு தனிமையில் இருக்கிறபோது பெரும்பாலானோர் நினைக்கிற சிந்தனை, “என்ன வாழ்க்கை இது! இன்று மலர்ந்து நாளை கருகிவிடும் புல்லைப் போன்ற நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு வன்மங்கள், பொறாமை, பிடிவாதம் கொண்டிருந்தோம். இது நமக்கு தேவையா?”. இது சாதாரண வார்த்தைகள் அல்ல. ஒருவருடைய உள்ளக்கிடக்கையை படம்பிடித்துக் காட்டக்கூடிய வார்த்தைகள். இறப்பு நிகழ்கிறபோது, வாழ்க்கை நாம் எண்ணியதைப் போல நடக்காதபோது, இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. “காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” போன்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை!. இப்படி வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்த பிறகு, பெற்றுக்கொண்ட பாடங்களை இன்றைய திருப்பாடல் நமக்கு தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது. அசோகர் எவ்வளவோ போர்களில் எதிரிகளை வெற்றி கொண்டிருக்கிறார். ஆனால், கலிங்கப்போரில் அவர் சந்தித்த உயிரிழப்புகள் அவர் பெற்ற வெற்றியை, கசப்பான உணர்வாக மாற்றிவிட்டது. இந்த போர் யாருக்காக? எதை அடைவதற்காக? அந்த வெற்றி அவருக்குள்ளாக...