ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக
இந்த திருப்பாடலை தாவீது அரசர் எழுதியபோது இயற்கைச்சீற்றங்கள் நிறைந்த ஒரு சூழலாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. மழை, மின்னல், இடி போன்ற இயற்கைச்சீற்றங்களின் தாக்கம் அதிகமாக இருந்த ஒரு சூழலை நாம் எதிர்கொண்டால் எப்படி இருக்கும்? பயம், கலக்கம், அச்சம் நம்மில் அதிகமாக இருக்கும். ஆனால், தாவீது அரசர் இயற்கையின் சீற்றத்திலும் கடவுளின் வல்லமையை, ஆற்றலை பார்க்கிறார். எந்த அளவுக்கு கடவுள் வலிமையும், வல்லமையும் படைத்தவராக இருக்கிறார் என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலை இயற்கையில் மட்டுமல்ல. நமது வாழ்விலும் எதிரொலிக்கிறது. இந்த நெருக்கடியான நிலை குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களின் வாழ்விலும் எதிரொலிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வாழும், வாடும் மனிதர்களுக்கு அமைதியைத்தர வேண்டுமென்று ஆசிரியர் மன்றாடுகிறார். ஏனென்றால், உண்மையான அமைதியை ஆண்டவர் ஒருவர் மட்டும் தான் வழங்க முடியும். அந்த அமைதியை வழங்கக்கூடிய ஆண்டவரில், தூய ஆவி நிழலிடுவதை இன்றைய நற்செய்தியும் நமக்கு...