Tagged: Daily manna

மண்ணகம் – இறைவனின் பிரசன்னம்

உலகம் என்பது கடவுளின் படைப்பு மட்டுமல்ல, கடவுளின் பிரசன்னம் முழுவதும் நிரம்பியிருக்கக்கூடிய இடம். இந்த உண்மையை இயேசு தனது போதனையின் வாயிலாக எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் போதனை, அறிவுப்பூர்வமாக, அறிவில் சிறந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துச்சிந்தனைகள் நிறைந்ததாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் விதைகளை வைத்து இயேசு அருமையானச் செய்தியைத் தருகிறார். பொதுவாக, விண்ணகத்தை, பூமியோடு ஒப்பிடுகிறபோது, மண்ணகம் ஒன்றுமே இல்லாததுபோல, மண்ணகத்தை வெறும் ஒரு படைப்பு போல பார்க்கக்கூடிய நிலை, நம்மிடமே உள்ளது. ஆனால், இயேசுவின் போதனையில் உள்ள கருத்துக்களைப்பார்த்தால், எந்த அளவுக்கு மண்ணகம் கடவுளின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளது என்பதும், மண்ணகம் கடவுளின் வெறும் படைப்பு மட்டுமல்ல, அது இறைவன் வாழும் ஆலயம் என்பதும் நமக்குப்புலப்படும். இன்றைக்கு கடவுளின் படைப்பான இந்த பூமி, சிலபேரின் சுயநலத்திற்காக சிதைக்கப்படுவது கொடுமையானது. இந்த பூமி, இறைவனின் பிரசன்னம் தாங்கிய இடம் என்றால், அதை சிதைப்பது,...

கீழ்ப்படிதல்

தொடக்கத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்தார். அவர்களை தனது சாயலில், உருவத்தில் படைத்தார். இவ்வாறு தனது அன்புக்குரியவர்களாக, அவருடைய பிள்ளைகளாக மனிதர்களைப் பேணிக்காத்தார். ஆனால், மனிதன் கடவுளை மிஞ்சிவிட வேண்டும் என்கிற, அலகையின் கண்ணியில் சிக்கி, அந்த உறவை இழந்துவிடுகிறான். இவ்வாறு கடவுளின் பிள்ளைகளாகப் படைக்கப்பெற்ற மனிதன் கீழ்ப்படியாமையால், கடவுளின் வார்த்தையைப் புறந்தள்ளியதால், அந்த உறவை இழந்துவிடுகிறான். இன்றைய நற்செய்தி, மனிதன் இழந்த உறவை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனையைத் தருகிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே, அந்த ஆலோசனை. கீழ்ப்படியாமை தான், உறவைச் சிதைக்கிறது. கீழ்ப்படிதல் உறவை ஆழப்படுத்துகிறது. முதல் மனிதன் ஆதாம் கீழ்ப்படியாமையால் துன்பத்தை வருவித்துக்கொள்கிறான். கடவுளின் மகன் இயேசுவோ, தனது கீழ்ப்படிதல் மூலமாக இழந்த உறவை புதுப்பித்து ஆழப்படுத்துகிறார். நம்மையும் கடவுளின் பிள்ளைகளாக மீண்டும், உறவை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்துகிறார். கடவுளோடு நாம் மீண்டும் இழந்த உறவை புதுப்பித்துக்கொள்ள முடியும். எப்போது நாம் கடவுளின் திருவுளத்தின்படி நடக்கிறோமோ, அந்த நிமிடமே...

இயேசு ஒரு போராளி

பாரம்பரிய மதவாதிகள் இயேசுவின் அதிகாரத்தையும், ஆற்றலையும் எப்போதுமே கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவர்கள் இயேசுவிடமிருந்த வல்லமையை, ஆற்றலை முழுவதுமாக அறிந்திருந்தார்கள். அவர்கள் அந்த வல்லமையை தீய ஆவிகளின் வல்லமையாகப் பார்த்தனர். ஒட்டுமொத்தத்தில், இயேசு தீய ஆவிகளின் பிரதிநிதி என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தனர். இயேசு அவர்களின் இந்த முடிவை வெகு எளிதாக முறியடிக்கிறார். பகைவர்கள் தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக்கொள்வதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள். குழப்பம் விளைவிப்பதும், மற்றவர்களுக்குள்ளாக சண்டையைத் தூண்டிவிட்டு குளிர்காய்வது தான் அவர்கள் வேலை. அனைவரும் கெட்டது செய்வார்களே ஒழிய, யாரும் நல்லது செய்ய முன்வர மாட்டார்கள். அப்படி செய்தால், அழியப்போவது தாங்கள் தான் என்பதை அவர்கள் அறியாதவர் அல்ல. பெயல்செபூல் பேய்களின் தலைவன். அவனுடைய வேலை கெடுதல் செய்வது. மற்றவர்கள் யாராவது கெடுதல் செய்தாலும், அதற்காக முதலில் மகிழ்ச்சி கொள்கிறவர் பெயல்செபூலாகத்தான் இருக்க வேண்டும். தனது வேலையை யார் செய்தாலும், அவனுக்கு மகிழ்ச்சிதான். அப்படியிருக்கிறபோது, கெடுதல் செய்கிறவர்களைத்தண்டித்து, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு ஒருநாளும், அவன்...

ஆண்டவரே என் ஒளி! என் மீட்பு

திருப்பாடல் 27: 1- 4, 13 – 14 இஸ்ரயேல் மக்கள் தங்களது வாழ்க்கையில் கடவுளை மையமாகக் கொண்டிருந்தனர். ஆண்டவர் தான் அவர்களது வாழ்வில் ஒருவராக கலந்திருந்தார். ஆனாலும், அவர்கள் செய்த தவறு, அவர்களுக்கு பல சோதனைகளையும், தண்டனைகளையும் கொடுத்தது. பகை நாட்டினரிடத்தில் போரில் தோற்றுப்போயினர். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். வேற்றுநாட்டில் பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகினர். இப்படி துன்பங்களை அனுபவிக்கிற நேரம் தான், திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலை எழுதுகிறார். அவரது வரிகள், நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இப்போது இருக்கிற நிலைமாறி, அனைவரும் ஆண்டவர் அருளக்கூடிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, உரக்கச் சொல்கிறது. அவர்கள் வேற்றுத்தெய்வங்களையும், மனிதர்களையும் நம்பியதால் தான், இந்த இழிநிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்கள் கடவுளை நம்ப வேண்டும். கடவுள் மட்டும் தான், அவர்களின் மீட்பாக இருக்கிறார். அவர் தான் ஒளியாக இருந்து, இருளில் வழிநடத்துகிறார். எனவே, இப்படிப்பட்ட இழிநிலை மாற வேண்டும் என்ற, நம்பிக்கையோடு இருக்க, திருப்பாடல்...

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...