பணிவாழ்வில் ஓய்வு
திருத்தூதர்கள் தங்களின் நற்செய்திப்பணி முடிந்து திரும்பி வருகின்றனர். இயேசு அவர்களை ஓய்வெடுப்பதற்கு பணிக்கிறார். ஏற்கெனவே களைப்பாய் இருந்தவர்கள் உண்பதற்கு கூட நேரம் இல்லாதவர்களாய் இருப்பதைப்பார்த்து, இயேசுவே அவர்களுக்கு ஓய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறார். அவர்கள் ஓய்வுக்கு நேரம் கொடுக்கிறார். நமது கிறிஸ்தவ வாழ்வு என்பது பணியும், ஓய்வும் கலந்த வாழ்வு என்பதை இயேசு இங்கே கற்றுத்தருகிறார். கடவுளின் பணிக்காக முழுமையாக நம்மை அர்ப்பணித்து தொடர்ந்து உழைக்கிறோம். அதேபோல ஓய்வுக்கும் நேரம் கொடுக்க வேண்டும். இங்கே ஓய்வு என்பது உடல் சார்ந்த களைப்பிலிருந்து விடுபடக்கூடியது மட்டும் அல்ல. மாறாக, நமது அர்ப்பணத்தை இன்னும் அதிகமாக்குவதற்கான ஒரு கால அவகாசம். ஒரு சுய ஆய்வு. நமது ஆன்மீக வாழ்வை சீர்தூக்கிப்பார்ப்பதற்கான ஒரு ஆய்வு. நமது வாழ்வை கடவுளுக்கு இன்னும் ஆழமாக அர்ப்பணமாக்குவதற்கான ஒரு முயற்சி. எந்த அளவுக்கு நம்மையே வருத்தி பணிசெய்கிறோமோ, அதே அளவுக்கு கடவுள் முன்னிலையில் கடவுளின் பிரசன்னத்தில் அமைதியாக இருந்து,...