Tagged: Daily manna

செபத்தின் வல்லமை

இயேசுவின் வாழ்க்கையில் செபம் மையமாக இருப்பதை நாம் ஆங்காங்கே நற்செய்தி நூல்களில் காணலாம். இந்த செபம் இயேசுவின் வாழ்க்கையில் கொடுத்த ஆன்மீக பலம் என்ன? செபம் எவ்வாறு இயேசுவின் வாழ்வை வழிநடத்தியது? செபத்தினால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்று நாம் பார்க்கலாம். இயேசுவின் வாழ்க்கையில் செபம் மூன்று ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தது. 1. இறைவனின் திருவுளத்தை அறிய உதவியது. இயேசு தான் சென்று கொண்டிருக்கிற வழி சரிதானா? தான் கடவுளின் திட்டப்படி நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதை அறிவதற்கான ஆயுதமாக செபத்தைப் பயன்படுத்தினார். எனவே தான், ஒவ்வொருநாளும் பகல் முழுவதும் பணியில் மூழ்கியிருந்தாலும், இரவிலே தந்தையோடு செபத்தின் வழியாகப் பேச, அவர் மறந்ததே இல்லை. 2. துன்ப, துயரங்களை, சவால்களை சந்திப்பதற்கு ஆன்ம பலத்தைக் கொடுத்தது. இயேசுவின் வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்தித்தார். அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து, சாதாரண தச்சரின் மகன் வாழ்ந்தார் என்றால், அது மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை இயேசுவால்...

நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்த இயேசு, தமது நற்செய்தி அறிவிப்புப் பணியைத் தொடங்குகிறார். “கற்பித்தார், நற்செய்தியைப் பறைசாற்றினார், நோய்நொடிகளைக் குணமாக்கினார்”. இந்த நற்செய்திப் பகுதியுடன் தொடர்பு கொண்டதாக அமைகிறது இன்றைய திருப்பாடல். அரசத் திருப்பாடல்களுள் ஒன்றான திபா 2 “கடவுள் தேர்ந்துகொண்ட அரசர்” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. அதன் 8ஆம் வசனம் “பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்” என்பதே இன்றைய பல்லவி. அதன் தொடர்ச்சியாக “பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்” என்றும் வாசிக்கிறோம். இஸ்ரயேலரின் அரசர்களில் ஒருவரைப் பற்றிப் பாடப்பட்ட இந்தத் திருப்பாடல் இப்போது மெசியாவாம் இயேசுவின்மீது ஏற்றிப் பாடப்படுகிறது. குறிப்பாக, “நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” (2:7) என்னும் வரிகள் இயேசுவையே குறிக்கின்றன. திருத்தூதர் பணிகள் நூலில் அந்தியோக்கு நகரின் தொழுகைக்கூடத்தில் பவுல் ஆற்றிய மறையுரையில் “இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக...

திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது. இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள்...

கடவுளுக்கு நாம் செலுத்தும் நன்றி

இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்  உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த திருப்பாடல் கடவுள் வாக்களித்த மெசியாவைப்பற்றியும், அவர் இந்த உலகத்தை எப்படி ஒன்றுசேர்க்கப்போகிறார் என்று எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னமே சொல்கிற இறைவாக்கு தொடர்பான திருப்பாடல். மெசியா கொண்டு வருகிற மீட்பும், மீட்பைப்பெற்றவர்களின் மகிழ்ச்சியும் இங்கே பாடலாகத் தரப்படுகிறது. கடவுள் நமக்கு செய்திருக்கக்கூடிய வல்ல செயல்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரைப்போற்ற வேண்டும். புகழ வேண்டும். அந்த புகழ்ச்சி ஒவ்வொருமுறையும் புதுமையானதாக இருக்க வேண்டும். அது சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுள் நமக்கு வல்லமையுள்ள, ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருப்பாடல் கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கடவுளுக்கு எப்போது நாம் நன்றிக்குரியவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் பெற்றுக்கொண்ட கொடைகள் அளப்பரியவை. அந்த நன்றியுணர்வோடு இந்த திருப்பாடல் வழியாக கடவுளைப் புகழந்தேத்துவோம். அருட்பணி. ஜெ....

புத்தாண்டு + கன்னி மரியாள் – இறைவனின் தாய் பெருவிழா

கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக ! புதிய ஆண்டின் முதல் நாளாகிய இன்று நமது பதிலுரைப் பல்லவி இவ்வாறு இறைவனின் ஆசியை வேண்டுகிறது: “கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக”. என்ன அருமையான வேண்டுதல்! ஆண்டின் முதல் நாளில் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் காலை தோறும் நாம் எழுப்ப வேண்டிய நல்லதொரு வேண்டுதல். இந்த வேண்டுதல் நமக்கு இரண்டு இறையியல் உண்மைகளை நினைவூட்டுகிறது: 1. இறைவனின் ஆசி இன்றி, நம்மால் வெற்றி பெற இயலாது. நமது பணிகள் பலன் தரமாட்டாது. எனவே, இறைவனின் துணையுடனே நமது அன்றாடக் கடமைகள் ஆற்றப்பட வேண்டும். 2. இறைவன் இரக்கம் நிறைந்தவர், அவரது பேரிரக்கம் நம்மோடு என்றுமுள்ளது. நாம் கேட்காமலே நம்மீது இரக்கம் பொழியும் இறைவன், ஆவலோடு வேண்டும்போது நிச்சயம் ஆசிகளை மழையெனப் பொழிவார். திருப்பாடல் 67 ஒரு நன்றிப் புகழ்ப்பா. “நரம்பிசைக் கருவிகளுடன் பாடவேண்டிய புகழ்ப்பாடல்” என மூல...