Tagged: Daily manna

திட்டமிட்டு இழக்காதே!

(யோவான் 05 : 17-30) ஓய்வு நாளன்று இயேசு குணமளித்ததனால் (நேற்றைய நற்செய்தி) பரிசேயர்கள் அவர் மீது கோபம் கொண்டு பொங்கி எழுகின்றனர். இன்றைய நற்செய்தி, அப்பரிசேயர்க்குப் பதிலாகவும், இன்னும் தெளிவில்லாமல் நிலைவாழ்வினைப் பற்றி கேள்வி கேட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் நல்லதொரு புரிதலாகவும் அமைகிறது. புடிக்கும் காலத்திலே எல்லோர்க்கும் கணிதப் பாடம் எளிதாக வராது அல்லவா? அப்பொழுது எம் கணித ஆசிரியர் கூறுவார், நான் கணிதப்பாடத்தை எளிதாக்கி உங்கள் கைகளில் கொடுத்துவிட்டேன். இனி நீங்களே தேர்ச்சி பெறக் கூடாது என்று நினைத்தால் கூட உங்களால் ஆகமுடியாது. ஆனால் தேர்ச்சி பெறக் கூடாது என்று திட்டம் போட்டு செயல்பட்டால் மட்டுமே, உங்களால் தேர்ச்சி பெறாமலிருக்க முடியும் என்பார். இதைப் போன்று தான் நம் இயேசு “நிலைவாழ்வு” என்ற சூத்திரத்தை மிக எளிதாக்கி, நம் கண்முன், நம் கைகளில் வைத்துவிட்டார். “என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புவோர் நிலைவாழ்வினைப் பெற்றுக் கொள்வர்”....

ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்

திருப்பாடல் 46: 1 – 2, 4 – 5, 7 – 8 இறைவன் தான் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருக்கிறவர். அவரின்றி அணுவும் அசையாது. எனவே, வாழ்க்கையில் பயம் இல்லை, என்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் தான், இன்றைய திருப்பாடல் நமக்குத்தரக்கூடிய வார்த்தைகள். கடவுள் எல்லா நேரத்திலும், தான் தேர்ந்து கொண்ட மக்களோடு இருக்கிறார். குறிப்பாக, அவர்களது துன்பநேரத்தில் அவர்களோடு தங்கியிருக்கிறார். இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு தான் பயமுறுத்தினாலும், கடவுளின் பாதுகாப்பு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எனவே, எவற்றிற்கும் பயப்படுவது கிடையாது. கடவுள் தான் எல்லாமுமாக இருக்கிறார். எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். எதிரிகளை வெற்றி பெறச் செய்கிறார். எல்லாவித நெருக்கடிகளிலிருந்தும் ஆண்டவர், கடவுளின் பிள்ளைகளை விடுவிக்கிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவர் உடன் இருப்பதால், எத்தீங்கும் நெருங்கப்போவதில்லை. வாழ்க்கையில் பலவீனத்தில் தவறுகள் செய்தாலும், கடவுள் மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். இன்றைய நற்செய்தியிலும் 38 ஆண்டுகளாக,...

புகழ்ச்சியும் தற்பெருமையும்

நம்மைப்பற்றி நாமே புகழ்வது தற்பெருமை. அடுத்தவர் நம்மைப்பார்த்து வியந்து பேசுவதுதான் புகழ்ச்சி. இந்த தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் வேறுபாடு தெரியாமல், வாழ்வையே இழந்தவர்கள் தான் பரிசேயர்கள். பரிசேயர்கள் தாங்கள் செய்வது சரி என்று நினைத்தார்கள். அது தவறு இல்லை. ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், தாங்கள் செய்வது மட்டும் தான் சரியென்று நினைத்தார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு. இதனைத்தான் இயேசு நேரடியாகக் கண்டிக்கிறார். இயேசு எப்போதுமே தன்னைப்பற்றி உயர்வாகப் பேசியதில்லை. ஆனால், மக்கள் அவரை உயர்வாகப் பேசினார்கள். பரிசேயர்கள் எப்போதுமே தங்களை உயர்வாகவே எண்ணினார்கள். ஆனால், மக்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இது அவர்களுக்கு தெரியாமலும் இல்லை. ஆனாலும், தங்களது அதிகாரத்தினால், மக்களை அடிபணிய வைத்தனர். தாங்கள் நினைத்ததைச் சாதித்தனர். இப்படிப்பட்ட தற்புகழ்ச்சியை இயேசு கடுமையாக எதிர்க்கிறார். இன்றைக்கு புகழ்ச்சி என்பது நமது வாழ்வைப்பார்த்து, மக்கள் நமக்குக் கொடுக்கக்கூடிய அடையாளம். அதனை நாமே கேட்டுப்பெற முடியாது. நாம் வாழக்கூடிய வாழ்வைப்பார்த்து, அது நமக்குக் கொடுக்கப்பட வேண்டும்....

இணைந்து செல்லும் கட்டளை

மாற் 12:28-34 திருச்சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். இவர்களைத் தலைமையின்று சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்து வலியுறுத்தியவர்களில் மறைநூல் அறிஞர்களின் பங்கும் மிகப் பெரியது. ஆனால் இயேசுவின் போதனையின் ஆழத்தை உணர்ந்த மறைநூல் அறிஞருள் ஒருவர் அவரை அணுகி சிறந்த கட்டளை ஏது? எனக் கேட்கின்றார். ஒரு கேள்விக்கு இரு பதில்கள் கூறப்பட்டது போலத் தோன்றினாலும், இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இறையன்பு இல்லாமல் பிறரன்பு இல்லை. பிறரன்பு இல்லாமல் இறையன்பு இல்லை. இந்த இரண்டுக் கட்டளையும் ஒன்றை விட்டு மற்றொன்று முழு அர்த்தம் பெற இயலாது. கடவுளை முழு மனத்தோடு நேசிக்கும் எவரும் கடவுளின் சாயலான (தொ.நூல் 1:27) மனித இனத்தை அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் அவர் வெளிப்படுத்துவது மக்களிடையே தான். எனவேதான் கடவுள் தனது ஒரே மகனை மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்புகிறார். (யோவான் 3:16) அதே யோவான் தனது திருமுகத்தில் கடவுளிடம்...

இரட்டை நிலைப்பாட்டைக் களைய

லூக் 11 : 14-23 இரட்டை நிலைப்பாட்டைக் களைய இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது. “உனக்கு வந்தா இரத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா” என்ற நகைச்சுவை. இது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் நம்மை அழைக்கிறது. இதில் சிந்திக்க என்ன இருக்கிறதென்றால் நம்முடைய இரட்டை வேடம். இந்த வேடத்தை தேவைக்கு ஏற்றவாறு போட்டுக் கொள்கிறோம். தேவையில்லை என்றால் நாம் கழற்றி எறிந்து விடுகிறோம். இதனையே இன்றைய நற்செய்தியில் நம்மால் காணமுடிகிறது. பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, ‘நீர் பேய்களின் தலைவரைக் கொண்டே பேய் ஓட்டுகிறீர்’ என்கிறார்கள். ஆனால் அவர்களைச் சார்ந்தவர்கள் செய்கின்ற வல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் வல்லமையால் நடக்கிறது என்கிறார்கள். இதைத்தான் பலநேரங்களில் பரிசேயத்தனம் என்போம். இந்த இரட்டை நிலைப்பாட்டைக் களையவே இன்றைய நற்செய்தியும் தவக்காலமும் நம்மை அழைக்கிறது. சில இரட்டை நிலைகள் : • நான் எதையாவது சாதித்தால் அது என்னுடைய திறமையினால் என்கிறேன். அதையே...