Tagged: Daily manna

அக்கரையில் அவரின் அக்கறை (யோவான் 21 : 1-14)

உயிர்ப்பும், உயிர்த்த உடலும் எப்படியிருக்கும் என்ற செய்தியைத் தருவதோடு இயேசுவின் அன்பையும் அக்கறையையும் இந்நிகழ்வு இன்னும் அதிகமாக எடுத்துக் கூறுகின்றது. திருத்தூதர்களில் சிலரைத் தவிர அனைவரும் படிப்பறிவற்ற சாதாரண மீனவர்கள். இவர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போலவோ, மாமேதைகள் போலவோ கதை கட்டத் தெரியாது. இவர்கள் கற்பனை உலகில் வாழ்பவர்களல்ல. எதார்த்தத்தை எதார்த்தமாக எதிர்ப்பவர்கள். கண்ட காட்சிகளை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமளவிற்கு முட்டாள்களுமல்ல. தாங்கள் கண்டதை, தொட்டுணர்ந்ததை உலகிற்கு அறிவித்தனர். இயேசு வெறும் ஆவியன்று என்பதற்கு சான்றுதான் இந்நிகழ்ச்சி. அதேநேரத்தில் அவர் நம்மைப் போன்ற உடலைக் கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை. மாட்சிமை நிறைந்த உடலையே அவர் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆவி, கை நீட்டி இப்பக்கம் வலையைப் போடுங்கள் என்று சொல்லுவதில்லை. நெருப்பு மூட்டி மீன் சாப்பிடுவதில்லை. இதன் மூலம் நமக்கு அதிகமாக இல்லாவிட்டாலும் உயிர்ப்பைப் பற்றிய சில தெளிவுகள் கிடைக்கின்றன. நமது வாழ்விற்கு இன்றைய நற்செய்தி வலுவூட்டுவதாக அமைகிறது. இயேசு நம் அன்றாட வாழ்க்கையில்,...

கலக்கத்தைக் கலகலப்பாக்க! (லூக்கா 24 : 35-48)

அகக்கண்கள் திறந்திருந்தாலும் அவர்களின் மனக்கண்கள் மூடியே இருந்தன. இதுவரை ஒருவருக்கும் இருவருக்குமாய் தோன்றி தன்னை வெளிப்படுத்திய ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அனைவரும் குழுமியிருக்க அங்கே தன் உயிர்ப்பின் மாட்சியை வெளிப்படுத்துகிறார். அவர் இறப்பினைப் பற்றி முன்னறிவிக்கும் போது புரியாதவை இப்பொழுது மட்டும் என்ன புரியவா போகின்றது? இது இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இயேசு உயிர்ப்பினைப் பற்றி அவர்கள் உணர கடும் பாடுபடுகிறார். இந்த சிரமத்தை அவர் இறப்பதற்கு முன்பாக எடுக்கவில்லையே! காரணம், இயேசு இறந்துவிட்டதால் சீடர்கள் அனைவரும் கலக்கமும், பீதியும் அடைந்திருந்தார்கள். வாழ வேண்டுமா அல்லது யூதாசினைப் போன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா அல்லது பேதுருவைப் போல அதிகார வர்க்கத்தினருக்குப் பயந்து இயேசுவை மறுதலிக்க வேண்டுமா என்றெண்ணி கூனிக்குருகி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார் என ஆங்காங்கே கேள்விப்படுவதைக் கேட்டு இவர்களின் கலக்கம் குழப்பமாக மாறியது. இது இவர்களுக்கு இன்னும் வேதனையைக் கொடுக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்...

இருளினை அவரின் அருளால் …

(யோவான் 20 : 11-18) கிறித்தவர்களின் உண்மையான முகத்தைப் பார்க்கும் போது இயேசு கிறித்து உயிருடன் எழுந்தார் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறாhர் – கடவுள் மறுப்பாளர் பிரடெரிக் நீட்சே. இயேசுவை அதிகமாக அன்பு செய்தவர்களில் மகதலென் மரியாவுக்கு சிறப்பான இடம் உண்டு. அப்படிப்பட்டவர்க்கு எப்படி இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை? தோட்டக்காரர் என்று எப்படிக் கூறுகின்றார்? இந்தக் கேள்விகளுக்கு இருபதாம் பிரிவின் முதல் இறைவார்த்தைப் பதிலாக அமைகின்றது. “இருள் விலகும் முன்பே”. இங்கே “இருள்” என்ற ஒற்றைப் பதத்தை நேரடியான மற்றப் பொருள் பொதிந்த பதமாகவே நான் பார்க்கிறேன். யோவான் நற்செய்தியாளரது, வார்த்தைகளின் ஆழம் அளப்பரியது என்பதை நாம் அறிவோம். இந்த “இருள்” தன் அன்பரை இழந்துவிட்டேன் என்ற கவலையினாலும் கண்ணீராலும் வந்த இருள். ஆண்டவர் இயேசு இறந்து விட்டார் என்ற அறியாமையினால் வந்த இருள். மூன்றாம் நாள் அவரின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாமல் அவரின் சடலத்தை...

தேடலின் விடை

(மத்தேயு 28: 6-15) திகிலுற்றுக் கிடந்த அனைவருக்கும் இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. முடங்கிக் கிடந்தவர்கள் அனைவரும் முடுக்கி விடப்பட்டனர். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியைப் பரப்ப ஒருபுறம் சமுதாயத்தால் மதிக்கப்படாத பெண்கள் ஓடுகின்றனர். மறுபுறம் அவர் உயிர்ப்பின் செய்தியை சோற்றுக்குள் மறைக்கப்பட்ட பூசணிக்காயைப் போன்று மறைத்துவிட அதிகார வர்க்கத்தினர் ஆட்களை அனுப்புகின்றார்கள். பலவீனமான பெண்கள் ஒருபுறம், படைக்கவசங்களுடன் பலம் வாய்ந்த படைவீரர்கள் மறுபுறம். உண்மையைக் கையில் எடுத்துக் கொண்டு அன்பினால் இயக்கப்படும் பெண்கள் ஒருபுறம். கையூட்டுக் காசினைப் பெற்றுக் கொண்டு உண்மையினை மூடி மறைக்க எண்ணும் கூட்டம் மறுபுறம். அவர்களுக்குத் தெரியவில்லை இருளை விரட்டியடிக்க சிறு தீக்குச்சியே போதுமென்று. உண்மை மலையின் மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கினைப் போன்றது. விளக்கினைத் தேடும் விண்மினிப் பூச்சிகள் ஒவ்வொன்றும் ஒளியினால் ஈர்க்கப்படும். தேடலின் விடை ஒளியில் மட்டுமே கிடைக்கும். உலகின் ஒளியை நாமும் வேட்கையோடு தேடினால் ஒளியை அடைந்து விடுவோம். திருத்தொண்டர்...

பேதுருவின் உயிர்ப்பு அனுபவம்

இயேசு தனது சீடர் ஒவ்வொருவரின் மீதும் எந்த அளவுக்கு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பது, இந்த உயிர்ப்பு நிகழ்ச்சியில் தெளிவாகிறது. இயேசு இறந்தபோது ஓய்வுநாள் நெருங்கிவிட்டதால் அவசர, அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்தனர். எனவே, வழக்கமாக செய்யும் சடங்குமுறைகளை முழுமையாக அவர்களால் செய்ய முடியவில்லை. செய்ய வேண்டிய சடங்குமுறைகளை செய்துமுடிப்பதற்காக வெகுவிரைவாகவே, ஓய்வுநாள் முடிந்தவுடன் கல்லறைக்குச் செல்கிறார்கள். ஏறக்குறைய எல்லார் மனதிலும் ஒருவிதமான கலக்கமும், திகிலும் நிறைந்திருக்கிறது. எல்லாமே முடிந்துவிட்ட மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இரண்டொரு நாட்களில் அவர்களின் வாழ்வே மாறிவிடும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை. அப்படியிருக்கிற சூழ்நிலையில் தான், இயேசு உயிர்த்துவிட்டார் என்கிற செய்தி, சீடர்களுக்குத் தரப்படுகிறது. இந்த செய்தி அனைவருக்கும் சொல்ல முடியாத மகிழச்சியைத் தந்திருந்தாலும், பேதுருவுக்கு அது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால் வெண்தொங்கலாடை அணிந்த இளைஞர் பெண்களிடம், ”பேதுருவிடமும், மற்றச்சீடரிடமும் உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்” என்ற...