Tagged: Daily manna

உரிமைச்சொத்து

திருப்பாடல் 33: 12 – 13, 18 – 19, 20, 22 கடவுளை தம்முடைய தலைவராக தேர்ந்து கொண்ட இனமும், ஆண்டவர் தன்னுடைய உரிமைச்சொத்தாக தேர்ந்து கொண்ட இனமும் பேறுபெற்றது என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். இந்த பாடலானது, அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல். இஸ்ரயேல் மக்களின் அனுபவத்தை வெளிப்படுத்தும் பாடல். அவர்கள் கடவுளை தங்களது ஆண்டவராக தேர்ந்தெடுத்தனர். கடவுளும் அவர்களை தன்னுடைய உரிமைச் சொத்தாக தேர்ந்தெடுத்தார். கடவுளுடைய அன்பு இஸ்ரயேல் மக்களுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. ஏனென்றால், கடவுள் அவர்களை அன்பு செய்தார். பஞ்சத்திலிருந்து அற்புதமாக அவர்களை வழிநடத்தினார். எகிப்தின் உணவுப்பொருட்களுக்கு பொறுப்பாளராக யோசேப்பை நியமித்தவரும் அவரே. இதன் வழியாக, இஸ்ரயேல் குலம் முழுமைக்கும் தங்கு தடையின்றி உணவு கிடைக்க வழிவகை செய்தார். எதிரிகள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக போர் தொடுத்து வந்தபோதிலும், அவர்களை துவம்சம் செய்து, இஸ்ரயேல் மக்களை பாதுகாத்தவர் ஆண்டவரே. ஏனென்றால், அவர் அவர்களை அந்த அளவுக்கு...

ஆறுதலின் இறைவன்

நமது வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது, நம்மோடு இருந்து, நமக்கு ஆறுதலைத் தரக்கூடியவராக நம் இறைவன் இருக்கிறார் என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது. நமது இறைவன் ஆறுதலின் தேவனாக இருக்கிறார். ஆறுதல் என்றால் என்ன? ஆறுதல் யாருக்குத்தேவை? மத்தேயு 5: 4 சொல்கிறது: ”துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்”. யாரெல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இறைவன் ஆறுதலைத் தரக்கூடிய தேவனாக இருக்கிறார். இறைவன் மூன்று வழிகளில் தனது ஆறுதலை வெளிப்படுத்துகிறார். முதலாவது, தனது வார்த்தையின் வடிவத்தில் ஆறுதலை வெளிப்படுத்துகிறார். யோவான் நற்செய்தியில் இயேசு சிலுவையில் இருக்கிறபோது, மரியாவுக்கும், அவருடைய அன்புச்சீடருக்கும் மிகப்பெரிய துன்பம். மரியாவுக்கு மகனை இழக்கிற வேதனை. யோவானுக்கு தன்னுடைய குருவை, வழிகாட்டியை இழக்கிற கொடுமை. அந்த நேரத்தில், “இதோ உன் தாய், இதோ உன் மகன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இரண்டுபேருக்குமே ஆறுதலைத் தருகின்றன. இரண்டாவது, தனது உடனிருப்பின் வழியாக இறைவன் மக்களுக்கு ஆறுதலாக...

மீண்டு(ம்) எழுவோம்

இந்த உலகத்தில் கவலைகொள்ளாத மனிதர்கள் இல்லை. கவலைப்படுவதினால் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது, என அறியாதவர்களும் யாரும் இல்லை. ஆனாலும், ஒவ்வொருநாளும் கவலை என்கிற கரையான், நம்மை அரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் இயேசுவின் வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை, நமது சோகமயமான வாழ்வை சிந்தித்துப் பார்த்து, மகிழ்ச்சியான வாழ்வு வாழ அழைப்புவிடுக்கிறது. அடிப்படையில் கவலை கொள்வது என்பது, கடவுள் நம்பிக்கையற்ற தன்மையைக் குறிக்கிறது. நாம் கடவுளை நம்புகிறோம். அவர் நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார் என்று விசுவசிக்கிறோம். அந்த விசுவாசத்தைத்தான் நாம் வாழ்ந்து கொண்டு, அறிக்கையிடுகிறோம். ஆனாலும், பல வேளைகளில் கவலை, அந்த நம்பிக்கையை, காட்டாற்று வெள்ளம் போல, அடித்துச்சென்று விடுகிறது. அதனை எப்படி எதிர்கொள்வது? விடாமுயற்சி. மீண்டும், மீண்டும் நாம் விழுந்தாலும், மீண்டும், மீண்டும் நாம் எழ வேண்டும். நமது முயற்சியை எக்காரணத்தைக்கொண்டும், எந்த காலத்திலும் விட்டுவிடக்கூடாது. இயேசு எவ்வாறு தனது கல்வாரி பயணத்தின்போது, கீழே விழுந்தாலும், மீண்டும், மீண்டும் எழுந்தாரோ,...

நல்ல செயல்பாடுகள்

ஒரு மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன், துறவியைச் சந்தித்தானாம். இந்த உலகத்திலே தான் நினைத்தது எல்லாம் சாதித்து விட முடியும், தனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிவிட முடியும். என்னால் வாங்க முடியாதது ஒன்றுமேயில்லை, என்று தற்பெருமையாகச் சொன்னானாம். அவர் கூறியதை அமைதியாக கேட்ட அந்த துறவி, ஒரு சிறிய ஊசியைக்கொடுத்து, ”தயவுசெய்து, நீங்கள் இறந்து மேலுலகத்திற்கு வருகிறபோது, இதனை எனக்காக கொண்டு வருவீர்களா? என்று கேட்டானாம். கோபமடைந்த அந்த செல்வந்தன், இது என்ன முட்டாள்தனமான பேச்சு? யாராலும் இதனைக் கொண்டு வரமுடியாதே? என்று கத்தினான். ”அதேபோலத்தான், நீ சேர்த்து வைத்திருக்கிற செல்வமும். இதனால், மேலுலகத்தில் ஒரு பயனும் கிடையாது. ஒரு பைசா கூட, நீ இங்கிருந்து அடுத்த உலகத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது. பகிர்ந்து வாழ்வதற்கு முயற்சி செய்” என்று துறவி தன் வழியே சென்றாராம். வாழ்க்கையில் தேவைக்கு அதிகமாக செல்வத்தைச் சம்பாதித்துவிட்ட பலபேரின் மனநிலை, இந்த செல்வந்தனின் மனநிலையைப் போலத்தான் இருக்கிறது. இந்த...

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 7 – 8 யூதர்கள் தங்களின் வாழ்க்கையில் நடக்கிற எல்லாவற்றையும், கடவுளின் செயலோடு பொருத்திப்பார்க்கிறவர்கள். தங்கள் வாழ்வில் நடக்கிற எல்லாமே கடவுளின் ஆணைப்படி தான் நடக்கிறது. கடவுள் தான் தங்களை வழிநடத்துகிறார் என்பதில், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த பிண்ணனியில் தான், திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை என்று சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? வாழ்க்கையில் ஒரு சில விரும்பாத நிகழ்வுகள் நடக்கிறபோது, நாம் கடவுளிடத்தில் கோபப்படுகிறோம். கடவுள் தான் நம்மை இந்த நிலைக்கு விட்டுவிட்டார் என்று வருத்தமடைகிறோம். அவரிடத்தில் நாம் முறையிடுகிறோம். ஆனால், காலம் கடந்து நாம் சிந்திக்கிற வேளையில், நாம் விரும்பாத நிகழ்வுகள் தான், நமக்கு மிகச்சிறப்பான ஆசீர்வாதத்தை தந்திருப்பதை, நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்திருப்போம். அப்போதுதான், நாம் கடவுளுக்கு அந்த விரும்பாத நிகழ்வுகளைத் தந்ததற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பிண்ணனியில் பார்க்கிறபோது, கடவுளின் செயல்கள்...