Tagged: Daily manna

ஆண்டவர் எனக்குச் செவிசாய்த்தார்

திருப்பாடல் 116: 1 – 2, 3 – 4, 5 – 6, 8 – 9 ஆண்டவர் இரக்கமுள்ளவர். எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், உண்மையான மனமாற்றத்தோடு திரும்பி வந்தால், நிச்சயம் கடவுள் நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதை, அனுபவப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு பாடல் தான் இந்த திருப்பாடல். இறைவனிடத்தில் நம்பிக்கை உணர்வோடு நாம் மன்றாடுகிறபோது, இறைவனின் அருளும், ஆசீரும் நமக்கு நிறைவாகக் கிடைக்கும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு வெளிக்காட்டுவதாக அமைகிறது. துன்பத்திலும், துயரத்திலும், குற்ற உணர்ச்சியிலும் சாவை எதிர்நோக்கியிருக்கிற மனிதன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறான். சாவை எதிர்கொள்ளவும் பயந்து குழப்பமான நிலையில் புலம்பிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவன் கடவுளைத் தேடுகிறான். அவனிடத்தில் இப்போது இருப்பது தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்திய நிலை. ஆனால், அவன் ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு கடவுள் அவனை ஏற்றுக்கொள்கிறார். அவனுக்கு தன்னுடை மன்னிப்பை வழங்கி, அவனுக்கு பிரச்சனைகளிலிருந்து விடுதலை கொடுக்கிறார்....

ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் செவிசாய்த்தார்

திருப்பாடல் 34: 6 – 7, 9 – 10, 11 – 12 ஏழைகள் சபிக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்ட காலத்தில், கடவுள் ஏழைகளுக்கு செவிசாய்க்க மாட்டார் என்கிற சிந்தனை மக்கள் மனதில் நிலவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட சமுதாயத்தில், ஏழையின் மன்றாட்டு ஆண்டவர் செவிசாய்த்தார் என்பது, ஒரு ஆச்சரியமான செய்தியாக இருக்கிறது. ஆனால், அதுதான் உண்மை என்பதை இந்த திருப்பாடல் நமக்கு மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஏழைக்கு ஏன் ஆண்டவர் செவிசாய்த்தார்? கடவுள் முன்னிலையில் ஏழை, பணக்காரர் என்கிற பாகுபாடு உண்டா? என்கிற கேள்விகள் நம் முன்னால் எழுகிறது. கடவுள் முன்னிலையில் எப்போதுமே ஏழை என்றோ, பணக்காரர் என்றோ பிரிவினை கிடையாது. கடவுள் முன்னிலையில், பொருளாதாரம் சார்ந்த வேறுபாடு கிடையாது. கடவுள் பொருளாதார அடிப்படையில் தீர்ப்பிடுவதும் கிடையாது. அப்படியென்றால், கடவுள் வழங்கும் தீர்ப்பின் அளவுகோல் என்ன? அதுதான் ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்வது. ஆண்டவருக்கு அஞ்சி வாழக்கூடிய எல்லாருமே...

அதிகாரவர்க்கத்தின் போலித்தனம்

திருத்தூதர் பணி 12: 1 – 11 திருத்தூதர்கள் காலத்தில், அரசருக்கு வணக்கம் செலுத்துவது, அரசருடைய உருவங்களுக்கு ஆராதனை செலுத்துவது வெறும் கடமை மட்டுமல்ல, அது அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. அவர்கள் அதனைச் செய்ய தவறினால், கடுமையான கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாகினர். ஆனால், இயேசுகிறிஸ்துவை நம்பிய கிறிஸ்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில், இயேசு ஒருவரே ஆண்டவர். அவரைத் தவிர வேறு யாருக்கும், அடிபணிய மறுத்தனர். இது நிச்சயமாக, ஏரோது அரசனுக்கு கோபத்தை வருவித்திருக்கும். இன்றைய வாசகத்தில், ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. “திருச்சபையைச் சார்ந்த மக்கள்” என்கிற வார்த்தைகள், திருத்தூதர்களைக் குறிக்கிற வார்த்தைகளோ, அல்லது, மேல் மட்ட கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். ஏரோதுவின் இந்த செயல், கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராக கலகம் செய்யலாம் என்று அஞ்சியோ, அல்லது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் தூண்டுதலினாலோ எழுந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக, அவர்களை சட்டத்திற்கு...

செயல்பாடுகளும், எண்ணங்களும்

நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறபோதும், நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று நினைக்கிறபோதும், மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறபோதும் அதனை நாம் உடனே செய்ய வேண்டும். பல வேளைகளில் நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் செய்வதில்லை. அந்த கணம் மறைந்தபிறகு, அதனை நிச்சயமாக செய்ய முடியாது. அதேபோல ஒருவருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த நேரத்தில் சொல்லவில்லை என்றால், அந்த கணம் மறைந்துவிடும். அதற்கு பிறகு அதேபோ ஒரு தருணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. அதேபோலத்தான் இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்தாலும், நாம் உடனடியாக இரக்கம் காட்ட வேண்டும். அல்லது நாம் அதைச்செய்யவே முடியாது. இதுதான் இன்றைய நற்செய்தியிலும் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்பற்ற ஒருவன் விரும்புகிறான். அவன் உடனடியாக பின்பற்றுவதற்கு தயங்குகிறான். அதற்கு பல காரணங்களையும் சொல்கிறான். இயேசுவின் அனுபவத்தில் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த கணம்...

சுயநலமும், பேராசையும்

சாலமோனின் ஞானம் 1: 13 – 15, 2: 23 – 24 இன்றைய வாசகம், இந்த உலகத்தின் யதார்த்தத்தையும், கடவுள் இந்த உலகத்தைப் படைத்து, மனிதர்களுக்கு வாழ்வைக் கொடுத்ததன் நோக்கத்தையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது. வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும், அதற்கு காரணம் கடவுள் தான் என்று, கடவுள் மேல் பழிபோடுகிற கூட்டம் இந்த உலகத்தில் அதிகம். அதேவேளையில், அந்த துன்பத்திற்கு தன்னுடைய பங்கு ஏதாவது இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்பதற்குக் கூட மனிதர்களுக்கு நேரமில்லை. சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், மனிதர்களின் துன்பத்திற்கு காரணம், இந்த உலகத்தில் காணப்படும் பேராசையும், சுயநலமுமே என்பதை, நாம் அறிந்து கொள்ளலாம். சாலமோனின் ஞானம் புத்தகம் சொல்கிறது: “வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை”. கடவுள் இந்த உலகத்தில் சாவை படைக்கவில்லை. மனிதர்கள் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் படைத்தார். ஆனால், மனிதனுடைய பேராசை, அலகையின் வழியாக சாவை இந்த உலகத்திற்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால்,...