கடவுளின் பிரசன்னம்
யோனா இறைவாக்கினர் நினிவே நகருக்கு ஆண்டவருடைய வார்த்தையை அறிவிக்கச் சென்றார். அவருடைய வார்த்தையை அறிவிக்கவும் செய்தார். இன்னும் நாற்பது நாளில் நினிவே அறிவிக்கப்படும் என்றார். மக்கள் மனம்மாறினர். கடவுளும் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அவர்களை அழிக்காது விட்டார். இது யோனாவுக்கு பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, கடவுளிடம் கோபித்துக்கொண்டு, அவர் தன் வழியே செல்கிறார். யோனாவின் வருத்தத்திற்கான காரணம் என்ன? அவர் ஓர் அருங்குறி, அதாவது அழிவு வரும் என்று எச்சரிக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கடவுள் மீது கோபம் கொள்கிறார். ஆனால், யோனா ஒன்றை மறந்துவிடுகிறார். அவர் தான் நினிவே மக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளமேயன்றி, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. மக்கள் யோனாவை நம்பியதால் தான், அவருடைய வார்த்தைகளை நம்புகிறார்கள். எனவே, யோனாவே ஓர் அடையாளம். இந்த உன்னதமான கடவுளின் கொடையை, யோனா இறைவாக்கினர் புரிந்துகொள்ள தவறி விடுகிறார். இந்த உதாரணத்தைப் போலத்தான், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள்,...