Tagged: தேவ செய்தி

பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, (7) வாழ்வின் இன்ப துன்ப வேளை, நெருக்கடி என எது வந்தாலும், ஆண்டவரை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இங்கு தாவீது அரசரின் அனுபவம் வெளிப்படுகிறது. அந்த அனுபவம் இனிமையானது அல்ல, கசப்பானது. அவர் மனிதர்களை நம்பினார். அதிகாரத்தை நம்பினார். தன்னால் எதையும் செய்ய முடியும் என்கிற பலத்தில் நம்பினார். அதற்கான விளைவை அவர் சந்தித்தார். அந்த அனுபவம் அவரை மற்றவர்களுக்கு பாடம் கற்றுத்தருகிற வகையில் அமைந்திருக்கிறது. அதுதான் இன்றைய திருப்பாடல். மனிதர்களாகிய நாம் யார் மீது நமது நம்பிக்கை வைக்கிறோம்? நாம் பணக்காரர்களாக இருந்தால், பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறோம், பணத்தின் மீது நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோம். நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, அதிகாரத்தால் என்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். சமுதாயத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்தால்,...

போதனையும், வாழ்வும்

அடுத்தவர்கள் மீது சுமைகளைச் சுமத்துகிற மனிதர்கள் இந்த உலகில் ஏராளம். தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை, சோம்பேறித்தனத்தின் பொருட்டு செய்யாமல், அடுத்தவர்களை ஏவுகிற வேலையைச் செய்கிறவர்களை நாம், அன்றாட உலகில் பார்க்கலாம். அத்தகைய மனிதர்களைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தியும் பேசுகிறது. திருச்சட்ட அறிஞர்களைப்பார்த்து இயேசு இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். திருச்சட்ட அறிஞர்கள் சட்டத்திற்கு விளக்கம் கொடுக்கிறவர்கள். அவர்கள் மக்களுக்கு சட்டங்களை விளக்கிக்கூறுகிறவர்கள். எதையெல்லாம் பின்பற்ற வேண்டும்? எதையெல்லாம் பின்பற்றக்கூடாது? என்று, மக்களுக்கு அறிவுறுத்துகிறவர்கள். மக்களுக்கு சட்டங்களைப் பின்பற்றச் சொல்கிற இவர்கள், தாங்கள் சொல்பவற்றை ஒருபோதும் பின்பற்றுவது கிடையாது. ஆனால், மக்கள் பின்பற்றவில்லை என்றால், அதற்கான தண்டனையைச் சுட்டிக்காட்டி, அவர்களின் மீது, தாங்க முடியாத சுமைகளைச் சுமத்திக்கொண்டிருந்தார்கள். தாங்களோ, சட்டங்களை மதிப்பதை ஒரு பொருட்டாக எண்ணியது இல்லை. இந்த வழக்கத்தை இயேசு எதிர்க்கிறார். கண்டிக்கிறார். நமது வாழ்விலும் கூட, மற்றவர்களுக்கு பலவற்றைப் போதிக்கிற நாம், அவர்களை இறைவன்பால் கட்டியெழுப்புவதற்கு பல திட்டங்களைத் தீட்டக்கூடிய...

வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4, (1அ) கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது நம்முடைய நம்பிக்கை. இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் பார்க்கிறபோது, பலவிதமான அறிவியல் வாதங்கள் நம் முன்னால் வைக்கப்படுகிறது. ஒரு செல் உயிரிலிருந்து மனித இனம் உருவானது என்று சொல்லப்படுகிறது. பரிணாம வளர்ச்சி தான் அடிப்படை என்கிற கருத்து வைக்கப்படுகிறது. கோள்கள் வெடித்துச் சிதறியதில் தற்செயலாக உயிரினங்கள் தோன்றின என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இப்படி இந்த உலகம் தோன்றியதற்கு பலவிதமான வாதங்களை அறிவியல் உலகம் நம் முன்னால் வைக்கிறது. ஆனால், விசுவாசிகளுக்கு, கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை. விவிலியத்தின் தொடக்கநூலில் நாம் பார்க்கிறோம், கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். தொடக்கநூலில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதையும் நாம் அறியாதவர்கள் அல்ல. விவிலியத்தை அறிவியல்பூர்வமாக ஆராய முற்படுகிறபோது, முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், விவிலியத்தை எழுதிய...

பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்

திருப்பாடல் 98: 1, 2 – 3ab, 3cd – 4 நீதி என்பது ஒருவருக்கு உரியதை அவருக்கே கொடுப்பது ஆகும். அது பரிசாகவும் இருக்கலாம், தண்டனையாகவும் இருக்கலாம். பிற இனத்தார் முன் கடவுள் தம் நீதியை எப்படி வெளிப்படுத்தினார்? அவர்கள் எப்படி கடவுளின் நீதியை கண்டு கொண்டனர்? கடவுளைப் பற்றிய பார்வை, கடவுள் தன்னை வழிபடும் மக்களுக்கு உதவியாக இருப்பார் என்பது. அவர்கள் தவறு செய்தாலும் அவருக்காகவே அவர் போரிடுவார், அவர்கள் பக்கம் தான் அவர் நிற்பார் என்பதாகும். இதைத்தான் இஸ்ரயேல் மக்களும் நம்பினர், மற்றவர்களும் எண்ணினர். இஸ்ரயேல் மக்களின் கடவுளைப் பொறுத்தவரையில் அவரும் மற்ற கடவுளைப் போல, இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தாலும், அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று பிற இனத்தவர் எண்ணினர். ஆனால், நடந்தது வேறு. இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தபோதெல்லாம், அவர்களை தண்டிக்கக்கூடியவர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தினார். இது கடவுள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானவர்...

ஞானத்தைத் தேடுவோம்

சாலமோனின் ஞானம் 7: 7 – 11 இறைவனைத் தேடுவோரின் வாழ்க்கை என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை வலியுறுத்திச் சொல்வது தான், இன்றைய வாசகம். இந்த உலகத்தில் வாழ்கிற நாம், எப்போதும் செல்வத்தைத் தேடுகிறோம். செல்வம் தான் எல்லாவற்றிலும் சிறந்தது என்று நம்புகிறோம். பணம் இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும் என்பது நமது எண்ணம். அதைத்தான் இந்த உலகமும் கற்றுக் கொடுக்கிறது. செல்வம் இல்லையென்றால், இந்த உலகத்தில் மனிதர்களுக்கு மதிப்பு இல்லை. எனவே, மதிப்பிற்காக, ஆடம்பரத்திற்காக, அதில் தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு செல்வதைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். உண்மையில், செல்வம் நமக்கு நிறைவைத் தருவதில்லை. இந்த உண்மையை, எத்தனையோ செல்வந்தர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தாலும், அதனை நேரடியாக உணர்ந்தால் அன்றி, அனுபவித்தால் அன்றி, அந்த உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. சாலமோன் அரசர் ஞானத்தின் பெருமையை இந்த வாசகத்தில் உணர்த்துகிறார். அவர் கடவுளிடம் செல்வத்தைக்...