Tagged: தேவ செய்தி

அன்னாவின் எதிர்நோக்கு

யூதர்களைப் பொறுத்தவரையில் தங்களது நாடு கடவுளால் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு என்ற எண்ணம் இருந்தது. மற்றவர்களை தாங்கள் ஆளுவதற்காகவே பிறந்தவர்கள் என்கிற சிந்தனையும் அவர்களின் உள்ளத்தில் இருந்தது. ஆனாலும், இது மனித வழிகளைக் கொண்டு நிறைவேற்ற முடியாது, கடவுளின் உதவியுடன் தான் நிறைவேற்ற முடியும் என்று நினைத்தனர். அதற்கான காலம் கனியும்போது, தாங்கள் நினைத்தது அனைத்தும் நடைபெறும் என்று நம்பினர். இந்த நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் பலர் இருந்தார்கள். இதனைப்பற்றி பல கருத்துக்கள் மக்கள் மனதில் தங்கியிருந்தது. ஒரு சிலர் கடவுள் யாரையாவது அனுப்புவார் என்று காத்திருந்தனர். மற்றும் சிலர், கடவுளே நாம் எதிர்பார்க்காத முறையில் வந்து, அனைத்தையும் மாற்றுவார் என்று எண்ணினர். மற்றும் ஒருசிலர், இதுபோன்றதை நம்பாமல், விடாத செபத்திலும், நடப்பவற்றை அமைதியான முறையிலும் கவனத்தோடு கண்காணித்துக்கொண்டிருந்தனர். நிச்சயமாக இயல்பாகவே கடவுளின் நாள் வரும் என்று நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருந்தனர். அதில் ஒருவா் தான் இன்றைய நற்செய்தியில் வரும் அன்னா என்கிற பெண்....

இயேசுவின் அன்புக்கட்டளை

1யோவான் 2: 3 – 11 இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று பலர் முயற்சி எடுக்கின்றனர். இறைவனை எப்படி அறிந்து கொள்ள முடியும்? இறைவனை எங்கே பார்க்க முடியும்? இறைவனை எப்படி தேட முடியும்? இறைவனை அறிந்து கொள்வதற்கு இன்றைய முதல் வாசகம் ஓர் எளிதான வழியை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. அது என்ன? ”இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும்”. ஆக, இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடிக்கிறபோது, இறைவனை நாம் அறிந்து கொள்கிறோம். இயேசுவின் கட்டளை என்ன? இயேசுவின் ஒட்டுமொத்த போதனையும், ஒரே வார்த்தையை மையப்படுத்தியதாகத்தான் அமைந்திருந்தது. அது தான் அன்பு. இயேசு தான் இறப்பதற்கு முன்பு, தன்னுடைய சீடர்களோடு இருக்கிறபோது, இந்த அன்புக்கட்டளையைத்தான் அதிகமாக வலியுறுத்திக் கூறுகிறார். ஆக, இந்த அன்புக்கட்டளைக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறபோது, நாம் இயேசுவை அறிந்து கொள்கிறோம். இயேசுவை அனுபவிக்கிறோம். நம்முடைய...

கிறிஸ்துவுடனான வாழ்க்கை

1யோவான் 1: 5, 2: 2 நேர்மை என்பது நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே நிலவுகிற இணக்கம். இது எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவர் நேர்மையாளராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இதைத்தான் யோவான், தன்னுடைய மடலில் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, இப்படிப்பட்ட நேர்மையான வாழ்க்கை வாழ்வது ஆகும். நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிக்கையிட்டால் மட்டும் போதாது, மாறாக, அவருடைய விழுமியங்களை நாம் வாழ்ந்து வெளிப்படுத்த வேண்டும். ”நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நட்புறவு உண்டு என்போமென்றால், நாம் பொய்யராவோம்”. நம்முடைய வாழ்க்கை பல நேரங்களில் இப்படித்தான் அமைவதாக இருக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் வந்து விட்டோம் என்று சொல்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்க்கை அதனை வெளிப்படுத்தவில்லை. அதற்கு சான்றுபகரவும் இல்லை. நம்முடைய வாழ்க்கை அதற்கு சான்று பகராதபோது, நாம் எப்படி, கிறிஸ்துவுக்குள் வாழ்வதாகச் சொல்ல முடியும்? அது தவறானது மட்டுமல்ல, முற்றிலும் முரண்பட்ட...

இறைத்தந்தையின் இரக்கம்

1யோவான் 1: 1 – 4 யோவானின் நற்செய்தியில், முதல் அதிகாரம் ஒட்டுமொத்த புத்தகத்தின் சுருக்கமாக இருப்பது போல, இந்த கடிதத்தின் முதல் நான்கு இறைவார்த்தைகள், ஒட்டுமொத்த நூலின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது. கடவுள் தான் நிலைவாழ்வை அருள்கிறவர். அந்த நிலைவாழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக இந்த உலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நம்முடைய பாவங்களை மறைத்து விட்டு, கடவுள் முன் நிற்போமேயானால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அதே வேளையில், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய மன்னிப்பிற்காக நாம் காத்திருப்போமே என்றால், நாம் மீட்கப்படுவோம். அதுதான் இங்கு நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. கடவுள் யாரையும் நிர்கதியாக விட்டு விட வேண்டும் என நினைத்ததில்லை. இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் குழந்தையே. அனைவரையும் மீட்க வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எப்படி நிறைவேற்றினார்? நமக்காக சிலுவையில் அறையப்பட்டு,...

அன்னாவின் அர்ப்பணம்

1சாமுவேல் 1: 20 – 22, 24 – 28 விவிலியத்தில் யார் தனியொருவராக அதிகமாக துன்பங்களைச் சந்தித்தவர் என்று பார்க்கிறபோது, நிச்சயம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அதில் முதல் இடமுண்டு. ஏனென்றால், அவர் கடவுளின் மகனாக இருந்தபோதும், மனித வடிவெடுத்தார். வல்லமை இருந்தாலும் கத்தாத செம்மறியாக இருந்தார். தவறே செய்யவில்லை என்றாலும், அவமானச்சிலுவையை ஏற்றுக்கொண்டார். நமக்காக உயிர்துறந்தார். இதற்கு அடுத்து, நிச்சயம் யோபு என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அதன் பின் இறைவாக்கினர்கள், குறிப்பாக எரேமியா, எலியா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவிலியத்தில், அன்னை மரியாளைத் தவிர, பெண்களில் அதிக துன்பப்பட்டவர்கள் என்கிற பட்டியலைப் பார்க்கிறபோது, அவ்வளவாக நமக்கு யாருடைய பெயரும் தென்படுவதில்லை. அவர்களுடைய அதிகபட்ச துன்பமாக நமக்குத் தரப்படுவது, குழந்தையின்மை. நிச்சயம் அது பெண்களுக்கு மிகப்பெரிய துன்பம் தான். ஆண்வர்க்க சமுதாயத்தில், அத்தகைய கொடுமை நிச்சயம் பெண்களுக்கு அதிகமானது தான். இதில் நிச்சயம்...