உதவிக்கரம் நீட்டுவோம்
இயேசு காதுகேளாதவருக்கு குணம் கொடுத்துவிட்டு கடவுளின் வார்த்தையைப் தெக்கப்போலி பகுதியில் போதித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மூன்று நாட்களாக இயேசுவோடு தங்கியிருக்கிறார்கள். யார் இந்த மக்கள்? விவிலிய அறிஞர் ஒருவர் அழகான விளக்கம் ஒன்று தருகிறார். மாற்கு நற்செய்தி 5வது அதிகாரத்தில், இயேசு கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த மனிதர் ஒருவரை நலமாக்குகிறார். அந்த மனிதன் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று விரும்பினான். இயேசுவோ அவரைப்பார்த்து, “உமது வீட்டிற்குப்போய் ஆண்டவர் உமக்குச்செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவித்து வந்தார், என்று பார்;க்கிறோம். இயேசுவோடு இப்போது இருக்கும் மக்கள், பேய்பிடித்திருந்த மனிதர் வழியாக இயேசுவைப்பற்றி அறிந்த மக்கள். அந்த மனிதர் சொன்னதை இப்போது நேரில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசு சீடர்களிடம் ஒரு ஆலோசனைக்கேட்கிறார். இது சீடர்களுக்கு ஒருவிதமான பயிற்சி. என்னதான் சீடர்கள் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று சொல்லி, அவர்களிடம் அப்போது இருக்கிற சூழ்நிலையை விவரிக்கிறார்....