Tagged: தேவ செய்தி

எல்லோர்க்கும் எல்லாமுமான இயேசு

20.02.14 – மாற்கு 8: 27 – 33 இயேசுகிறிஸ்துவை எதற்காக திருமுழுக்கு யோவான், எலியா அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்று மக்கள் சொல்ல வேண்டும்? திருமுழுக்கு யோவான் ஏரோதால் கொல்லப்பட்டார். ஆனாலும், மக்கள் நடுவில் திருமுழுக்கு யோவானுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருந்தது. அவர் தான் உயிரோடு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பினர். யூத மக்கள் மெசியாவின் வருகைக்கு முன்னால் எலியா வருவார் என்று நம்பினர். மலாக்கி 4: 5 கூறுகிறது, “இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்”. எனவேதான் இன்றளவும், யூதர்கள் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடும்போதும் எலியாவிற்காக ஒரு இருக்கையை காலியாக வைத்திருப்பர். எலியா மீண்டும் வருவார் என்று காத்திருந்தார்கள். இயேசு ஒரு முழுமையின் வடிவம். எல்லார்க்கும் எல்லாமுமாக இருந்தவர், இருக்கிறவர் இயேசு. எனவேதான் இயேசுவை மக்கள் பலவிதமாக பார்த்தார்கள். இயேசுவின் தனித்தன்மையும் இதுதான். இயேசு நமது மகிழ்ச்சியில்...

உறவை வலுப்படுத்த முயற்சி எடுப்போம்

9.02.14 – மாற்கு 8: 22 -26 இயேசுவிடம் பார்வையற்ற ஒருவரை அழைத்து வருகிறார்கள். இயேசு அவரை தனியே ஊருக்கு வெளியே அழைத்துச்செல்வதை பார்க்கிறோம். வழக்கமாக மக்கள் மத்தியில் அனைவரும் விசுவாசம் கொள்ளும்பொருட்டு, விசுவாசத்தின் அடிப்படையில் குணம்கொடுக்கும் இயேசுவின் இந்த செயல் சற்று வித்தியாசமானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது. ஏன் இந்த மாறுபாடான செயல்? பொதுவாக, நல்ல மருத்துவர் என்று மக்களால் பாராட்டப்படுகிறவர், அதிகமாக படித்தவர் என்பதில்லை, மாறாக எந்த மருத்துவர் நோயாளிகளின் உணர்வுகளைப்புரிந்துகொண்டு, மருத்துவம் செய்கிறாரோ அவர்;தான் மக்கள் நடுவில் சிறந்தவராக கருதப்படுகிறார். நோயாளியின் உணர்வுகள், அவரது பயம், அவரது கவலை அடிப்படையில் மருத்துவம் செய்கின்றபோது, நோயாளி உடனடியாக குணமடைந்துவிடுவார். ஆனால், இந்த கலை எல்லாருக்கும் இருப்பதில்லை. இயேசு சிறந்த மருத்துவர். அவர் பார்வையற்ற அந்த மனிதரின் உணர்வுகளை நிச்சயமாக புரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப்புதுமையில் இயேசுவிடம் இரண்டு வேறுபாடுகளைப்பார்க்கிறோம். 1. இயேசு அந்த மனிதரை தனியே அழைத்துச்செல்கிறார். 2. உடனடியாக...

விண்ணரசில் நுழைய முற்படுவோம்

பரிசேயர் மற்றும் ஏரோதுவைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்க இயேசு அழைப்பு விடுக்கிறார். எதற்காக பரிசேயர்களை, ஏரோதுவோடு இயேசு ஒப்பீடு செய்கிறார்? பரிசேயர்களுக்கும், ஏரோதுவுக்கும் உள்ள தொடர்பு என்ன? பரிசேயர்கள் மெசியாவை அடிமைத்தளையிலிருந்து மீட்கக்கூடிய, மிகப்பெரிய இராணுவத்தை வழிநடத்தில வெற்றிகொள்கின்றவராகப் பார்த்தனர். ஏரோதுவின் எண்ணமும் இந்த மண்ணகத்தில் தனது அரசை நிறுவ வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அதற்கு குறுக்கே வருகிற அனைவரையும் கொன்றுவிடுவதற்குக்கூட அவன் தயாராக இருந்தான். சற்று இரண்டுபேருடைய எண்ணங்களைப் பார்த்தால், இரண்டுபேருடைய எண்ணங்களும் இந்த மண்ணகம் சார்ந்ததாக இருந்தது. இந்த மண்ணகத்தில் அரசை நிறுவ வேண்டும், இங்கே மகிழ்ச்சியாக அதிகாரத்தோடு, பதவியோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால், இயேசு இந்த எண்ணத்தை நிராகரிக்கிறார். இவர்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள். இவர்களுடைய எண்ணம் மக்களுடைய எண்ணமாக மாறிவிடும். மக்களும், இந்த மண்ணகம் சார்ந்த சிந்தனையிலே வளர்ந்து விடுவார்கள். எனவே, பரிசேயர் மற்றும் ஏரோதுவின் சிந்தனைத்தாக்கம் மக்களை வழிதவறிச்செல்வதற்கு காரணமாகிவிடக்கூடாது என்பது...

மனநிலையை மாற்றுவோம்

இன்றைய நற்செய்தியில் இரண்டு விதமான மனநிலையைப் பார்க்கிறோம். 1. இயேசுவின் மனநிலை 2. பரிசேயரின் மனநிலை. இயேசுவுக்கு நிச்சயமாக வானிலிருந்து அடையாளம் தோன்றச்செய்வது ஒன்றும் கடினமான காரியமல்ல. அவர் நினைத்திருந்தால், எதையும் அவரால் செய்திருக்க முடியும். இதே சோதனை, அவர் பாலைவனத்திலே நாற்பது நாட்கள் நோன்பிருந்து செபிக்கிறபோதும் ஏற்படுகிறது. அப்போதும் அலகையின் சோதனைக்கு இடங்கொடுத்து அருங்குறிகளைச் செய்யவில்லை. இப்போது பரிசேயர்களும் இயேசுவைச் சோதிக்கிறார்கள். ஆனால், இயேசு அதனை நிராகரிக்கிறார். இயேசுவின் வல்லமை தன்னை, தன்னுடைய பலத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அல்ல. மாறாக, இறையரசைக் கட்டி எழுப்புவதற்காக. இறைவனை மாட்சிமைப்படுத்துவதற்காக. எக்காரணத்திற்காகவும், அதனை தனது சுயவிளம்பரத்திற்கு இயேசு பயன்படுத்த விரும்பவில்லை. பரிசேயர்கள் இயேசுவின் புதுமை செய்யும் ஆற்றலை தெரியாதவர்கள் அல்ல. இயேசுவின் அறிவின் ஆழத்தைக் கண்டு அதிசயிக்காதவர்கள் அல்ல. இயேசு தச்சர் மகன் என்றாலும், அவரிடத்திலே தங்கள் அறிவுத்திறமை செல்லாது, என்பதை உணராதவர்கள் அல்ல. இயேசு செய்த அனைத்துப்புதுமைகளும் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும்,...

முரண்பாடல்ல…. முரண்சுவை……

விவிலியம் முழுவதும் செல்வர்களுக்கு எதிரான போர் முரசு முழங்கிக் கொண்டே இருக்கின்றனவே இதன் காரணம் என்ன? ஏழ்மையில் நாம் அனைவரும் இருப்பதையே ஆண்டவர் விரும்புகின்றாரா? அப்படியென்றால் அரசியல்வாதிகளும், செல்வர்களும் கடவுளின் கருவியாகத்தானே இருக்கமுடியும். காரணம் அவர்களால் மட்டுமே இன்று வரை ஏழ்மைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாம் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க நுஆஐ – சீக்கிரம் கட்டிமுடிக்க, பையனுக்கு நல்ல பணக்கார, படிச்ச பெண்ணை பார்க்க……. இன்னும் அடிக்கிக்கொண்டே ஆண்டவரே நின் வரத்தைத் தா என்றல்லவா இன்று அவரின் பாதம் தேடி வந்திருக்கிறோம். ஏழ்மையாய் இருப்பதும் துன்பப்படுவோரும் பேறுபெற்றோர் என்றால் நாம் ஏன் உழைக்கவேண்டும், நாம் ஏன் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் இதனை நுட்பமாக அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இது ஒரு முரண்சுவை. இச்சுவையினை அறிந்திட முயலுவோம். நற்செய்தியை மேலோட்டமாக படிக்கின்றபோது இயேசு நம்மை ஏழையாக பட்டினி கிடந்து சாகக்கூடியவர்களாக, வெறுத்து ஒதுக்கபடுபவர்களாக...