யார் பெரியவர்?
பிரியமானவர்களே!! இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நம்மை அறியாமல் அநேக வேளைகளில் தவறு செய்துவிடுகிறோம். நமக்குள் இருக்கும் கோபம், பொறாமை, அவநம்பிக்கை, எரிச்சல் இவைகளை நாம் கடைப்பிடித்து பாவம் செய்கிறோம். அதனால்தான் நம் ஆண்டவர் நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளையைப்போல் ஆகாவிட்டால் விண்ணுலகில் புகமாட்டீர்கள் என உறுதியாக சொல்கிறார். அதோடல்லாமல் சிறு பிள்ளையைப்போல் தாழ்த்திக்கொண்டவரே விண்ணுலகில் மிகப்பெரியவர் என்று சொல்லியிருக்கிறார். மத்தேயு 18: 3 – 4 ,. நாம் தவறாமல் ஆலயத்துக்கு போகலாம். ஜெபம் செய்யலாம். ஆனால் நம் மனது வஞ்சகத்தினால் நிரம்பியிருந்தால் அதை கடவுள் அறியாரோ! நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கைக்கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். அதை அடக்கி ஆளவேண்டும். தொடக்கநூல் 4 :7 ல் காணலாம். நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார். ஏனெனில் மனிதர் பார்ப்பதுபோல் கடவுள் நம்மை பார்ப்பதில்லை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர். ஆனால் ஆண்டவரோ நம் இதயத்தை [அகத்தை]பார்க்கிறார். 1 சாமுவேல் 16:7....