பழிவாங்கும் எண்ணம் நமக்கு வேண்டாமே!
அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளே!உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் கிறிஸ்துஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். போட்டியும், பொறாமையும் நிறைந்த இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் நம் தேவைகளை சந்திக்க அநேக காரியங்களில் ஈடுபடுகிறோம். பணம் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது உண்மைதான். ஆனால் பணமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று சொல்வார்கள்.நம் இதயத்தில் தோன்றும் சந்தோஷத்தை, மகிழ்ச்சியை எந்த பணத்தாலும் வாங்க முடியாது. அதை கடவுளால் மட்டுமே கொடுக்கமுடியும். நாம் நல்ல நண்பர்களாய் அல்லது நல்ல உறவினர்களாய் இருப்போம். ஆனால் பணம் என்கிற பிசாசு நம் உள்ளத்தில் வந்துவிட்டால் நண்பர்களும், உறவினர்களும் நமக்கு எதிரியாக மாறிவிடுவார்கள். அங்கே போட்டியும், பொறாமையும் தலைவிரித்து ஆடும். அப்பொழுது நம்மை அறியாமல் அவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும், பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தை பிசாசு நம் உள்ளத்தில் விதைப்பான். கடவுளுடைய பிள்ளைகளாகிய நாம் பிசாசுக்கு அடிமையாகிவிடுவோம். நம் சந்தோஷம் சமானாதம் எல்லாவற்றையும் இழந்து தவிப்போம். நம்முடைய அனைத்து காரியங்களையும் நம் ஆண்டவர் அறிந்திருக்கிறார்....