எல்லாம் நன்மைக்கே!
ஜான் ஒரு பெரிய கம்பெனியில் மேனஜராக வேலைப்பார்த்து வந்தான். கை நிறைய சம்பளம்,நல்ல முதலாளி.கடவுள் பக்தி உள்ளவர். ஜானுக்கு ஒரு தம்பியும்,தங்கையும் உண்டு. ஜானின் தம்பி,தங்கை இருவரும் படித்துக்கொண்டு இருந்ததால் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் படிப்பு செலவு,வீட்டு செலவு என்று போதுமானதாக இல்லை. இதனால் ஜான் அநேக வேளைகளில் சோர்ந்து போவான். அவன் அம்மா அவனுக்காக ஆறுதல் சொல்லி,அவனுக்காக ஜெபித்து வந்தார்கள் நம்மை உருவாக்கி நேசிக்கிற ஆண்டவர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார்.நம்மை விட்டு விலகவும் மாட்டார். அவர் காட்டும் பாதையில் நடப்போமானால் அதில் நிச்சயம் நன்மை இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறிவந்தார்கள். ஆனால் ஜானுக்கோ அவ்வளவாய் நம்பிக்கை இல்லை. ஒரு ஆண்டு சென்றது. இந்த சூழ்நிலையில் போய்க்கொண்டு இருந்த கால நேரத்தில் ஜானுக்கு,வேறு ஒரு கம்பெனியில் இருந்து லெட்டெர் வந்தது. இப்பொழுது வேலை பார்க்கும் கம்பெனியை விட கூடுதலான சம்பளம் கிடைக்கும், வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லி கடிதம் அனுப்பியிருந்தார்கள். ஜானுக்கு இதில் மிகவும் பிரியமாக இருந்தது. ஆனால் அவன்...